Human Body லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Human Body லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 ஜூலை, 2025

முகப்பருக்கள் வருவதற்கான காரணங்கள்!

முகப்பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நம் அன்றாட வாழ்க்கையில் நம்முடைய உடல் நிலை வாழ்க்கை முறை உணவு பழக்கம் போன்றவை நேரடியாக பாதிக்க கூடும். நிறைய காரணங்கள் இருந்தாலும் அதில் சில முக்கியமான காரணங்களை பற்றி பார்ப்போம்! 

உடல்நிலை மற்றும் ஹார்மோன்கள்: 

  • குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அதிக எண்ணெய் உற்பத்திக்கு காரணமாக உள்ளன. 
  • இதனால் முகப்பருக்கள் தோன்றுவதற்கு காரணமாக உள்ளது. 

தவறான சிகிச்சை அல்லது மருந்துகள்: 

சில ஸ்டீராய்டுகள் அல்லது மன அழுத்தம் குறைக்கும் மருந்துகள் அல்லது பிற ஹார்மோன் சார்ந்த மருந்துகளை சாப்பிடும் பொழுது முகப்பரு ஏற்பட காரணமாக உள்ளது.

தவறான உணவு பழக்கங்கள்: 

  • சாதாரண புரதம் குறைந்த உணவுகள் என்னை பொருட்கள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள பொருட்கள் உடலை பாதிக்கும். 
  • மில்க் மற்றும் டைரீ சிலர்க்கு தொடர்ந்து முகப்பருக்கள் ஏற்பட காரணமாக உள்ளது.

தோல் பராமரிப்பு பழக்கங்கள்: 

  • நீங்க முகத்தில் உள்ள தோலை நன்கு கழுவதால் முகத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் வித்துக்கள் போய்விடுகின்றன. இதற்கு எதிர்வினையாக நம் முகத்தில் பருக்கள் உருவாகின்றன.
  • தேவையில்லாத கிரீம்களை முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் அதிக அளவு பருக்கள் ஏற்படுகின்றன.


உணவுகள்: 

  • கொழுப்பு மற்றும் என்னை நிறைந்த உணவுகளான ஐஸ்கிரீம் சாக்லேட் பீட்சா பர்கர் போன்றவைகள் முகப்பருக்கள் ஏற்பட காரணமாக உள்ளது. 
  • செரிமான பிரச்சனை காரணமாக உடலில் மலத்தை வெளியேற்றாமல் இருப்பதன் மூலம் முகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பராமரிப்புகள்: 

  • சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் பொழுது எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக செயல்படும் இதனால் தூசி மற்றும் பாக்டீரியா சேர்ந்து முகத்தின் பருக்கள் உருவாவதற்கு காரணமாக உள்ளது.
  • நீங்கள் வேதிப்பொருட்கள் அடங்கிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு சரும பிரச்சனை ஏற்படுகிறது. தினமும் நீங்கள் உங்கள் முகத்தினை சுத்தமாக கழுவ வேண்டும் அப்படி இல்லையென்றால் இதன் காரணமாக துளைகள் ஏற்பட்டது பருக்கள் உருவாவதற்கு காரணமாக உள்ளது.
  • நீங்கள் இயற்கையான முறையில் பருக்களை கட்டுப்படுத்த நினைத்தால் சந்தனம் வேம்பு மஞ்சள் போன்றவை உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலமாக உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும் நீங்கள் அதிக நார்ச்சத்துள்ள பொருட்களை சாப்பிடுவதன் மூலம் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

உடலின் ஹார்மோன் மாற்றம்: 

உங்களுக்கு மாதவிடாய் சுழற்சி கர்ப்பம் வயது பருவம் தாய்ப்பால் முடித்த பிறகு உடலின் ஹார்மோன் மாற்றம் நடந்து இதன் மூலமும் முகப்பரு வர காரணம் இருக்கிறது. 

அதிக எண்ணெய் சுரத்தல்: 

நமது உடலில் உள்ள சுரப்பிகளில் என்னை அதிகம் உற்பத்தியாகும் போது தோல் துளைகள் அடைந்து முகப்பரு ஏற்படுகிறது. 

உணவு பழக்கம்: 

அதிகளவு என்னை பொருள் பாலை அடிப்படையாகக் கொண்ட உணவு பொருள்கள் இனிப்பு வகைகள் சாப்பிடுவதன் மூலம் முகப்பரு ஏற்படுகிறது. 

தூக்கக் குறைவு: 

நீங்கள் குறைந்த நேரம் தூங்குவதன் மூலம் மற்றும் உங்களுக்கு மன அழுத்தம் காரணமாக ஹார்மோன் பாதிப்பு ஏற்பட்டு உங்களுக்கு முகப்பரு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

தவறான அழகு சாதன பொருட்கள்:

நீங்கள் தகுதியற்ற கிரீம்ஸ் பவுடர்கள் மேக்கப் சேர்ந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் முகப்பரு ஏற்படுகிறது.

மரபியல்: 

நீங்கள் உங்களுடைய குடும்பத்தில் இந்தப் பிரச்சனை இருந்தால் உங்களுக்கு அதை தொடர்ந்து மரபியல் காரணமாக முகப்பரு ஏற்படுகிறது. 

உடல் சுத்தம் இல்லாமல் இருத்தல்: 

உங்களுடைய முகம் சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால் ஏற்படும்.

மருந்துகளின் பக்க விளைவு: 

குறிப்பாக ஹார்மோன் மருந்துகள் டெரரிகள் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் பக்க விளைவு ஏற்படுகிறது.

மன அழுத்தம் மற்றும் போதுமான தூக்கமின்மை:

  • மன அழுத்தம் நம் ஹார்மோன்களை பாதித்து நமது தோளினை பாதிப்பதற்கு காரணமாக உள்ளது.
  • தூக்கமின்மை ஆனது தோலில் உள்ள சிரான மறுசுழற்சி செயல்களை குறைக்கின்றன.
  • நீங்கள் இயற்கை உணவுகள் மற்றும் சித்த மருத்துவத்தை பயன்படுத்தி உங்கள் முகத்தில் உள்ள தோலினை சரியாக பராமரித்து வரலாம்!

உடல் சோர்வு அதிகமாக ஏற்படுகிறதா? விளக்கம் | Are you experiencing excessive fatigue? Explanation

உடல் சோர்வு அதிகமாக ஏற்படுகிறதா? விளக்கம் 

பொதுவாக உடல் சோர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் உடல் நல கோளாறுகள் முதல் வாழ்க்கை முறையில் தாக்கங்கள் வரை. உடல் சோர்வு என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். 

முக்கிய காரணங்கள்:

தூக்கமின்மை: 

நீங்கள் தினமும் வேலையை செய்து வருகின்றீர்கள் அப்பொழுது போதுமான நேரம் நீங்கள் தூங்காமல் இருந்தால் உங்களின் உடல் மற்றும் மனம் ஓய்வெடுக்காமல் இருக்கும் இதன் மூலம் நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். 

அதிக உழைப்பு: 

உடல் அல்லது மனரீதியாக நீங்கள் அதிக அளவு உங்கள் உடல் சக்தியை கொடுத்து உங்களின் வேலையை செய்வதன் மூலமும் உங்களின் உடலில் சக்தியை குறைவாகிறது இதன் மூலமாக உங்கள் உடல் சோர்வு ஏற்படுகிறது. 

மன அழுத்தம்: 

உங்களுக்கு பதட்டம் கவலை மனச்சோர்வு போன்றவைகள் உங்கள் உடலை சோர்வுக்கு எடுத்துச் செல்கிறது. 

தவறான உணவு: 

ஜங்க் உணவுகள் மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாத தேவையற்ற உணவுகளை நீங்கள் சாப்பிடும் போது உங்களுடன் சோர்வடைய செய்கிறது. 

நீர் சத்து குறைபாடு: 

நீங்கள் தினமும் உங்களுக்கு தேவையான போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உங்களின் உடலில் உள்ள செல்கள் சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் உங்கள் உடலை சோர்வடையச் செய்கிறது. 

ரத்தசோகை: 

உங்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் குறைவால் உங்கள் உடலில் உள்ள திசைகளுக்கு ஆக்சிஜன் போதிய அளவில் செல்லாமல் உங்கள் உடல் சோர்வடைகிறது. 

தைராய்டு கோளாறு: 

உங்கள் உடலில் உள்ள சில சுரப்பிகள் கோளாறு காரணமாக வளர்ச்சிதை மாற்றம் மெதுவாகி உங்கள் உடலை சோர்வடைய தூண்டுகிறது. 

நாள்பட்ட நோய்கள்: 

நீரிழி உயர் ரத்த அழுத்தம் சிறுநீரக பிரச்சினைகள் போன்றவை உங்களது உடலை தொடர்ந்து சோர்வடையச் செய்ய காரணமாக உள்ளது. 

மருந்துகள்: 

சில மருந்துகள் மாத்திரைகள் மன அழுத்தம் மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் உங்களை சோர்வடையச் செய்கிறது.

தொற்று நோய்கள்:

டைபாய்டு டெங்கு வைரஸ் போன்றவை உங்களின் உடலை சோர்வு அடை செய்வது. 

உங்கள் உடலுக்கு தேவையான புரதம் குறைவாக இருந்தால் தசைகள் பலவீனம் அடைந்து உடல் சோர்வை அதிகரிக்கிறது ‌

சோர்வை உணரும் அறிகுறிகள்:

  • உடல் பகுதிகளை அசைக்கும் போது சிரமம் ஏற்படும். 
  • கண்கள் சுழற்சி மற்றும் அதிகளவு தூக்கம் வருதல்.
  • அதிக அளவு தலைவலித்தல். 
  • மன நெகிழ்ச்சி அடைதல். 
  • உங்களின் உணர்வுகளும் குறைதல். 
  • உடல் பலம் குறைதல். 
  • வாகனங்கள் ஓட்டும்போது கவனக்குறைவு ஏற்படுதல்.

சில தீர்வுகள்: 

  • நீங்கள் போதுமான அளவு தினமும் தூங்க வேண்டும். 
  • ஆரோக்கியமான உணவுகளை உங்களின் உடலுக்கு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். 
  • நீங்கள் காலையிலும் மாலையிலும் தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 
  • யோகா மற்றும் தியானம் கொண்ட மன அழுத்தம் குறைக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும் ‌
  • நீங்கள் உங்கள் உடலுக்கு தேவையான போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 
  • நீங்கள் உடலுக்கு தேவையான அதிக அளவு சத்துள்ள பொருட்களை சாப்பிட வேண்டும். 
  • நீங்கள் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் பருப்பு வகைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். 
  • நீங்கள் அதிக அளவு நடை பயிற்சி செய்தவுடன் இயற்கை காட்சி அதிக அளவு சுவாசிக்க வேண்டும் தினமும் சூரிய ஒளியில் சிறிது நேரம் ஆவது அமர வேண்டும்.

மருத்துவர் அணுக வேண்டிய நேரம்: 

  • நீங்கள் தினமும் உங்களுக்கு தேவையான தூக்கம் மற்றும் ஓய்வில் எடுத்தும் உங்களுக்கு குறையாமல் உடல் சோர்வு அதிகமாக இருந்தால் நீங்கள் உங்கள் மருத்துவரையே அணுகலாம். 
  • உங்களுக்கு அதிக அளவு உடல் வலி மூச்சு திணறல் மற்றும் தூக்கமில்லை என்றால் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் சொல்லலாம்.
  • நீங்கள் சத்து குறைபாடுகள் இருந்தால் அதை போய் உங்கள் மருத்துவரிடம் அணுக வேண்டும்.

சோர்வை குறைக்கும் சில பானங்கள்: 

  • வாழைப்பூ மில்க் ஷேக் இது உங்கள் உடலுக்கு அதிசயத்தை அளிக்கிறது. 
  • மூலிகை டீ இஞ்சி கிரீன் டீ போன்ற பானங்கள் உங்கள் உடலுக்கு அதிக அளவு புத்துணர்ச்சி அளிக்கிறது. 
  • மாதுளை மட்டும் தர்ப்பூசணி ஜூஸ் பண்றது உடலை இறப்பதும் மேம்படுத்தி உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது. 
  • இளநீர் பெறுவதால் இயற்கையாகவே உங்களுடன் உடலுக்கு அதிக அளவு புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறது.

வியாழன், 8 மே, 2025

குடிப்பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துகள் | Dangerous of drinking Alcohols

மனிதர்களிடம் காணப்படும் இயல்பான வாழ்வியல் ஆற்றல்களைச் சீரழிக்கும் திறன் கொண்ட செயல்பாடே எதிர்வினை ஆகும். போதைப்பழக்கம், குடிப்பழக்கம் ஆகியவை இத்தகைய எதிர்வினைகளே. 

இவை பல தவறான விளைவுகளை உருவாக்கி வாழ்வியல் ஆற்றல்களையும், நல்வாழ்வையும் சீரழித்து அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கின்றன. 

இதற்கான எதிர்ப்பாற்றலை இளமைப்பருவத்திலேயே வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. இதற்கான விழிப்புணர்வுச் சிந்தனைகளை அறிந்துகொள்வோம்.

  1. இந்தியாவில் போதை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சுமார் 40 கோடி பேர். இதில் 53% இளம் வயதினர்.
  2. போதையால் 25% விபத்துகள் நடக்கின்றன.
  3.  34% தற்கொலைகள் போதையால் அரங்கேறுகின்றன.
  4. 11 வயது முதலே மாணாக்கர் போதைப் பொருள்களுக்கு அறிமுகமாகின்றார்கள்.
  5. ஒவ்வொரு வருடமும் 18 முதல் 24 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களில் 1825 பேர், மதுவோடு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளால் இறந்து போகின்றனர்.
  6. 18 வயது முதல் 24 வயதிற்குட்பட்ட மாணாக்கர்களில் 6,90,000 பேர், போதைக்கு உட்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
  7. 5,99,000 மாணாக்கர்கள் மதுவின் தாக்கத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளால், தற்செயலாக ஏற்படுகிற காயங்களுக்கு உள்ளாகின்றனர். இவர்களும் 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்.
  8. 25% மாணாக்கர்கள் தங்களது குடியின் காரணமாக வகுப்புகளுக்குச் செல்லாமை, கல்வியில் பின்னுக்குத் தள்ளப்படுதல், தேர்வுகளில் தோல்வி மற்றும் ஒட்டுமொத்தத்தில் கல்வியில் கீழ் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.

உடல்ரீதியான பாதிப்புக்கள்

  • மூளையிலுள்ள உயிரணுக்கள் மதுவினால் மழுங்கடிக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன.
  •  மூளை பாதிக்கப்படுவதால் அதனோடு தொடர்புடைய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுகின்றது.
  • பசியின்மை, தூக்கமின்மை, நரம்புத்தளர்ச்சி, தசைநோய்கள் உருவாகின்றன.
  • கல்லீரல்வீக்கம், கணையத்தில் வீக்கம், வயிற்றுக் கோளாறுகள், சுவாசப் பிரச்சினைகளும் உருவாகின்றன.
  • மஞ்சள்காமாலை, சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு ஆகியவை உருவாகின்றன.
  • எடை குறைவு, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவை ஏற்படுகின்றன.
  • ஆண்மையிழப்பு, இதயக்கோளாறுகள், புற்றுநோய். கருவுறுதலில் கோளாறு, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலுள்ள சிசுவுக்கு உடல் கேடுகள் அதிகமாக ஏற்படுகின்றன.

மனரீதியான பாதிப்புகள் :

  • பயம், பதற்றம்,
  • ஞாபக மறதி, சந்தேகம், அந்நியமாதல்
  • 1,50,000 மாணாக்கர் மது சார்ந்த நோய்களுக்குத் தள்ளப்படுகின்றனர்.
  • தனிமைப்படுதல், மனச்சோர்வு, சலிப்பு
  •  குற்ற உணர்வு, பிறழ் நம்பிக்கை (Delusion)
  • உடல் நடுக்கப்பிரம்மை (Delirium tremens)
  • விரக்தி,அச்சுறுத்தும் கனவுகள் (Nightmares)
  • புலன்களின் பேதலிப்பு (Hallucinations)
  • கோபம், மன அழுத்தம், மனக்குழப்பம்

பொருளாதாரப் பாதிப்புகள்

  1. வேலையிழப்பு, வேலை செய்ய இயலாமை
  2. நிலம், வீடு போன்றவற்றை விற்றல், அடகு வைத்தல்
  3. கடன் வாங்குதல், பொருள்களை உடைத்தல், எரித்தல்
  4. அடிப்படை வசதிகள் இன்மை, வறுமை
  5. பணத்தை விரயம் செய்தல்

குடும்பப் பாதிப்புகள் :

  • சண்டை போடுதல், அடித்தல், குடும்ப வன்முறைகள்.
  • குடும்ப உறவுகள் முறிதல்.
  • தனிநபர் தற்கொலை.
  • குடும்பமாகத் தற்கொலை.
  • பிள்ளைகள் அநாதைகளாதல்.
  • மனைவி விதவையாதல்.
  • பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுதல்.
  • குடும்பத்தினரின் உடல்நலம் பாதிக்கப்படுதல்.
  • பிரிந்து வாழ்தல்.
  • விவாகரத்து பெறுதல், அவமானப்படுதல்.
  • சகநோயாளியாதல் (Co-dependents)
  • திறமைகள் பாழ்படுதல்.
  • உயிர்க்கொல்லி நோய்கள்.
  • தவறான உறவுகளால் பால்வினை நோய்களுக்கு உட்படுதல்.
  • குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறுதல்.
  • போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல்

சமூகப் பாதிப்புகள் : 

  • திருட்டு, கொள்ளை வழக்குகள்
  • விபத்து, கொலை, தற்கொலை
  • அடிதடி, குழப்பம், கலவரம்
  • பொதுச்சொத்துக்களுக்குச் சேதம்
  • பாலியல் வன்முறைகள்
  • பொதுமக்களின் அச்சம்
  • நாட்டின் வருவாய் இழப்பு
  • திறமைகள் வீணடிப்பு
  • அலுவலக வேலைகள் முடக்கம்
குடிப்பழக்கம் ஆனது உங்களுடைய உடல் தனத்திற்கும் மன நலத்திற்கும் பலவிதமான தீமைகளை ஏற்படுத்தி வருகிறது. நீங்க இதனை தவிர்ப்பது நல்லது. 

மூளை மற்றும் மனநிலை பாதிப்பு: 

அறிவாற்றல் குறைதல்: 
  • நீங்கள் தொடர்ந்து மதுவினை குடிப்பதன் மூலமாக மூளை ஆனது நினைவாற்றல் மற்றும் அதனுடைய சிந்தனை திறன் குறைந்து விடுகிறது. 
  • இது உங்களின் மூளையையும் பெருமளவு பாதிக்கிறது. 
மன அழுத்தம் மற்றும் பதட்டம்: 
  • உங்களுக்கு ஆரம்ப காலங்களில் மதுவினை குறைக்கும் பொழுது அதிக அளவு அது போதையை தந்து உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் அது உங்களுக்கு பின்னர் உடல் நல பாதிப்புகள் மற்றும் உங்களுக்கு மனச்சோர்வையும் ஏற்படுத்திவிடுகிறது. 
தூக்க கோளாறுகள்: 
  • நீங்கள் தொடர்ந்து குடிப்பதன் மூலமாக உங்களின் தூக்கத்தில் தரமும் குறைந்து விடுகிறது.
  • தூங்கும் பொழுதும் நீங்கள் ஏதாவது ஒன்று உளறிக் கொண்டே இருப்பீர்கள் 
  • உங்களுக்கு குறட்டை மட்டும் மூச்சுத் திணறல் அதிக அளவு ஏற்படுகிறது. 
  • எனவே நீங்கள் குடி பழக்கத்திலிருந்து வெளிவர வேண்டும்.ஏனென்றால் மேற்கண்ட அனைத்தும் உண்மை குடிப்பழக்கம் ஆனது உங்களுக்கு அதிக அளவு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது  உங்களை சுற்றியுள்ள நபர்கள் அனைவரையும் துன்புறுத்தக் கூடிய தொல்ல தரக்கூடிய ஒரு நபராக நீங்கள் கருதப்படுவீர்கள்.எனவே குடிப்பதற்கு நீங்கள் வெளிவர வேண்டும்.

குடிநோய் பற்றிய தெளிவான விளக்கம் | Explanation of addiction Alcohols

குடிநோய் என்பது ஒருவர் அடிக்கடி மதுவை கட்டுப்பாடு இன்றி அருந்தும் பழக்கத்தால் உருவாகும் ஒரு மனநல கோளாறு ஆகும் இது மனிதனின் உடல் மனம் மற்றும் அவர்களின் குடும்பம் சமூக வாழ்க்கையை அதிகமாக பாதிக்கிறது. இந்த குடிப்பழக்கத்தால் அதிகளவு கல்லீரல் பாதிக்கப்படுகிறது. கல்லீரல் என்பத மனித உடலின் ஒரு முக்கியமாக செயல்படக்கூடிய ஒரு உறுப்பாகும்.

எப்படி கண்டறிவது? 

குடிநோய் பிடித்தவர்கள் அவர்களை எவ்வளவு அடக்கினாலும் அவர் திரும்பத் திரும்ப குடிப்பதற்கு சென்று கொண்டே இருப்பார்.குடிநோய் மாணவர்கள் அவரின் சுய நிலை இயந்து கட்டுப்பாடு இன்றி தொடர்ந்து குடித்துக் கொண்டே இருப்பார். இவர்கள் பெரும்பாலும் குடியை நிறுத்தும் போது உடல் மற்றும் மன விலகல் அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் கொண்டு நாம் கண்டறியலாம்.

இவர்கள் பெரும்பாலும் அதிக அளவு குடித்தால் மட்டுமே அவர்களுக்கு போதை ஏறும்.இப்படிப்பட்டவர்கள் அதிக அளவு குடி நோய்க்கு அடிமையானவர்கள். 
அவர் குடித்த பிறகு அவருக்கு ஒருபிரச்சனைக்கு சென்றால் அவரை நாம் கட்டுப்படுத்த முடியாத நிலை நமக்கு ஏற்படும். 

குடிநோய் எப்படி ஒருவனுக்குள் தோன்றுகிறது? 
ஆரம்ப நிலையில் முதலில் அவர்கள் நண்பர்களிடம் செல்லும் பொழுதுஅவர்கள் அழுத்தம் கொடுத்தால் அவர்கள் அதற்கு சிறிதளவு ஆர்வம் காட்டி இது தவறல்ல என்று சிறிதளவு குடிப்பது இதுவே ஆரம்ப நிலை ஆகும். 

பிறகு ஒருவனுக்கு அதிக அளவு தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படும் போது அவர் தவறான பயன்பாடு மேற்கொண்டு குடிப்பழக்கத்திற்கு ஆளாகின்றார். 

ஒருவனுக்கு உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக வலி ஏற்படும் போது அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதற்காக குடிப்பழக்கத்திற்கு செல்கின்றனர். 

ஒருவன் சிறிது சிறிதாக குடித்து பிறகு அவனின் கட்டுப்பாட்டை இழந்து தீவிர குடி பழக்கத்திற்கு ஆளாகி குடி நோய்க்கு அடிமையாகிறான். 

அதிகமாக மதுவினை குடிக்கும் பொழுது நமது உடல் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டு நமது உயிருக்கும் அதிக அளவு பாதிப்பினை ஏற்படுகிறது.எனவே அனைவரும் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் இல்லை என்றால் அவரின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

1.குடிநோய் ஒரு நிரந்தரமான நோய்

ஒருவர் குடிநோயாளி ஆனபிறகு இதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஒருவர் குடிநோயாளி ஆனபிறகு வாழ்நாள் முழுவதும் குடிநோயாளியே என்பது அதிர்ச்சிகர உண்மை.

மது மூளையில் THIQ∙-என்ற இரசாயன மாற்றத்தை உருவாக்கி, அந்த இரசாயனப் பொருள் மூளையில் நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்தக் காரணமாகின்றது.

2. குடிநோய் ஒரு வளரும் நோய்

இது ஆரம்பக்கட்டம். நடுக்கட்டம், இறுதிக்கட்டம் என்ற நிலைகளில் வளரும் நோய்.

ஆரம்ப நிலை

ஆரம்பக்கட்டத்தில் மறதிநிலை, ஒளிந்திருந்து குடித்தல், மதுவை 'மடக் மடக்' என வேகமாகக் குடித்தல், மீண்டும் மீண்டும் மறதிநிலை மற்றும் பகலிலும் குடித்தல் போன்றவை அறிகுறிகள்.

நடுநிலை

நடுக்கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து அதிகமாகக் குடித்தல், தனிமையில் குடித்தல், வன்முறைகளில் ஈடுபடுதல், தாழ்வுமனப்பான்மை கொள்ளுதல், வேலை இழப்பு, ப்பு, மது அருந்தும் பாணியை மாற்றுதல், சிறிதுகாலம் குடிக்காமலிருத்தல் போன்றவை அறிகுறிகள்.

இறுதிநிலை

இறுதிக்கட்டத்தில் விட்டு விட்டுக் குடித்தல், ஒழுக்கம் தவறுதல், வீண் சந்தேகம், மனப்பிரமைகள் தொற்றுதல்,உடல் உறுப்புகள் கட்டுப்பாட்டை இழத்தல் போன்றவை அறிகுறிகள்,

இன்னும் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருந்தாலோ, மருத்துவச் சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தாலோ, அவர் மனநோயாளி ஆகலாம் அல்லது மரணமடையலாம்.

3. குடிநோயைக் குணப்படுத்த முடியாது 

குடிநோயைக் குணப்படுத்த மருந்துக்கள் இல்லை. ஆனால், இதனைக் கட்டுப்படுத்தலாம். எவ்வாறு சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாதோ, இதுவும் அதேபோல்தான். ஆனால், குடியை நிறுத்தி மதுவற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.

4. இது யாரையும் விட்டு வைக்காத நோய்

இது பரவலாகக் காணப்படும் நோய் என்று சொல்லலாம். ஏனென்றால் இது ஆண் - பெண், இனம், மொழி, உயர்ந்தோர் -தாழ்ந்தோர், படித்தோர் - படிக்காதோர், சிறியோர் - பெரியோர். இளையோர் - மூத்தோர், ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி, குடிப்பவர்களை ஆட்கொள்ளும் நோய்.

குடிப்பவர்களில் 10 - 20 சதவீதத்தினர் குடிநோயாளிகளாகி விடுகின்றனர். ஆகையால் குடிப்பவர்கள் யாருமே, தான் ஒரு குடிநோயாளி ஆகப்போவதில்லை என அறுதியிட்டுச் சொல்ல முடியாது.


குடிநோய் குணப்படுத்த இயற்கை வழிமுறைகள் | Treatment of Alcoholic addicts

குடிநோய்க்கான மருத்துவ சிகிச்சை:

இக்குடிநோய் நிரந்தரமானது, குணப்படுத்த முடியாதது. ஆனால், கட்டுப்படுத்த இயலும், இதற்கு சிகிச்சை இருக்கின்றது. மறுத்தல் என்ற தன்மை குடிநோயாளியிடம் இருப்பதால், அவர் சிகிச்சைக்கு வர மறுப்பார்.

குடிநோயாளியை சிகிச்சைக்குக் கொண்டு வருவது எப்படி?

குடிநோயாளியை ஒரு 'நோயாளி'யாகப் பார்க்க வேண்டும்.

குடிநோயாளியை அவரது நண்பரோ, குடும்பத்தினரோ, உறவினரோ, அக்கறையுள்ளவரோ, குறிப்பாகக் குடியை நிறுத்தியவரோ அவரிடம் பேசிச் சிகிச்சைக்குச் சம்மதிக்க வைக்கலாம்.

அவர் குடிக்காமல் நிதானமாக இருக்கும்போது, சிகிச்சை பற்றி இதமாகக் கூறவேண்டும். நாம் அவர் மீது அன்பும், அக்கறையும் கொண்டிருக்கிறோம் என்பதை உணரும் வகையிலும், அவர் ஒரு நோயாளி என்ற உணர்விலும் பேசிச் சம்மதிக்க வைக்க வேண்டும்.

அவர் ஒரு நல்ல மனிதர் என்ற மதிப்போடும், மாண்போடும் அவரை அணுகவேண்டும். அவரை மிரட்டுவதோ, மட்டம் தட்டுவதோ கூடாது. அவரது சிகிச்சைக்கு முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்த பிறகே அவரைச் சிகிச்சைக்கு அழைக்க வேண்டும். அவர் திடீரென சிகிச்சைக்கு ஒத்துக்கொள்ளக் கூடும்.

அவரைச் சிகிச்சைக்குச் சம்மதிக்க வைக்கும் முயற்சி, கூட்டு முயற்சியாக இருப்பின் நல்ல பலன் கிட்டும்.

சிகிச்சைக்குப் பின் செய்ய வேண்டியவை

சிகிச்சைக்குப் பின் தொடர் பராமரிப்பு அவசியம்.

இதில் உடல் நோய்களுக்கான சிகிச்சை, மன நலத்திற்கான சிகிச்சை, மனவளப் பயிற்சிகள், ஆற்றுப்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பராமரிப்பு தேவை.

பாதிப்பைப் பொறுத்துச் சிலருக்கு நீண்டநாள் சிகிச்சை தேவைப்படும்.

குடிநோயாளி ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (Alcoholics Anonymous) என்ற 'குடியை தவிர்த்து வாழ விரும்புவோரின்' தோழமைக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். அது கற்பிக்கும் 12 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அவருடைய குடும்பத்தினரில் மனைவி ஆல்-அனான் (AI-Anon) கூட்டத்திலும், குழந்தைகள் அலட்டீன் (Alateen) கூட்டத்திலும் பங்கேற்று மகிழ்ச்சியான, பயனுள்ள வாழ்க்கை வாழலாம்.

குடும்பத்திலும், அவர் வாழும் இடத்திலும் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை இருக்க வேண்டும். ஏனென்றால் குடிநோயாளி சிகிச்சை மையத்தில் 20 சதவீதம் நலம் மட்டுமே பெறுகிறார். 80 சதவீத நலனை அவர் குடும்பத்திலும், தான் வாழும் சூழ்நிலையிலும் பெறுகிறார்.

ஒருவேளை குடிநோயாளி சிகிச்சைக்குப் பின்பும் மறுவீழ்ச்சி (மீண்டும் குடித்தல்) அடைந்தாலும் அவரை வெறுக்காமல், அன்போடு மீண்டும் சிகிச்சைக்கோ. ஆல் அனான், அலட்டீன் கூட்டங்களுக்கோ அழைத்துச்செல்ல வேண்டும். அவ்வாறு செய்யும்போது குடிநோயாளி குடியற்ற, மகிழ்ச்சியான, பயனுள்ள வாழ்க்கையை மீண்டும் வாழலாம்.

குடிநீர் குணப்படுத்த இயற்கை வழிமுறைகள் குழி நோய் என்பது உடல் மட்டுமே மனம் சார்ந்த ஒரு அடிமைத்தனம் ஒரு நிலையாகும். இதனை நாம் இயற்கை வழி முறையில் குணப்படுத்த சிலருக்கு மட்டும் பயனளிக்க கூடும். எனவே நாம் இயற்கை வழி முறையிலும் குடி போதனை சதி செய்யலாம். 

சில இயற்கை வழிமுறைகள்: 

  • திராட்சை பழம் மற்றும் அதன் சாரினை சாப்பிடுவதன் மூலம் மதுவுக்கான ஆசையை குறைக்கின்றன.தினமும் திராட்சை சாரை குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
  • துளசி இலையினை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் நமது உடலின் நச்சுக்களை வெளியேற்றுகின்றன.இதனை நாம் அப்படியே வாயில் என்றும் சாப்பிடலாம். 
  • பாகற்காய் இலை சாறை குடிப்பதன் மூலம் கல்லீரல் சுத்திகரிக்க உதவும் இதனை நாம் மோருடனும் கலந்து குடிக்கலாம். 
  • இஞ்சி எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மதுவுக்கான ஆசையை குறைக்கிறது.மேலும் தினமும் சிறிதளவு இதனை உட்கொள்ள வேண்டும். 
  • கேரட் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்ற பழச்சாறு குடிப்பதன் மூலம் உடலினை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.இது மதுவுக்கான ஆசையை நமது எண்ணத்தில் இருந்து மாற்றுகிறது. 
  • பேரிச்சம்பழம் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் சுத்திகரிக்க உதவுகிறது.இதனை நாம் தினசரி சாப்பிடலாம். 
  • வல்லாரைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் நரம்புத்திறன் மேம்படுகிறது. 
  • வேம்பு இலை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. 
  • நெல்லிக்காய் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் வைட்டமின் சி அதிகரிக்கிறது இது கல்லீரல் நோய்களை கற்றுக்கொள் வைத்துக்கொள்ள உதவுகிறது.

உடற்பயிற்சிகள்:

  • நாம் தினமும் தவறாமல் நடந்து கொண்டே நடை பயிற்சி செய்தால் நமது உடலில் கொழுப்புகள் குறைகின்றன மற்றும் இது கல்லீரலுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. 
  • நாம் யோகா செய்வதன் மூலம் கல்லீரல் மேம்பாட்டுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. 
  • தியானம் செய்வதன் மூலம் நமது உடலில் மன அழுத்தம் குறைந்து ஆர்மோன்கள் ஒழுங்காக செயல்படும் உதவுகிறது.

புதன், 7 மே, 2025

நோய் வராமல் இருக்க சத்துணவு சாப்பிடுங்கள்! Types of foods and nutrients

உடலுக்குத் தேவையான சத்துணவு

தற்காலத்தில் மனிதரின் உணவு முறைகள் வெகுவாக மாறிவிட்டன. 'ஃபாஸ்ட் ஃபுட், பீட்சா, பர்கர்' என்றெல்லாம் உணவு வகைகள் மாறிவிட்டன. இவ்வுணவு உண்பதற்குச் சுவையாக இருக்கலாம். ஆனால், உடல் வலிமைபெற இவ்வுணவு வகைகள் உதவாது. 

உணவுகளின் வகைகள் மற்றும் சத்துகள் :

நாம் உண்ணும் சுத்தமான உணவுப் பொருள்கள் வழியாகவே சத்துகள் உடலில் சேர்கின்றன.

  • ஈரல், இறைச்சி, கீரை வகைகள், காரட், அவரை நம் உடலுக்கான இரும்புச் சத்தை வழங்குகின்றன.
  • பால், பருப்பு, பயறு, முட்டை, அவரை ஆகியவை புரதச் சந்தைத் தருகின்றன.
  • மீன் வகைகள், கீரை வகைகள், பால் முதலியவை கால்சியம் சத்தைத் தருகின்றன.) x
  • அயோடின் சத்து அடங்கியுள்ள உணவு வகைகள், அயோடின் கலந்த உப்பு, கடல் உப்பு ஆகியவை அயோடின் சத்தைத் தருகின்றன.
  • முட்டை, இறைச்சி, பால், வெள்ளைப்பூண்டு ஆகியவை பாஸ்பரஸ் சத்தைத் தருகின்றன.
  • உப்பு, முட்டை, இறைச்சி, பால் ஆகியவை சோடியம் சத்தைத் தருகின்றன.
  • இவை தவிர, முட்டையின் மஞ்சள் கரு, பச்சைக்கீரை, வெண்ணெய், மஞ்சள் நிறப்பழங்கள், வாழைப்பழம், தவிடு நீக்கா அரிசி, கடலை, நெல்லிக்காய், பப்பாளி, எலுமிச்சைப்பழம், வெண்டைக்காய்,கொய்யா, மீன் எண்ணெய், நல்லெண்ணெய், முளைவிடும் தானியங்கள் ஆகியவற்றில் பல்வேறு வைட்டமின் சத்துகள் நிரம்பியுள்ளன.

இதுபோன்ற சத்துள்ள உணவு வகைகளையும், உணவுப் பழக்கங்களையும் நாம் கையாளும்போது, நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தங்கு தடையின்றிக் கிடைக்கின்றன.

அற்றால் அளவறிந்து உண்க அஃது உடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.  (குறள். 943)

என்று தெய்வத்திருமறை எடுத்தியம்புகிறது.

நாம் முன்பு உண்ட உணவு செரித்தபிறகு. செரிக்கும் அளவை அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்பது நீண்டநாள் வாழ வழிவகுக்கும் என்பதே இக்குறள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் ஆகும்.

நாம் உண்ணும் உணவும், எண்ணும் எண்ணங்களும் நலம் பயப்பவை என்றால், நிச்சயம் நாமும் வாழ்வோம்! நம் சந்ததியும் வளம்பெறும்! நோய் வராமல் இருக்க உதவும் மிகவும் சத்துகள் நிறைந்த உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்கள் மற்றும் பிற நோய்கள் வராமல் தடுக்க முக்கிய பங்கு வகித்து வருகின்றன. 

தினசரி நான் உணவில் சத்தான உணவை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நமது உடல் அதிக அளவில் சத்துகள் நிறைந்த மற்றும் ஆரோக்கியமான உடலாக இருக்கிறது. சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நாம் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு மேம்படுத்தி மருத்துவமனைக்கு செல்லும் தேவையை குறைத்து வருகிறது. 

தினசரி நாம் உணவில் பலவகை பழங்கள் காய்கறிகள் அதிக அளவில் சேர்த்து சாப்பிட வேண்டும் மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.நீங்கள் தினசரி போதிய தூக்கம் மற்றும் உடற்பயிற்சி மன அமைதியை நீங்கள் தினமும் மேற்கொள்ள வேண்டும். 

நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில உணவுகள்: 

சர்க்கரைவள்ளி கிழங்கு: 

  • சர்க்கரை வெள்ளி கிழங்கில் அதிக அளவு டேட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகரிவில் உள்ளதால் நமது உடலுக்கு மிகவும் வலிமை அளிக்கிறது
  • மேலும் இது நீடித்த ஆற்றல் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது. 

கிரீன் டீ: 

  • இதில் அதிக ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள் உள்ளது
  • மேலும் மன அமைதி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு இது மிகவும் உதவியாக உள்ளது. 

பாதாம்: 

  • பாதாமின் அதிக அளவு வைட்டமின் A மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் உள்ளது 
  • மேலும் நமது உடலில் உள்ள செல்களை பாதுகாக்கின்றன 
  •  நமது உடலுக்கு அதிக அளவு ஆற்றலை தருகிறது. 

தயிர்: 

  • இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது 
  • மேலும் நமது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது 
  • இதில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உயிரணுக்கள் அதிகளவில் உள்ளது. 

இஞ்சி: 

  • இதில் பயிற்சி எதிர்ப்பு மற்றும் செரிமானத்தை மேம்படுத்து உதவுகிறது 
  • சளி மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு முக்கிய தீர்வாக உள்ளது. 

கீரை வகைகள்: 

  • கீரையில் அதிக அளவு சத்துகள் நிறைந்துள்ளது 
  • இது நமது உடலுக்கு இரும்புச்சத்தை அதிக அளவு கொடுத்து வருகிறது 
  •  நீங்கள் கீரை வகையை அதிக அளவு உடலுக்கு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது  நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. 

சிட்ரஸ் பழங்கள்:

  • ஆரஞ்சு,எலுமிச்சை பழம்  போன்றவற்றில் அதிகளவு சிட்ரஸ் உள்ளது. 
  • வைட்டமின் சி இதில் அதிகம் உள்ளது 
  • இது உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது. 

பச்சைக் காய்கறிகள்: 

  • நாம் பச்சை காய்கறியில் அதிக அளவு வைட்டமினியை சி மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளதால் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. 

பால் பனங்கற்கண்டு: 

  • இதில் அதிக அளவு வைட்டமின் ட மற்றும் கால்சியம் உள்ளது 
  • இது எலும்பு வலுவடைய மிகவும் உதவியாக உள்ளது. 

தண்ணீர் மற்றும் கஞ்சி பானங்கள்: 

  • இதில் நீச்சத்து அதிக அளவு உள்ளது 
  • ஜீரண சக்தியை உடலுக்கு மேம்படுத்தி வருகிறது.

உடற்பயிற்சியும் அதன் நன்மைகளும் | Benefits of Body Exercise

உடற்பயிற்சி மனிதர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய செயல் ஆகும். அது மட்டுமல்ல பல்வேறு நோய்களை தடுப்பதற்கு வராமல் இருப்பதற்கும் உடற்பயிற்சி அவசியமாக இருக்கிறது.

உடற்பயிற்சியை நாம் அனுதினமும் மேற்கொள்வதால் பல்வேறு நன்மைகள் நம் உடலுக்குக் கிடைக்கின்றன.

உடற்பயிற்சியின் நன்மைகள் :

1. இரத்த ஓட்ட மண்டலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்தும், குறை இரத்த அழுத்தத்தை உயர்த்தியும், சராசரி இரத்த அழுத்தத்தை நோக்கி தன்னைத்தானே சரிசெய்துகொள்கிறது.

2. உடலின் சூட்டைத் தணித்து, தேவையான வெப்ப அள ஏற்படுத்தித் தருகிறது.

3. சர்க்கரை நோயால் வரும் உடல் சோர்வு, அதிகப் பசி, தாகம் ஆகியவை மறைந்து விடுகின்றன.

4. இரத்தத்தின் சர்க்கரை அளவை சராசரி நிலைக்குக் (Average Blood Sugar Level) கொண்டு வந்துவிடுகிறது.

5. நமது உடலில் செல்கள் உதிரும் காலம் கூட்டப்பட்டு செல்களின் வாழ்நாள் அதிகரிக்கிறது.

6. முகத்தில் இளமையும் பொலிவும் கூடுகின்றன. முதுமையடைதல் தள்ளிப்போய் விடுகிறது.

7. உடலில் உள்ள எல்லாச் சுரப்பிகளும் உயிர்ச் சக்தியால் நிரப்பப்படுகின்றன. உடலின் நச்சுப்பொருள்கள் (Toxins) நீக்கப்படும் வேகம் அதிகரிக்கிறது.

8. தசைகளில் இருக்கும் பிடிப்புகள் தளர்வடைகின்றன. எலும்புகள் வலுவடைகின்றன.

9. மனச்சோர்விலிருந்து (Depression) மனிதனை குணப்படுத்தும் வேதிப்பொருள்கள் (Anti- Depressive Chemicals) உடலுக்கு அதிகம் சுரக்கின்றன.

உடல், மன ஓய்விற்கு எளிய பயிற்சிகள்:

  • வானம், கடல், மலைகள், மலர்கள், மழை, நிலவு என இயற்கையின் படைப்புகளை வாய்ப்புக் கிடைக்கும்போது இரசிக்க வேண்டும்.
  • நடனம் ஆடுதல், பாடுதல், இசைக் கருவிகள் இசைத்தல். ஓவியம் வரைதல் போன்ற நுண்கலைகளைக் கற்று அவற்றில் மனதை ஈடுபடுத்தலாம்.
  • வீட்டுத் தோட்டம் அமைத்துப் பராமரிக்கலாம்.
  • செல்லப் பிராணிகள் வளர்க்கலாம்.
  • நூலகங்களுக்குச் சென்று வரலாம்.
  • இரவு உறங்குவதற்கு முன்பு கண்களை மூடித் தளர்வாகப் படுத்துக்கொள்ளவும். பாதத்திலிருந்து உச்சந்தலை வரை உடலின் ஒவ்வோர் உறுப்பின் செயல்பாட்டினை நினைத்து அந்த உறுப்பிற்கு நன்றி கூற வேண்டும். உடல் தளர்ந்த நிலையில், ஆழ்ந்த சுவாசத்தில் உடலும்,மனமும் ஓய்வு பெற்று இடையூறு அற்ற நல்ல தூக்கம் அமையும்.

செய்முறைப் பயிற்சிகள்

  • தினமும் காலையில் எழுந்தவுடன் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வது.
  • முன்தூங்கி முன்எழும் பழக்கத்தை உருவாக்குவது.
  • உடல் வளர்ச்சியைப் பாதிக்கும் 'பாஸ்ட் புட்' ( Fastfood) உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது.
மன நல நன்மைகள்: 
  • மன அழுத்தம் பதட்டம் குறைந்து மனம் தெளிவாக இருக்கும் மற்றும் பணம் மிகவும் அமைதியாக இருக்கும். 
  • நினைவாற்றல் மற்றம் சிந்தனை திறன் இது மூளையின் செயல்பாடு மேம்படுத்துகிறது.
  • மேலும் புதிய தகவல்களை கற்றுக் கொள்ளும் திறனும் நமக்கு அதிகரிக்கிறது. 
  • நமக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சி அடைவதால் நமக்கு அதிக அளவு தன்னம்பிக்கை கொடுக்கிறது. 
  • நாம் உடற்பயிற்சி செய்தால் மிகவும் தூக்கத்தின் தரம் அதிகரித்து நல்ல தூக்கம் நமக்கு கிடைக்கிறது. 
உடற்பயிற்சி என்பது ஒரு மருந்தாக பார்க்கப்படும். நடைப்பயிற்சி,யோகா சைக்கிள் ஓட்டல்,ஜாக்கிங் அல்லது விளையாட்டுகள் போன்ற எளிய பயிற்சிகள் கூட நமது உடலுக்கு அதிக அளவில் பயனுள்ள வகையில் இருந்து வருகிறது.எனவே நீங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள் மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள். உடற்பயிற்சி என்பது உடலை இயக்கச் செய்யும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான நன்றாக இருந்து வருகிறது. 

உடற்பயிற்சியுடன் இணைக்க வேண்டிய சில உணவு மற்றும் செயல்கள்: 
  • நீங்கள் உடற்பயிற்சியின் போது மிகவும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.மேலும் பயிற்சி செய்த உடலை நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்த உடலாக மாற்றுவதற்கு நீங்கள் அதிக அளவு சத்துள்ள உணவுப் பொருட்களை கொண்டு வந்து சாப்பிட வேண்டும். 
  • நீங்கள் உங்கள் உடலின் ஈரப்பதத்தை பாதுகாப்பதற்காக நீர் அதிக அளவு குடிக்க வேண்டும்.நீங்கள் வாந்தி தாகம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. 
  • நீங்கள் தினமும் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.இல்லை என்றால் உங்கள் உடல் உடற்பயிற்சி செய்தால் கூட மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கும்.எனவே நீங்கள் தினமும் சரியான தூக்கம் மேற்கொள்ள வேண்டும். 
  • நீங்கள் பயிற்சியின் போது புகை மற்றும் மதுவினை தவிர்ப்பது நல்லது.நீங்கள் இதை தவறாக பயன்படுத்தி உடற்பயிற்சி செய்தால் கூட அது உங்கள் பயிற்சியை வீணாக்கும். 
  • நீங்கள் தினமும் ஒரே நேரத்தில் சரியான வழக்க வழக்கத்துடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும் நீங்கள் சரியான ஒழுங்கான முறையில் மட்டுமே உடற்பயிற்சி செய்தால் உங்கள் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

மனித உடலின் 9 மண்டலங்கள் | 9 zones of the human body

நமது உடல் ஐம்பூதங்களின் உட்பொருள்களால் ஆனது. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய இந்த ஐம்பூதங்கள்தான், மனித உடலின் மூலப்பொருள்களாய் விளங்குகின்றன. எனவே இந்த ஐம்பூதங்களுக்கு உள்ள எல்லா சக்தியும், எல்லா மனிதர் உடலுக்கும் நிச்சயம் உண்டு

மனித உடல் ஆற்றல் வாய்ந்தது என்றால், யாரும். அதை மறுக்க முடியாது, மனித உடலின் விந்தையையும் செயல்படும் ஆற்றலையும் அழகாகப் புரிந்துகொள்ள வேண்டும். மனித உடல் ஒன்பது அமைப்புகளாக (மண்டலங்களாகப்) பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது அமைப்புகளும் சேர்ந்து மனிதஉடலுக்கு ஆற்றலையும், வலிமையும் தருகின்றன.

1.எலும்பு மண்டலம் (Skeletal System)

2. தசை மண்டலம் (Muscle System)

3. உணவு மண்டலம் (Digestive System)

4. நரம்பு மண்டலம் (Nervous System

5. சுவாச மண்டலம் (Respiratory System)

6. இரத்த ஓட்ட மண்டலம் (Circulatory System)

7.நினநீர் மண்டலம் (Lymphatic System)

8. சுரப்பி மண்டலம் (Endocrine System)

9. இனப்பெருக்க மண்டலம் (Reproductive System)

1. எலும்பு மண்டலம்

ஒவ்வொரு கட்டிடத்திற்கும், அடிப்படைக் கட்டமைப்பு மிகவும் அவசியமாக இருப்பதுபோல மனித உடலமைப்புக்கும் எலும்புகள் இன்றியமையாத அங்கம் வகிக்கின்றன. மனித உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளை தசைகள் இணைக்கின்றன. எலும்புகள் அசைவு பெற்று இயங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.

2. தசை மண்டலம்

எலும்புகளை மூடி, சரியான உடலமைப்பைத் தருவது தசை மண்டலம். மனித உடலில் மொத்தம் 600 முக்கியத் தசைகள் உள்ளன. இந்தத் தசைகள் உடலில் உள்ள கைகள், கால்கள், பாதங்கள், விரல்கள், தலை போன்ற உறுப்புகளை இயக்குவதற்கு, ஊட்டச் சத்துகளையும், இரத்தத்தையும் கொண்டு செல்கின்றன.

3. நரம்பு மண்டலம்

எலும்புகளும், தசையும் தன்னிச்சையாக இயங்கிவிட முடியாது. மூளையிலிருந்து கொடுக்கப்படுகிற கட்டளைகளைத் தத்தம் உறுப்புச் செயல்பாட்டிற்கு கொண்டுவந்து. செயலாக்கத்திற்கு உதவி செய்வது 'நரம்பு மண்டலம்* ஆகும். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவாசிப்பதற்கும். கண்கள் காதுகள் மூக்கு நாக்கு சுவையை உணர்வதற்கும் நரம்பு மண்டலம் முக்கியப் பங்காற்றுகிறது. 

4. உணவு மண்டலம்

நாம் உணவை உண்ணும் ஆற்றலாக உடல்சத்தாக மாற்றுகின்ற பணியை உணவு மண்டலம் மேற்கொள்கிறது. உட்கொள்ளப்படும் உணவு எரிசக்தியாக, ஆற்றலாக மாற்றம் பெற்று, மனிதர் உழைப்பதற்கும், அன்றாடப் பணிகளை அயராது செய்வதற்கும் இந்த உணவு மண்டலம் பெரிதும் பயன்படுகிறது. 

5. சுவாச மண்டலம்

என்னதான் உணவுச் வழங்கப்பட்டாலும். உயிர்க் சத்துகள் காற்றாகிய உடலுக்கு ஆக்சிஜன் இல்லையென்றால், மனிதர் வெறும் பிணம்தான். வளிமண்டலத்தில் தனியாக நமக்கு ஆக்சிஜன் மட்டும் கிடைப்பதில்லை. மற்ற பல வாயுக்களோடு கலந்துள்ள ஆக்சிஜனை மட்டும் தனியாகப் பிரித்து, உடலுக்குத் தேவையான வகையில் வழங்குகின்ற பணியைச் சுவாச மண்டலம் செய்கிறது.

6. இரத்த ஓட்ட மண்டலம்

உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தத்தை எடுத்துச் செல்லும் அமைப்பு இரத்த ஓட்ட மண்டலம் ஆகும். இரத்தமானது நமது உடலின் பாய்மத்திசு ஆகும். இதில் சிவப்பு அணுக்கள், வெள்ளையணுக்கள், மற்றும் இரத்தத் தட்டுகள் ஆகியவை அடங்கும்.

சிவப்பணுக்கள் நமது சுவாசத்தின் மூலம் எடுக்கும் ஆக்சிஜனை உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்லும் ஆக்சிஜனின் படகு ஆகும்.


வெள்ளையணுக்கள் நமது உடலினுள் நுழையும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது. நமது உடலின் போர்வீரன் ஆகும்.

இரத்தத் தட்டுக்கள் நமது உடலிலிருந்து இரத்தம் வெளியேறினால், அதை உறையவைத்து இரத்தக் கசிவிலிருந்து பாதுகாக்கிறது. இவை நமது உடலின் பாதுகாப்புப் படை.

இந்த இரத்தத்தை உடலின் எல்லா உறுப்புகளுக்கும். குறிப்பிட்ட அழுத்தத்துடன் சீராக அனுப்புவது நமது இதயமாகும். எனவே, மனிதர் எவ்வாறு ஒரு சமூக உயரினமோ, அதேபோல் இரத்த ஓட்ட மண்டலம் இதயம், நுரையீரல் மற்றும் நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் சார்ந்தது.

7. நினநீர் மண்டலம்

உணவுப் பரிமாற்ற மண்டலத்தின் வழியாக, உணவுச் சத்துக்கள் உடலிலுள்ள ஒவ்வோர் அணுவுக்கும் தனித்தனியாகக் கொண்டு செல்லப்படுகிறது. இந்தச் சிறப்பான பொறுப்பான பணியை நினநீர் (Lymph) மண்டலம் செய்கிறது. இரத்த நாளங்களிலும், இரத்தக் குழாய்களிலும் சுரக்கும் நினநீர் எனப்படும் திரவம், முறையே தேவையான ஊட்டச்சத்துக்களால் ஒவ்வோர் அணுவையும் நனைக்கிறது. 

8. சுரப்பி மண்டலம்

நமது உடலில் பல்வேறு சுரப்பிகளின் வழியாக ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் தத்தம் உடலுறுப்புகளுக்குப் பல்வேறு செய்திகளைக் கொண்டுசெல்லும் பணியைச் செய்கின்றன. ஒவ்வோர் உணர்வுக்கும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் சுரந்து, உடலின் செயல்பாடுகள் சீராக்கப்படுகின்றன.

9. இனப்பெருக்க மண்டலம்

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உடலில் உள்ள செல்கள் மடிவதும், புதிய செல்கள் பிறப்பதுமான சுழற்சி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. அதன் ஒரு சிறப்பான அங்கம்தான் மனித இனப்பெருக்கம், தன்னைப் போன்றறொரு புதிய மனித உயிரைப் படைக்கும் ஆற்றல் இனப்பெருக்க மண்டலத்திற்கு உண்டு.