உடலுக்குத் தேவையான சத்துணவு
தற்காலத்தில் மனிதரின் உணவு முறைகள் வெகுவாக மாறிவிட்டன. 'ஃபாஸ்ட் ஃபுட், பீட்சா, பர்கர்' என்றெல்லாம் உணவு வகைகள் மாறிவிட்டன. இவ்வுணவு உண்பதற்குச் சுவையாக இருக்கலாம். ஆனால், உடல் வலிமைபெற இவ்வுணவு வகைகள் உதவாது.
உணவுகளின் வகைகள் மற்றும் சத்துகள் :
நாம் உண்ணும் சுத்தமான உணவுப் பொருள்கள் வழியாகவே சத்துகள் உடலில் சேர்கின்றன.
- ஈரல், இறைச்சி, கீரை வகைகள், காரட், அவரை நம் உடலுக்கான இரும்புச் சத்தை வழங்குகின்றன.
- பால், பருப்பு, பயறு, முட்டை, அவரை ஆகியவை புரதச் சந்தைத் தருகின்றன.
- மீன் வகைகள், கீரை வகைகள், பால் முதலியவை கால்சியம் சத்தைத் தருகின்றன.) x
- அயோடின் சத்து அடங்கியுள்ள உணவு வகைகள், அயோடின் கலந்த உப்பு, கடல் உப்பு ஆகியவை அயோடின் சத்தைத் தருகின்றன.
- முட்டை, இறைச்சி, பால், வெள்ளைப்பூண்டு ஆகியவை பாஸ்பரஸ் சத்தைத் தருகின்றன.
- உப்பு, முட்டை, இறைச்சி, பால் ஆகியவை சோடியம் சத்தைத் தருகின்றன.
- இவை தவிர, முட்டையின் மஞ்சள் கரு, பச்சைக்கீரை, வெண்ணெய், மஞ்சள் நிறப்பழங்கள், வாழைப்பழம், தவிடு நீக்கா அரிசி, கடலை, நெல்லிக்காய், பப்பாளி, எலுமிச்சைப்பழம், வெண்டைக்காய்,கொய்யா, மீன் எண்ணெய், நல்லெண்ணெய், முளைவிடும் தானியங்கள் ஆகியவற்றில் பல்வேறு வைட்டமின் சத்துகள் நிரம்பியுள்ளன.
இதுபோன்ற சத்துள்ள உணவு வகைகளையும், உணவுப் பழக்கங்களையும் நாம் கையாளும்போது, நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தங்கு தடையின்றிக் கிடைக்கின்றன.
அற்றால் அளவறிந்து உண்க அஃது உடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. (குறள். 943)
என்று தெய்வத்திருமறை எடுத்தியம்புகிறது.
நாம் முன்பு உண்ட உணவு செரித்தபிறகு. செரிக்கும் அளவை அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்பது நீண்டநாள் வாழ வழிவகுக்கும் என்பதே இக்குறள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் ஆகும்.
நாம் உண்ணும் உணவும், எண்ணும் எண்ணங்களும் நலம் பயப்பவை என்றால், நிச்சயம் நாமும் வாழ்வோம்! நம் சந்ததியும் வளம்பெறும்! நோய் வராமல் இருக்க உதவும் மிகவும் சத்துகள் நிறைந்த உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்கள் மற்றும் பிற நோய்கள் வராமல் தடுக்க முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
தினசரி நான் உணவில் சத்தான உணவை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நமது உடல் அதிக அளவில் சத்துகள் நிறைந்த மற்றும் ஆரோக்கியமான உடலாக இருக்கிறது. சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நாம் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு மேம்படுத்தி மருத்துவமனைக்கு செல்லும் தேவையை குறைத்து வருகிறது.
தினசரி நாம் உணவில் பலவகை பழங்கள் காய்கறிகள் அதிக அளவில் சேர்த்து சாப்பிட வேண்டும் மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.நீங்கள் தினசரி போதிய தூக்கம் மற்றும் உடற்பயிற்சி மன அமைதியை நீங்கள் தினமும் மேற்கொள்ள வேண்டும்.
நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில உணவுகள்:
சர்க்கரைவள்ளி கிழங்கு:
- சர்க்கரை வெள்ளி கிழங்கில் அதிக அளவு டேட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகரிவில் உள்ளதால் நமது உடலுக்கு மிகவும் வலிமை அளிக்கிறது
- மேலும் இது நீடித்த ஆற்றல் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது.
கிரீன் டீ:
- இதில் அதிக ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள் உள்ளது
- மேலும் மன அமைதி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு இது மிகவும் உதவியாக உள்ளது.
பாதாம்:
- பாதாமின் அதிக அளவு வைட்டமின் A மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் உள்ளது
- மேலும் நமது உடலில் உள்ள செல்களை பாதுகாக்கின்றன
- நமது உடலுக்கு அதிக அளவு ஆற்றலை தருகிறது.
தயிர்:
- இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
- மேலும் நமது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது
- இதில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உயிரணுக்கள் அதிகளவில் உள்ளது.
இஞ்சி:
- இதில் பயிற்சி எதிர்ப்பு மற்றும் செரிமானத்தை மேம்படுத்து உதவுகிறது
- சளி மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு முக்கிய தீர்வாக உள்ளது.
கீரை வகைகள்:
- கீரையில் அதிக அளவு சத்துகள் நிறைந்துள்ளது
- இது நமது உடலுக்கு இரும்புச்சத்தை அதிக அளவு கொடுத்து வருகிறது
- நீங்கள் கீரை வகையை அதிக அளவு உடலுக்கு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
சிட்ரஸ் பழங்கள்:
- ஆரஞ்சு,எலுமிச்சை பழம் போன்றவற்றில் அதிகளவு சிட்ரஸ் உள்ளது.
- வைட்டமின் சி இதில் அதிகம் உள்ளது
- இது உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது.
பச்சைக் காய்கறிகள்:
- நாம் பச்சை காய்கறியில் அதிக அளவு வைட்டமினியை சி மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளதால் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
பால் பனங்கற்கண்டு:
- இதில் அதிக அளவு வைட்டமின் ட மற்றும் கால்சியம் உள்ளது
- இது எலும்பு வலுவடைய மிகவும் உதவியாக உள்ளது.
தண்ணீர் மற்றும் கஞ்சி பானங்கள்:
- இதில் நீச்சத்து அதிக அளவு உள்ளது
- ஜீரண சக்தியை உடலுக்கு மேம்படுத்தி வருகிறது.
0 கருத்துகள்