உடற்பயிற்சி மனிதர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய செயல் ஆகும். அது மட்டுமல்ல பல்வேறு நோய்களை தடுப்பதற்கு வராமல் இருப்பதற்கும் உடற்பயிற்சி அவசியமாக இருக்கிறது.
உடற்பயிற்சியை நாம் அனுதினமும் மேற்கொள்வதால் பல்வேறு நன்மைகள் நம் உடலுக்குக் கிடைக்கின்றன.
உடற்பயிற்சியின் நன்மைகள் :
1. இரத்த ஓட்ட மண்டலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்தும், குறை இரத்த அழுத்தத்தை உயர்த்தியும், சராசரி இரத்த அழுத்தத்தை நோக்கி தன்னைத்தானே சரிசெய்துகொள்கிறது.
2. உடலின் சூட்டைத் தணித்து, தேவையான வெப்ப அள ஏற்படுத்தித் தருகிறது.
3. சர்க்கரை நோயால் வரும் உடல் சோர்வு, அதிகப் பசி, தாகம் ஆகியவை மறைந்து விடுகின்றன.
4. இரத்தத்தின் சர்க்கரை அளவை சராசரி நிலைக்குக் (Average Blood Sugar Level) கொண்டு வந்துவிடுகிறது.
5. நமது உடலில் செல்கள் உதிரும் காலம் கூட்டப்பட்டு செல்களின் வாழ்நாள் அதிகரிக்கிறது.
6. முகத்தில் இளமையும் பொலிவும் கூடுகின்றன. முதுமையடைதல் தள்ளிப்போய் விடுகிறது.
7. உடலில் உள்ள எல்லாச் சுரப்பிகளும் உயிர்ச் சக்தியால் நிரப்பப்படுகின்றன. உடலின் நச்சுப்பொருள்கள் (Toxins) நீக்கப்படும் வேகம் அதிகரிக்கிறது.
8. தசைகளில் இருக்கும் பிடிப்புகள் தளர்வடைகின்றன. எலும்புகள் வலுவடைகின்றன.
9. மனச்சோர்விலிருந்து (Depression) மனிதனை குணப்படுத்தும் வேதிப்பொருள்கள் (Anti- Depressive Chemicals) உடலுக்கு அதிகம் சுரக்கின்றன.
உடல், மன ஓய்விற்கு எளிய பயிற்சிகள்:
- வானம், கடல், மலைகள், மலர்கள், மழை, நிலவு என இயற்கையின் படைப்புகளை வாய்ப்புக் கிடைக்கும்போது இரசிக்க வேண்டும்.
- நடனம் ஆடுதல், பாடுதல், இசைக் கருவிகள் இசைத்தல். ஓவியம் வரைதல் போன்ற நுண்கலைகளைக் கற்று அவற்றில் மனதை ஈடுபடுத்தலாம்.
- வீட்டுத் தோட்டம் அமைத்துப் பராமரிக்கலாம்.
- செல்லப் பிராணிகள் வளர்க்கலாம்.
- நூலகங்களுக்குச் சென்று வரலாம்.
- இரவு உறங்குவதற்கு முன்பு கண்களை மூடித் தளர்வாகப் படுத்துக்கொள்ளவும். பாதத்திலிருந்து உச்சந்தலை வரை உடலின் ஒவ்வோர் உறுப்பின் செயல்பாட்டினை நினைத்து அந்த உறுப்பிற்கு நன்றி கூற வேண்டும். உடல் தளர்ந்த நிலையில், ஆழ்ந்த சுவாசத்தில் உடலும்,மனமும் ஓய்வு பெற்று இடையூறு அற்ற நல்ல தூக்கம் அமையும்.
செய்முறைப் பயிற்சிகள்
- தினமும் காலையில் எழுந்தவுடன் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வது.
- முன்தூங்கி முன்எழும் பழக்கத்தை உருவாக்குவது.
- உடல் வளர்ச்சியைப் பாதிக்கும் 'பாஸ்ட் புட்' ( Fastfood) உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது.
- மன அழுத்தம் பதட்டம் குறைந்து மனம் தெளிவாக இருக்கும் மற்றும் பணம் மிகவும் அமைதியாக இருக்கும்.
- நினைவாற்றல் மற்றம் சிந்தனை திறன் இது மூளையின் செயல்பாடு மேம்படுத்துகிறது.
- மேலும் புதிய தகவல்களை கற்றுக் கொள்ளும் திறனும் நமக்கு அதிகரிக்கிறது.
- நமக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சி அடைவதால் நமக்கு அதிக அளவு தன்னம்பிக்கை கொடுக்கிறது.
- நாம் உடற்பயிற்சி செய்தால் மிகவும் தூக்கத்தின் தரம் அதிகரித்து நல்ல தூக்கம் நமக்கு கிடைக்கிறது.
- நீங்கள் உடற்பயிற்சியின் போது மிகவும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.மேலும் பயிற்சி செய்த உடலை நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்த உடலாக மாற்றுவதற்கு நீங்கள் அதிக அளவு சத்துள்ள உணவுப் பொருட்களை கொண்டு வந்து சாப்பிட வேண்டும்.
- நீங்கள் உங்கள் உடலின் ஈரப்பதத்தை பாதுகாப்பதற்காக நீர் அதிக அளவு குடிக்க வேண்டும்.நீங்கள் வாந்தி தாகம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
- நீங்கள் தினமும் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.இல்லை என்றால் உங்கள் உடல் உடற்பயிற்சி செய்தால் கூட மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கும்.எனவே நீங்கள் தினமும் சரியான தூக்கம் மேற்கொள்ள வேண்டும்.
- நீங்கள் பயிற்சியின் போது புகை மற்றும் மதுவினை தவிர்ப்பது நல்லது.நீங்கள் இதை தவறாக பயன்படுத்தி உடற்பயிற்சி செய்தால் கூட அது உங்கள் பயிற்சியை வீணாக்கும்.
- நீங்கள் தினமும் ஒரே நேரத்தில் சரியான வழக்க வழக்கத்துடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும் நீங்கள் சரியான ஒழுங்கான முறையில் மட்டுமே உடற்பயிற்சி செய்தால் உங்கள் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
0 கருத்துகள்