படிக்கும் மாணவர்கள் அனைவரும் எப்படி வாசிப்பது? எப்படி சரளமாக படிப்பது? எப்படி வகுப்பில் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது என்பது குறித்து நிறைய கவலைப்படுகிறார்கள்.
- நீங்கள் எளிதாக படிப்பதற்கு சில பயனுள்ள வழிமுறைகள் உங்கள் படிப்பினை சுலபமாகவும் திறமையாகவும் செய்ய சில நடைமுறைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.நீங்கள் படிக்கும் பொழுது உங்களுடைய நினைவாற்றல் கவனக்குறைவு மற்றும் படிக்கும் ஆர்வத்தை மேம்படுத்தும் சில வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
- எளிதாக படிக்க வழிகள் என்பது நீங்கள் முட்டாள்தனமாக அதிக நேரத்தை தேவையற்ற வேலைகள் செய்வதன் மூலம் உங்களுடைய படிப்புக்கு நேரம் கிடைப்பதில்லை.எனவே நீங்கள் தேவையற்ற நேரத்தை செலவழிப்பதை விட்டுவிட்டு உங்களுடைய விழிப்புணர்ச்சிக்காக திறமைக்காக நீங்கள் அதிக அளவு படிக்க வேண்டும்.
- இது மாணவர்களுக்கு மட்டுமல்ல தொழில் செய்பவர் மற்றும் போட்டித் தேர்வுக்கு கலந்து கொள்ள விரும்புவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் எனவே நீங்கள் காலத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்.
- திட்டமிடுதல்:
- நீங்கள் தினசரி படிக்கும் பொழுது ஒவ்வொரு படத்திற்கும் நீங்கள் அட்டவணை போட்டுக்கொண்டு அதற்கான நேரம் செலவழித்து நீங்கள் திட்டமிட்டு பிடித்தால் கண்டிப்பாக உங்களுக்கு நன்கு மூளையில் பதிவேறும்.
- நீங்கள் எந்தவித தொந்தரவும் இல்லாத இடத்தில் படித்தால் மற்றும் அமைதியான சூழலில் படித்தால் மட்டுமே உங்களுக்கு அதிக அளவு படிப்பதற்கும் உங்களுக்கு இந்த சுழல் ஏற்றபடி இருக்கும்.
- நீங்கள் பெரிய பெரிய படங்களை சிறுசிறு பகுதிகளாக பிரித்து படித்தால் உங்களுக்கு சிறிய விளக்கு தான் இருக்கிறது என்று தோன்றும் இதன் மூலம் நீங்கள் அதிக அளவு பாடங்களை மிகவும் சுலபமாக படிக்கலாம்.
- நீங்கள் தினமும் கண்டிப்பாக 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.இது உங்களின் நினைவாற்றலுக்கு அதிக அளவில் உதவுகிறது.மேலும் நீங்கள் 7 முதல் 8 மணி நேரம் தூங்கினால் மட்டுமே உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.ஆரோக்கியம் இருந்தால் தான் உங்களுக்கு படிப்பதற்கும் ஏற்றபடி சரியாக இருக்கும்.
- நீங்கள் படிக்கும் போது படிப்பினை மிகவும் ஆர்வமோடும் சுவாரஸ்யமாக மாற்றுவதற்காக சிறு சிறு விளையாட்டுகள் மைன்ட் கேம்கள் போன்றவற்றை நீங்களே தயவு செய்து மன உற்சாகம் கொண்டு படித்தால் நீங்கள் அதிகளவில் படிப்பதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
- நீங்கள் தினசரி படிக்கும்போது முக்கிய புள்ளிகளை குறிப்பு எடுத்து படித்தால் அது மிகவும் உங்களுக்கு பயனுள்ள வகையில் அமையும்.
- வீடியோ மற்றும் ஆடியோ மூலம் நீங்கள் பாடத்தினை பயிலும் பொழுது அது மிகவும் சுவாரஸ்யமாகவும் உங்கள் நினைவிற்கு அதிக அளவு திரும்பத் திரும்ப நினைவுக்கு வரக்கூடிய ஒன்றாகவும் இருந்து வருகிறது.எனவே நீங்கள் இந்த முறையில் பயன்படுத்தி படிப்பது மிகவும் நல்லது.
- நீங்கள் ஒரே பாடத்தினை படிக்கும் பொழுது உங்களுக்கு உறக்கம் அல்லது மிகவும் சோம்பேறித்தனமாக இருந்தால் நீங்கள் மிகவும் ஆர்வத்தோடு அடுத்தடுத்த படங்களை மாற்றி மாற்றி படிக்கலாம்.
- நீங்கள் படித்த பிறகு தினசரி உங்களுக்குள்ளேயே சிறு சிறு தேர்வுகள் மற்றும் மாதிரி வினாத்தாளர்கள் நீங்களே தயார் செய்து அதனை தேர்வாக எழுதி நீங்களே அதனை திருத்தி உங்களுக்குள்ளே நீங்கள் உங்களை நிலையை அறியலாம்.
அவர்களுக்காகவே எளிதாக படிக்க வாசிக்க 16 வழிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
![]() |
study tips |
படித்தல் எளியதாக அமைய
- வகுப்பறையில் ஆசிரியர் பாடத்தை விளக்கும்போது நன்கு கவனிக்க வேண்டும். தெளிவாகக் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஆசிரியர் பாடப்பகுதியை எடுத்து முடித்ததும், பாடப்பகுதி முழுவதையும் தெளிவாக வாசித்து, புரியாத பகுதிகளுக்கு விளக்கம் கேட்க வேண்டும்.
- கடினமான பாடப்பகுதிகளை அடையாளம்கண்டு, அதைப் பல பகுதிகளாகப் பிரித்து, எளிமையாக்கிப் படிக்க முயற்சிசெய்ய வேண்டும்.
- முன்னால் கற்றவற்றுடன் அல்லது தனக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுகளுடன் படிப்பவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, புரிந்து படிக்க முயலவேண்டும். ஏனெனில், அதுதான் நீண்ட நாள்கள் நினைவில் நிற்கும்.
- இடைவெளி இல்லாமல் படிப்பதை விடுத்து, சிறிது நேரம் ஓய்விற்காக ஒதுக்குங்கள். ஒரு பாடத்திற்கு ஒரு மணிநேரம் என்ற அளவில் கால அட்டவணை இடுங்கள்.
- 'பிறகு படிக்கலாம்' என்று தள்ளிப் போடாதீர்கள். கடினப் பகுதிகளை, பாடங்களை ஒதுக்காதீர்கள்.
- தினமும் படியுங்கள். அதனால் பாடச்சுமை குறையும்.
- பொழுதுபோக்குகள் அவசியம் தேவை.ஆனால்,அவை அளவுகடந்து போகும்போது படிப்பு பாதிக்கப்படுகிறது.
- இரவு நேரத்தில் படிப்பது நமது வழக்கம். ஆனால் விடுமுறை நாள்களில் பகலில் படிப்பதே சிறந்தது.இயற்கை ஒளியில் படிப்பதால் மனம் அடிக்கடி அலைபாய்வதில்லை.
- வாய்ப்புக் கிடைக்கும்போது, பாடத்தோடு தொடர்புடைய வேறு சில நூல்களை நூலகத்திலிருந்து எடுத்து வாசிப்பது, அறிவை மேம்படுத்தும்.
- ஒரே இடத்தில் உட்கார்ந்து படிப்பதற்கு தேவையான எல்லா பொருட்களும் உன்னைச் சுற்றி இருக்க வேண்டும்.அடிக்கடி எழுந்து நடப்பது சிந்தனையை ஒருமுகப்படுத்த உதவாது.
- பாடப்பகுதியை வாசிக்கும்போது முக்கிய பெயர்கள், இடங்கள், வார்த்தைகளை அடிக்கோடு இட்டு வைப்பது தேர்வு நேரத்தில் உதவியாக இருக்கும்.
- கடினமான பாடப்பகுதியை எளிமைப்படுத்தி, குறிப்பெடுத்து வைப்பது தேர்வு நேரத்தில் உதவியாக இருக்கும்.
- எந்தெந்த பாடங்களிலிருந்து நெடுவினாக்களை எழுதப் போகிறோம் என்பதைத் தீர்மானித்து, அந்தப் பாடத்திலுள்ள நெடுவினாக்களை எழுதிப் பார்ப்பது தேர்வில் வெற்றிபெற உதவியாக இருக்கும்.
- தேர்வு நேரங்களில் கடின வேலைகள், அலைச்சல், மிதமிஞ்சிய பொழுதுபோக்கு ஆகியவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.
- ஓய்வு, மெல்லிசை, அமைதியாகச் சிந்தித்தல் போன்றவை மனதை ஒருமுகப்படுத்த உதவும்.
0 கருத்துகள்