குடிப்பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துகள் | Dangerous of drinking Alcohols

மனிதர்களிடம் காணப்படும் இயல்பான வாழ்வியல் ஆற்றல்களைச் சீரழிக்கும் திறன் கொண்ட செயல்பாடே எதிர்வினை ஆகும். போதைப்பழக்கம், குடிப்பழக்கம் ஆகியவை இத்தகைய எதிர்வினைகளே. 

இவை பல தவறான விளைவுகளை உருவாக்கி வாழ்வியல் ஆற்றல்களையும், நல்வாழ்வையும் சீரழித்து அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கின்றன. 

இதற்கான எதிர்ப்பாற்றலை இளமைப்பருவத்திலேயே வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. இதற்கான விழிப்புணர்வுச் சிந்தனைகளை அறிந்துகொள்வோம்.

  1. இந்தியாவில் போதை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சுமார் 40 கோடி பேர். இதில் 53% இளம் வயதினர்.
  2. போதையால் 25% விபத்துகள் நடக்கின்றன.
  3.  34% தற்கொலைகள் போதையால் அரங்கேறுகின்றன.
  4. 11 வயது முதலே மாணாக்கர் போதைப் பொருள்களுக்கு அறிமுகமாகின்றார்கள்.
  5. ஒவ்வொரு வருடமும் 18 முதல் 24 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களில் 1825 பேர், மதுவோடு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளால் இறந்து போகின்றனர்.
  6. 18 வயது முதல் 24 வயதிற்குட்பட்ட மாணாக்கர்களில் 6,90,000 பேர், போதைக்கு உட்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
  7. 5,99,000 மாணாக்கர்கள் மதுவின் தாக்கத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளால், தற்செயலாக ஏற்படுகிற காயங்களுக்கு உள்ளாகின்றனர். இவர்களும் 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்.
  8. 25% மாணாக்கர்கள் தங்களது குடியின் காரணமாக வகுப்புகளுக்குச் செல்லாமை, கல்வியில் பின்னுக்குத் தள்ளப்படுதல், தேர்வுகளில் தோல்வி மற்றும் ஒட்டுமொத்தத்தில் கல்வியில் கீழ் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.

உடல்ரீதியான பாதிப்புக்கள்

  • மூளையிலுள்ள உயிரணுக்கள் மதுவினால் மழுங்கடிக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன.
  •  மூளை பாதிக்கப்படுவதால் அதனோடு தொடர்புடைய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுகின்றது.
  • பசியின்மை, தூக்கமின்மை, நரம்புத்தளர்ச்சி, தசைநோய்கள் உருவாகின்றன.
  • கல்லீரல்வீக்கம், கணையத்தில் வீக்கம், வயிற்றுக் கோளாறுகள், சுவாசப் பிரச்சினைகளும் உருவாகின்றன.
  • மஞ்சள்காமாலை, சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு ஆகியவை உருவாகின்றன.
  • எடை குறைவு, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவை ஏற்படுகின்றன.
  • ஆண்மையிழப்பு, இதயக்கோளாறுகள், புற்றுநோய். கருவுறுதலில் கோளாறு, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலுள்ள சிசுவுக்கு உடல் கேடுகள் அதிகமாக ஏற்படுகின்றன.

மனரீதியான பாதிப்புகள் :

  • பயம், பதற்றம்,
  • ஞாபக மறதி, சந்தேகம், அந்நியமாதல்
  • 1,50,000 மாணாக்கர் மது சார்ந்த நோய்களுக்குத் தள்ளப்படுகின்றனர்.
  • தனிமைப்படுதல், மனச்சோர்வு, சலிப்பு
  •  குற்ற உணர்வு, பிறழ் நம்பிக்கை (Delusion)
  • உடல் நடுக்கப்பிரம்மை (Delirium tremens)
  • விரக்தி,அச்சுறுத்தும் கனவுகள் (Nightmares)
  • புலன்களின் பேதலிப்பு (Hallucinations)
  • கோபம், மன அழுத்தம், மனக்குழப்பம்

பொருளாதாரப் பாதிப்புகள்

  1. வேலையிழப்பு, வேலை செய்ய இயலாமை
  2. நிலம், வீடு போன்றவற்றை விற்றல், அடகு வைத்தல்
  3. கடன் வாங்குதல், பொருள்களை உடைத்தல், எரித்தல்
  4. அடிப்படை வசதிகள் இன்மை, வறுமை
  5. பணத்தை விரயம் செய்தல்

குடும்பப் பாதிப்புகள் :

  • சண்டை போடுதல், அடித்தல், குடும்ப வன்முறைகள்.
  • குடும்ப உறவுகள் முறிதல்.
  • தனிநபர் தற்கொலை.
  • குடும்பமாகத் தற்கொலை.
  • பிள்ளைகள் அநாதைகளாதல்.
  • மனைவி விதவையாதல்.
  • பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுதல்.
  • குடும்பத்தினரின் உடல்நலம் பாதிக்கப்படுதல்.
  • பிரிந்து வாழ்தல்.
  • விவாகரத்து பெறுதல், அவமானப்படுதல்.
  • சகநோயாளியாதல் (Co-dependents)
  • திறமைகள் பாழ்படுதல்.
  • உயிர்க்கொல்லி நோய்கள்.
  • தவறான உறவுகளால் பால்வினை நோய்களுக்கு உட்படுதல்.
  • குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறுதல்.
  • போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல்

சமூகப் பாதிப்புகள் : 

  • திருட்டு, கொள்ளை வழக்குகள்
  • விபத்து, கொலை, தற்கொலை
  • அடிதடி, குழப்பம், கலவரம்
  • பொதுச்சொத்துக்களுக்குச் சேதம்
  • பாலியல் வன்முறைகள்
  • பொதுமக்களின் அச்சம்
  • நாட்டின் வருவாய் இழப்பு
  • திறமைகள் வீணடிப்பு
  • அலுவலக வேலைகள் முடக்கம்
குடிப்பழக்கம் ஆனது உங்களுடைய உடல் தனத்திற்கும் மன நலத்திற்கும் பலவிதமான தீமைகளை ஏற்படுத்தி வருகிறது. நீங்க இதனை தவிர்ப்பது நல்லது. 

மூளை மற்றும் மனநிலை பாதிப்பு: 

அறிவாற்றல் குறைதல்: 
  • நீங்கள் தொடர்ந்து மதுவினை குடிப்பதன் மூலமாக மூளை ஆனது நினைவாற்றல் மற்றும் அதனுடைய சிந்தனை திறன் குறைந்து விடுகிறது. 
  • இது உங்களின் மூளையையும் பெருமளவு பாதிக்கிறது. 
மன அழுத்தம் மற்றும் பதட்டம்: 
  • உங்களுக்கு ஆரம்ப காலங்களில் மதுவினை குறைக்கும் பொழுது அதிக அளவு அது போதையை தந்து உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் அது உங்களுக்கு பின்னர் உடல் நல பாதிப்புகள் மற்றும் உங்களுக்கு மனச்சோர்வையும் ஏற்படுத்திவிடுகிறது. 
தூக்க கோளாறுகள்: 
  • நீங்கள் தொடர்ந்து குடிப்பதன் மூலமாக உங்களின் தூக்கத்தில் தரமும் குறைந்து விடுகிறது.
  • தூங்கும் பொழுதும் நீங்கள் ஏதாவது ஒன்று உளறிக் கொண்டே இருப்பீர்கள் 
  • உங்களுக்கு குறட்டை மட்டும் மூச்சுத் திணறல் அதிக அளவு ஏற்படுகிறது. 
  • எனவே நீங்கள் குடி பழக்கத்திலிருந்து வெளிவர வேண்டும்.ஏனென்றால் மேற்கண்ட அனைத்தும் உண்மை குடிப்பழக்கம் ஆனது உங்களுக்கு அதிக அளவு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது  உங்களை சுற்றியுள்ள நபர்கள் அனைவரையும் துன்புறுத்தக் கூடிய தொல்ல தரக்கூடிய ஒரு நபராக நீங்கள் கருதப்படுவீர்கள்.எனவே குடிப்பதற்கு நீங்கள் வெளிவர வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்