Education லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Education லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜூலை, 2025

உங்கள் பிள்ளைகள் படிப்பதில் மற்றும் விளையாடுவதில் சோம்பேறித்தனம் செய்கிறார்களா?இதோ சில யோசனைகள்!

படிப்பதிலும் மற்றும் விளையாடுவதிலும் உங்கள் பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டும் என்றால் நீங்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி நீங்கள் அவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் படிப்பதையும் விளையாடுவதையும் சரியான முறையில் கற்றுக் கொடுக்க வேண்டும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கும் விதத்தில்தான் அவர்களின் எதிர்காலம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எனவே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து என்ன கற்றுக் கொடுக்கிறார்களோ அதை தான் பிள்ளைகள் செய்வார்கள் எனவே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உங்களின் பிள்ளைகள் இதில் அதிக திறமை பெற்றிருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அதற்கேற்றபடி நீங்கள் அவர்களுக்கு பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

நீங்கள் கண்டிப்பதினாலோ அல்லது அடிப்பதினாலோ எந்த ஒரு பயனும் இல்லை எனவே நீங்கள் அவர்களுக்கு என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டறிந்து அவர்களுக்கு அதை சரியான முறையில் பயிற்சி அளித்தால் மிகவும் நன்றாக பிள்ளைகள் வருவார்கள் என்பதை அறிந்திருப்பீர்கள்!

படிப்பு: 

நீங்கள் பாடத்தினை அவர்களுக்கு மிகவும் தெளிவாகவும் மாணவர்கள் விரும்பும் வகையிலும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

நீங்கள் அவர்களுக்கு விருப்பமில்லாத வகையில் கற்றுக் கொடுத்தால் அவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை எனவே நீங்கள் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பாடத்தினை மிகவும் சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் அழகாகவும் எளிய முறையிலும் பாடத்திட்டங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு தனி சிறப்புகள் இருக்கும் எனவே நீங்கள் அதை கண்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.



மேலும் ஒரு மாணவருக்கு கணிதம் மிகவும் பிடிக்கும் இன்னொரு மாணவருக்கு படம் வரைதல் மிகவும் அதிகமாக பிடிக்கும் இன்னொரு மாணவருக்கு நடனம் ஆடுவதில் அதிக ஆர்வம் இருக்கும் எனவே நீங்கள் அதனை கண்டறிந்து மாணவர்களை ஊக்குவித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் தைரியமாகவும் அந்த செயலை செய்வார்கள்.

எனவே ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை என்ன திறமைகள் இருக்கிறது என்பதை கண்டறிந்து அவர்களை ஊக்குவியுங்கள். 

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு சரியான கால அட்டவணைகள் கொடுக்க வேண்டும்.அவர்கள் சரியான நேரத்தில் காலையில் எழுவது முதல் இரவு படுக்கும் வரையில் சரியான நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.

நேரத்தை கடைபிடித்தால் மட்டுமே அவர்கள் வாழ்வில் மென்மேலும் வளருவார்கள் எனவே நீங்கள் நேரத்தை வீணடிக்க பிள்ளைகளை அனுமதிக்காதீர்கள்.விடுமுறை நாட்களில் மட்டுமே அவர்களுக்கு அவர்கள் விருப்பம் போல் விட்டு விடுங்கள்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பிள்ளைகள் ஏதாவது ஒரு சிறிய வெற்றி பெற்றால் கூட அவர்களை நீங்கள் பாராட்டினால் அவர்கள் அதிக அளவு மகிழ்ச்சி பெற்று மென்மேலும் அதில் சாதிப்பதற்கு அவர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும்.

எனவே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை தட்டிக் கொடுங்கள் அவர்கள் மீது தேவையற்ற சொற்களை அல்லது அடிப்பதையோ நிறுத்திவிட்டு நீங்கள் அவர்களை தட்டிக் கொடுங்கள் அவர்களை மகிழ்ச்சியாக இருக்க சொல்லுங்கள் இதன் மூலமாகவே மாணவர்கள் மிகவும் தெளிவாகவும் இருப்பார்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள். 

விளையாட்டு: 

நீங்கள் உங்களது பிள்ளைகள் என்ன விளையாட்டில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை கண்டறிந்து நீங்கள் அதில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் அந்த விளையாட்டில் அவர்கள் தோல்வியடைந்தால் கூட நீங்கள் அவர்களை மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்ய சொல்லுங்கள் கண்டிப்பாக அவர்கள் அதில் பெரிய வெற்றி காண்பார்கள்.

நீங்கள் உங்களது பிள்ளைக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் அவர்களுக்கு தேவையான உணவு தண்ணீர் அனைத்தையும் நீங்கள் சரியான நேரத்தில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் உங்களது பிள்ளைகள் சரியாக தூங்குகிறார்களா என்பதை பார்க்க வேண்டும். உடல் ஆரோக்கியமே முதலில் முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பிறகுதான் அனைத்தும் எனவே நீங்கள் உங்களின் பிள்ளைகள் உடலின் ஆரோக்கியமே முக்கியம் என்பதை எடுத்து சொல்லுங்கள். பிள்ளைகளுக்கு தேவையான நடை பயிற்சி உடற்பயிற்சி அனைத்தையும் கற்றுக் கொடுங்கள். அவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் கவனத்துடனும் விளையாட்டுகளை விளையாடச் சொல்லித் தாருங்கள்.

பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் நீங்கள் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்து அவர்களுக்கு கொடுங்கள்.உங்களின் பிள்ளைகளை நேர்மறையாக யோசிக்க சொல்லுங்கள் எந்த சூழ்நிலையிலும் தவறான பாதைக்கு எடுத்துச் செல்லாதீர்கள் நீங்கள் அவர்களை நேர்மறையான எண்ணத்துடன் வளர்த்து வாருங்கள்.

அடிக்கடி சண்டை வர காரணம் இதுதானா? Reason of fighting

தமிழகத்தில் பெரும்பாலான குடும்பச் சண்டையானது வீதிக்கு வந்துள்ளது. ஒருவருக்கொருவர் வாக்குவாதம் மேற்கொண்டு இந்த சண்டையானது வீதி வரை வந்து அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இருவரில் யாராவது ஒருவர் அமைதியாகும் வரை இருவரின் குரலும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.ஆனால் ஒருவர் கூட விட்டுக் கொடுப்பதில்லை.

ஒருவர் பேசினால் அது என்னவென்று கூட தெரியாமல் அதற்கு மாறாக என்ன பேச வேண்டும் என்பது மற்றவர்களின் நினைவில் இருக்கின்றன. ஆனால் ஒருவர் கூறும் பொழுது அதை இன்னொருவர் என்ன கூறுகிறார் என்று யோசித்து ஒரு நிமிடம் கழித்து பதில் கூறினால் மிகவும் தெளிவாக இருக்கும். ஆனால் இதற்கு மாறாகவே நடக்கின்றன. இருவரின் யார் பெரியவர் என்று போட்டி போட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். சுற்றியுள்ள வேடிக்கை பார்க்கும் அனைவருக்கும் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று கூட யாரும் கேட்க மாட்டார்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

சண்டையில் காரணங்கள் என்பது மனித உறவுகளில் ஏற்படக்கூடிய ஒருவருக்கொருவர் உள்ளே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் உணர்ச்சி வெடிப்புகள் சுழ்நிலை சிக்கல்களில் ஏற்படும் விளைவுகள்.

பொதுவான காரணங்கள்: 

தவறான வார்த்தை: ஒருவர் பேச்சானது இன்னொருவருக்கு அவமதிப்பாக இருந்தால் அதன் மூலமும் சண்டை உருவாகிறது. 

தவறான செயல்: ஒருவர் மற்றொருவரிடம் தவறான செயல்கள் மேற்கொண்டால் இதன் மூலமும் சண்டை உருவாக காரணமாக உள்ளது.

பழைய சிக்கல்கள்: தீர்க்கப்படாத பழைய சிக்கல்கள் மூலமும் புதிதாக சண்டை உருவாக காரணமாக உள்ளது. 

தனிப்பட்ட பிரச்சனைகள்: பணம் வேலையின் அழுத்தம் மற்றும் குடும்ப சூழ்நிலை போன்றவை நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி இதன் மூலம் சண்டை உருவாகிறது. 

உணர்ச்சிக் கட்டுப்பாடு: 

நமது கோபம் வருத்தம் பொறாமை போன்றவைகள் நாம் கட்டுப்படுத்தாமல் இருப்பதன் மூலமும் சண்டை உருவாகிறது. 

தவறான புரிதல்: ஒருவர் கூறும் வார்த்தை அல்லது செயல் மற்றொருவர் தவறாக புரிந்து கொண்டு அதன் மூலமும் சண்டை உருவாகிறது. 

கருத்து வேறுபாடு: ஒருவர் கூறுவது நான் கூறுவது சரி என்று அவர் கூறுவார் இன்னொருவர் நான் கூறுவது தான் சரி என்று கூறுவார் இதன் மூலம் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி சண்டை உருவாக காரணமாக உள்ளது.

உறவுகளில் சண்டை காரணங்கள் : 

உறவினர்களின் நல்ல விசேஷ காலங்களில் பணமும் பொருளும் கொடுக்கும் பொழுது அது அவர்களுக்கு பூர்த்தியாகவில்லை என்றால் இதனை காரணமாக கொண்டும் சண்டை செய்வார்கள். 

கணவன் அல்லது மனைவி தனது குழந்தையினை சரியாக கவனிக்கவில்லை என்றால் இதன் மூலமும் இருவருக்கிடையில் சண்டை வருவதாக காரணமாக உள்ளது.

சரியான நேரம் ஒதுக்காத காரணத்தின் மூலமும் உறவுகளில் சண்டை ஏற்படுகிறது. 

பண விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றி உறவுகளில் சண்டை உருவாகிறது. 

மனநிலை மாற்றங்களால் கூட உறவுகளில் சண்டை ஏற்படுகிறது.

சில நபர்கள் மற்றவர்கள் பார்ப்பது கூட தெரியாமல் அதிக தீய சொற்களை பயன்படுத்தி மிகவும் மோசமாக பேசுவார்கள்.ஆனால் என்ன சண்டை என்று அவருக்கே தெரியாத அளவிற்கு அவருடைய சொற்கள் இருக்கும். இருவரின் வாய் அடங்கும் அளவிற்கு பேசிக் கொண்டே தான் இருப்பார்கள்.ஆனால் ஒருவர் கூட விட்டுக் கொடுக்காத அளவிற்கு பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். சுற்றிப் பார்ப்பவர்கள் அனைவரும் என்னடா இவர்களை எப்பொழுது அடித்து மற்றவர்கள் என்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டே இருப்பார்கள். 

சண்டை போடுபவர்கள் ஒருவராவது நாம் செய்வது சரியா நாம் பேசுவது சரியா என்று ஒரு நிமிடம் யோசித்தால் அந்த சண்டை ஆனது நிளாமல் இருக்கும். பெரும்பாலும் வேறு ஒருவரின் பேச்சை கேட்டு வீட்டில் இருப்பவர்கள் சண்டை போட காரணமாக அமைகிறது. எனவே அவரவர் வேலையை சரியாக செய்தால் சண்டை வர காரணமாக அமையாது. 

எனவே அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். வன்முறையால் எந்தப் பயனும் இல்லை என அவர்கள் உணர வேண்டும். வாழ்க்கையில் அனைவரும் ஒருவர் ஒருவர் உதவி செய்து மிகவும் ஒற்றுமையாக வாழ வேண்டும். சண்டை போட்டுக் கொள்பவர்களை நாம் நல்வழிப்படுத்தி அவர்களை திருத்தி நாம் அவர்களுக்கு வாழ்க்கையின் புரிதலை பற்றி நன்கு கூற வேண்டும். சண்டைக்கு முக்கிய காரணம் நாம் பேசுவது அதிகமாக இருப்பதால் தான் எனவே நீங்கள் பேசும் வார்த்தைகள் சரியானதா இல்லையா என்பதை ஆராய வேண்டும்.

வியாழன், 22 மே, 2025

படைப்பாற்றலின் முக்கியத்துவமும் தேவையும் | The importance and need for creativity

 படைப்பாற்றல் வெளிப்படும் சூழல்கள்:

ஒன்றைப் பார்க்கும் பார்வையும், உணரும் முறையும்தான் படைப்பையும் படைப்பாளரையும் உருவாக்குகிறது.

நெகிழும் நெஞ்சம் கொண்டவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் அதிகம் பாதிப்பு அடைபவர்கள், பிறரது உள்ளத்தைக்கூட ஆழமாக உற்றுப்பார்த்து தெரிந்தவர்கள். கற்பனைத்திறன் மிகுந்தவர்கள் படைப்பாளர்களாகப் பரிணமிக்கிறார்கள்.

"ஒரு வாசகர் தனது தீவிர வாசிப்பால் மிகச் சிறந்த படைப்புகளோடு, மோதல்கள் நிகழ்த்துவதால், படைப்பு ஊற்றுக்கண் திறக்கிறது. வாசகரும் படைப்பாளியாக மாறுகிறார்" என்கிறார் எழுத்தாளர் சுந்தர ராமசாமி.

கல்லை எல்லோரும் பார்க்கிறார்கள். படைப்பாளர் மட்டும் அதற்குள் சிலையைப் பார்க்கிறார், சிற்பியாகிறார்.

ஒருமுறை கன்னியாகுமரி கடற்கரையிலே, ஒரு வசதியான வட இந்திய மனிதர் இளநீர் குடித்துவிட்டு, எறிந்துவிட்டுப் போனார்.

சற்று அப்பால் அமர்ந்திருந்த ஒரு சீன நாட்டுப் பெண் அதை எடுத்து, நார் நாராக உரித்து எடுத்தார். சிரட்டையும் சிறிது நாருமாக இருந்த உள்பாகத்தைச் சிறிய கத்தியால் வடிவமாற்றம் செய்தார்.

ஏற்கனவே உரித்து வைத்திருந்த நாரை ஆங்காங்கே திணிக்கவும், பின்னல் போட்டுச் சுற்றவும் செய்தார்.

'எந்தப் பொருள் எடுத்தாலும் பத்து ரூபாய்' கடைக்குப் போய், ஆறு நிறம்கொண்ட குழந்தைகள் பயன்படுத்தும் 'பெயின்டை' வாங்கி வந்தாள். பதினைந்தே நிமிடத்தில் ஓர் ஆணும், பெண்ணும் கைகுலுக்குவது போன்ற படைப்பை உருவாக்கினார். அருகில் இருந்த சுவரில் வைத்து அழகு பார்த்தார். பலரும் பார்த்துப் பாராட்டினர்.

இளநீரைக் குடித்து எறிந்துவிட்டு, புண்ணியத் தலங்களுக்குப் போய்த் திரும்பிய வட இந்தியப் பயணியும் அதை வேடிக்கை பார்த்தார். "அழகாக இருக்கிறதே, எங்கு வாங்கினீர்கள்?" என்று அப்பெண்ணிடம் வினவினார். புன்னகைத்த அப்பெண்ணோ. "உங்களுக்கு வேண்டுமானால் இருநூறு ரூபாய்க்குத் தருகிறேன்" என்றார். அவர் பேசாமல் இருநூறு ரூபாய் கொடுத்து அதை வாங்கிச் சென்றார்.

ஒருவர் குப்பையில் எறிந்தது ஒரு படைப்பாளியின் கையில் கிடைத்தபோது, அது மாபெரும் கலைப் படைப்பாக உருவெடுத்து விடுகிறது. ஆகாது என்று ஒதுக்கப்பட்ட மனிதர்கள் கூட, நல்ல சிற்பிகளின் செதுக்குதல்களால் படைப்பாளர்களாகப் பரிணமிக்க முடியும்.

மேலும் படைப்பாற்றல் என்பது புதிய யோசனைகள் பொருட்களை உருவாக்கும் திறன் மற்றும் நம்முடைய புதிய கருத்துக்கள் ஆகும். இது மனிதர்களின் சிந்தனை திறன் ஆற்றல் மற்றும் பிரச்சனைகளை எதிர்களும் திறன் போன்றவை வெளிப்பாடாகும். பழைய பாடல் என்பது வாழ்க்கையின் பல துறைகளிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. இது மனிதர்களின் ஐந்து அறிவுத்திறன் கற்பனைத் திறன் புதிதாக யோசிக்கும் திறன் ஆகும். இது சமூக வளர்ச்சிக்கும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. 

எங்கெல்லாம் பயன்படுத்தலாம்? 

  • படைப்பாற்றலை நாம் கலை மற்றும் இலக்கியத்தில் பயன்படுத்தலாம். 
  • பொறியியல் மற்றும் அறிவியலில் பயன்படுத்தலாம். 
  • வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதலில் பயன்படுத்தலாம்.
  • கல்வி மற்றும் அதற்கான பயிற்சியில் பயன்படுத்தலாம். 
  • தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் பயன்படுத்தலாம். 
  • புதிதாக எழுத்து திறனின் நாம் பயன்படுத்தலாம். 

எப்படி படைப்பாற்றலை வளர்ப்பது?

  • நாம் புதிதாக புத்தகங்களை படிக்க வேண்டும் மற்றும் சிறுகதைகள் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை நாம் படித்து படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
  • நாம் அனைவரிடமும் கேள்வி எழுப்ப வேண்டும் ஏன் எப்படி எப்படி வந்தது என சிந்தித்து அனைவரிடமும் கேள்வி கேட்க வேண்டும். 
  • நம் மனதில் தோன்றும் கற்பனைகள் கவிதைகள் குறிப்புகள் கதைகள் போன்றவற்றை நீங்கள் எழுத்தாக எழுத வேண்டும். 
  • ஓவியம் இசை மற்றும் கைத்தொழில் போன்றவற்றில் நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும். 
  • நீங்கள் அனைத்திலும் பழையதை ஒதுக்கி புதிய வழியில் அனைத்தையும் யோசிக்க வேண்டும். 
  • நீங்கள் இயற்கையை கலாச்சாரம் புதிய மனிதர்கள் போன்றவற்றை புதிதாக பார்க்க வேண்டும் அதிகமாக சுற்றுலா செல்ல வேண்டும் புதிய புதிய இடத்தை பார்க்க வேண்டும் மேலும் நீங்கள் அதிக அனுபவம் பெற வேண்டும். 
  • நீங்கள் அனைவரும் குழுவாக செயல்படும் பது உங்களுக்கு புதிய புதிய யோசனைகள் பிறக்கும்.
  • உங்களுக்கு வரும் பிரச்சனைகளை சிக்கல்களை புதுமையான முறையில் கையாண்டு அதை சுலபமாக தீர்க்க வேண்டும். 
  • நீங்கள் உங்களின் தனிப்பட்ட திறமைகளை அனைத்திலும் வெளிப்படுத்த வேண்டும். 
  • நீங்கள் புதிய புதிய தொழில்களை உருவாக்க வேண்டும் அதில் கடுமையாக உழைத்து சாதிக்க வேண்டும். 
  • வாழ்க்கையில் இதன் பயன்பாடு: 
  • மாணவர்கள் அனைவரும் பாடங்களை புதுமையாக புரிந்து கொள்ள வேண்டும் பரிட்சை எழுத வேண்டும். 
  • ஆசிரியர்கள் அனைவரும் வகுப்பில் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பிக்க வேண்டும் அவர்களுக்கு ஆர்வம் தூண்டும் வகையில் ஆசிரியர்கள் அனைவரும் இவர்களுக்கு கல்வியை கற்பிக்க வேண்டும்.
  • தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் அனைவரும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும். 
  • மருத்துவர்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தால் அதிகளவு மனிதர்களுக்கு மருத்துவத்தின் மீது நம்பிக்கை ஏற்படும்.

நினைவாற்றலின் தேவைகள் மற்றும் வகைகள் | Requirements and types of memory

 நினைவாற்றலின் தேவைகள் :

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் . நம் மொழித்தாளில் மனப்பாடச் செய்யுள், வரலாற்றில் ஆண்டுகள். பெயர்கள், ஒப்பந்தங்கள், அரசியலமைப்புச் சட்டங்கள். இடங்கள். நிலவியல், கனிமங்கள், இயற்கை வளங்கள், அறிவியல் பதங்கள். 

தாவரங்களின் அறிவியல் பெயர்கள், அறிவியல் கோட்பாடுகள், தொழில் நுணுக்க விளக்கங்கள், கணிதத்தில் சூத்திரங்கள் ஆகியவற்றை நினைவில்கொண்டு. தேர்வில் எழுத வேண்டியிருக்கின்றது.

அதுபோல, நம் அன்றாட வாழ்வில் நாம் செய்ய வேண்டிய வேலைகள், நம் நண்பர்களின் பெயர்கள் மற்றும் கடையில் பொருள்கள் வாங்கச் செ செல்லும் போது அவற்றின் பெயர்கள் போன்றவற்றை நினைவில் கொள்வது அவசியமாகின்றது.

ஆனால் மறதி ஒரு பெரும் தடையாக நமக்கு இருக்கின்றது. உண்மையைச் சொல்லப்போனால், மறதி என்ற ஒரு குறைபாடு பலருக்குக் கிடையாது, மருத்துவரீதியாக சிலருக்கு அந்தக் குறைபாடு இருக்கலாம்.

ஆனால், அனைவருக்குமே போதுமான நினைவாற்றல் இருக்கின்றது. ஆகவே, நம் வெற்றியும், தோல்வியும் நமக்கு எவ்வளவு நினைவாற்றல் உள்ளது என்பதைப் பொறுத்து அல்ல; நம் நினைவாற்றலை நாம் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம். என்பதைப் பொறுத்துதான் அமையும்.

ஆகவே, நம் நினைவாற்றலை வளர்க்கவும், பாடங்களை எளிதில் மனதில்கொள்ளும் வழிமுறைகளைப் பின்பற்றவும் தொடங்கிவிட்டால், உங்களுக்கு எதிலும் வெற்றிதான்.

நினைவாற்றல் என்பது ஒரு மனிதன் பார்க்கக் கூடியதும் கேட்கக் கூடியது மற்றும் அவன் அனுபவிக்க கூடியதும் அனைத்தையும் அவனது மூளையில் பதிய வைத்து தேவைப்படும் நேரத்தில் நினைவாற்றல் ஆகும்.

மூவகை நினைவாற்றல் :

1. சில நபர்கள் தாங்கள் கேட்பதை அதிக காலத்திற்கு நினைவில் வைத்துக்கொள்கின்றார்கள். சிலர் தாங்கள் பார்ப்பதை நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்துக்கொள்கின்றார்கள்.

2. பாடங்களைக் கற்கும்போது பார்த்தல், கேட்டல் என்ற இரு நிலைகளில் நாம் அதிகம் அறிகின்றோம்.

3. சிலர் தாங்கள் உணர்வுப்பூர்வமாகப் பெற்றுக்கொள்வதை நீண்ட காலத்திற்கு நினைவில் கொள்கின்றார்கள். நாம் நம் உறவுகளை, நண்பர்களை அதிகம் நினைவில் கொள்வது இந்த உணர்வு நிலை நினைவாற்றலில்தான்.

இந்த மூன்றுவகை நினைவாற்றலும் அவரவரின் மன மற்றும் அறிவு ஆளுமையைப் பொறுத்து வேறுபடும்.

உங்களுக்கு இதில் எந்த வகையான நினைவாற்றல் அதிகம் இருப்பதாக நினைக்கின்றீர்களோ, அதை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தினால் உங்கள் நினைவாற்றல் நிச்சயம் உங்களுக்கு வெற்றி தரும்.

நினைவாற்றலின் தேவைகள்:

  • கல்வியில் நீங்கள் படிக்கும் அனைத்தையும் எதையும் உங்கள் மனதில் ஆழமாக பதிய வைப்பதற்கு நினைவாற்றல் தேவை.
  • உங்களின் வாழ்க்கையில் உங்களுக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் தேவைப்படும் பயன்படுத்திக் கொள்ளலாம். 
  • நீங்கள் அதிகளவில் நினைவாற்றல் வைத்திருப்பதன் மூலம் மூளை ஆனது மிகவும் திறமையாக செயல்பட்டு வேலை மற்றும் படிப்பதற்கும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 
  • நீங்கள் தொடர்ந்து ஒரே விஷயத்தில் அதிகம் காணும் செலுத்தினால் அது உங்களுக்கு அதிக அளவு நினைவில் வைத்துக் கள்ள உதவுகிறது.
  • உங்கள் மனநிலை மிகவும் நேர்மையாக இருந்தால் உங்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கிறது. 
  • உங்களின் நினைவாற்றலானது நீங்கள் ஏதாவது தவறு தவறு செய்தால் அதை நினைவுபடுத்தி மறுபடியும் அந்த தவறுகளை செய்ய தவிர்க்கப்படுகிறது. 
  • நீங்கள் பிறருடைய பெயர் அந்த நாள் சம்பவங்கள் போன்றவை உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ள நினைவாற்றல் அதிக அளவில் தேவைப்படுகிறது. 
  • நீங்கள் ஆழ்ந்த உறக்கம் மேற்கொள்ளும் போது உங்களுக்கு நினைவாறறல் அதிகரிக்கும்.

நினைவாற்றலுக்கு உதவும் செயல்கள்: 

தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல்: 

நீங்கள் தவறு செய்யும் போது அதனை மீண்டும் ஞாபகப்படுத்தி தவறுகளை நீங்கள் திருத்த முயற்சி செய்ய வேண்டும். 

தொடர் பயிற்சி: 

நீங்கள் அதிக அளவு திரும்பத் திரும்ப ஒவ்வொரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலமும் மற்றும் வேலை செய்வதின் மூலமும் உங்களுக்கு அந்த விஷயமானது ஆழமான அளவில் மனதில் பதிக்கப்படுகிறது.

உறக்கம்: 

  • நீங்கள் தினமும் 7 முதல் 8 மணி நேரம் தொடர்ந்து தூங்குவதன் மூலம் உங்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கிறது.
  • இது நினைவாற்றலுக்கு முக்கியமாக உள்ளது. 

நினைவாற்றலை மேம்படுத்தும் சில உணவுகள்: 

வல்லாரைக் கீரை நெல்லிக்காய் முந்திரி பாதாம் மற்றும் பச்சை காய்கறிகள் போன்றவற்றை நீங்கள் உடலுக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உங்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கிறது. 

தியானம்: 

நீங்கள் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு சிறிது நேரம் தியானம் செய்தால் உங்களுக்கு மன கழப்பம் குறைகிறது மற்றும் இது அதிகளவு உங்களுக்கு ஞாபக சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.


புதன், 21 மே, 2025

நினைவாற்றலை உணர்த்தும் அருமையான கதை | Power Of Memory Mind

தென்புறம் என்றோர் அழகிய கிராமத்தில் ராஜதுரை எனும் பண்ணையார் இருந்தார். அவரது மகனின் பெயர் அருண். அருணின் வகுப்புத் தோழன் ராஜா. இருவரும் பத்தாம் வகுப்பில் சேர்ந்து படித்தார்கள். ராஜாவின் தந்தை முத்தையா. பண்ணையார் ராஜதுரையின் தோட்டத்தில் வேலை செய்துவந்தார்.

காலாண்டுத் தேர்வில் ராஜா முதல் மதிப்பெண் பெற்றதை அறிந்து, பண்ணையார் பொறாமை கொண்டார். ஆகவே அவர் முத்தையாவை அழைத்து. "உன் மகனுக்கு என்ன சாப்பாடு கொடுக்கின்றாய்? அவன் வகுப்பில் முதலிடத்தில் இருக்கிறானாமே!" என்று கேட்டார்.

அதற்கு முத்தையா. "ஐயா, நீங்கள் எனக்குச் சம்பளமாக கொடுக்கும் உங்கள் வயலில் விளையும் தானியங்களும், காய்கறிகளும், கீரையும்தான்" என்று பணிவாகக் கூறினார். கோபம் கொண்ட பண்ணையார், "இனி நீ என் வயலில் உள்ள தானியப் பயிர்கள், காய்கறி, கீரைகள் எதையும் உன் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. கூலியாகப் பணம் மட்டும் பெற்றுக் கொள்" என்று கட்டளையிட்டார்.

பண்ணையார் தன் மகன் அருணுக்கு தன் தோட்டத்தில் விளைந்த தானியங்களையும், காய்கறிகளையும், கீரையையும் அதிகமாகக் கொடுத்துப் பார்த்தார். ஆனால், அவன் படிப்பில் சிறிதும் முன்னேறவில்லை.

ஏனென்றால் அருணிடம் ஒரு கணினி இருந்தது. எப்போதும் அதில் ;வீடியோ கேம்ஸ்'. சமூக வலைத்தளங்கள் என அவன் நேரத்தை வீணாக்கியதால், தன் பாடப் புத்தகங்களைச் சுமையாக நினைத்தான். கவனமில்லாமல் படித்துக் கொண்டிருந்தான்.

சில மாதங்களுக்கு பிறகு, அரையாண்டுத் தேர்வுகள் வந்தன. ராஜா தேர்வுகளை அமைதியாக எழுதிக்கொண்டிருந்தான். ஆனால். அருணுக்குப் படித்தவை எதுவும் நினைவிற்கு வரவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கான பதில்கள் பாதியிலே மறந்து போயின. தேர்வறையிலே அழ ஆரம்பித்து விட்டான்.

இதைக் கண்ட ராஜா அருணுக்கு உதவ முன்வந்தான். அவன் அருணை தனியே அழைத்து, "நம் அனைவருக்கும் போதுமான நினைவாற்றலை கடவுள் தந்திருக்கின்றார். நாம் அதை முறையாகப் பயன்படுத்தினால் வெற்றிதான்" என்று கூறி. பாடத்தை நினைவில்கொள்ள கடைப்பிடிக்கும் முறைகளை அவனுக்குச் சொல்லிக்கொடுத்தான்.

அடுத்த இரண்டு மாதங்களில் அருணின் நினைவாற்றலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நம்பிக்கையோடு அரசுப் பொதுத்தேர்வுக்குத் தயாரானான். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றியும் பெற்றான்.

தான் பொறாமையால் முத்தையாவை வஞ்சித்தாலும், அவர் மகன் ராஜா அருணுக்கு உதவியதை நினைத்துப் பண்ணையார் மனம் நெகிழ்ந்தார். தன் தவறுக்காக வருந்தினார். மகிழ்ச்சியோடு முத்தையாவை, தன் பண்ணை முழுவதற்கும் கண்காணிப்பாளராக மாற்றினார். ராஜாவின் மேற்படிப்புக்கான செலவையும் ஏற்றுக்கொண்டார். இரு குடும்பங்களும் மகிழ்ந்தன.

இந்த கதையின் மூலம் நினைவுகள் ஒருவருக்கு எந்த அளவு தேவைப்படுகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.எனவே உங்களுக்கு வாழ்க்கையில் தோன்றும் சிறு சிறு நியாபகங்கள் நினைவுகள் அனைத்தையும் நீங்கள் உங்களின் மூளையில் சேகரித்துக் கொண்டு வைக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒரு டைரியிலோ அல்லது புத்தகத்தில் நீங்கள் அதை எழுதி வைக்க வேண்டும். 

நீங்கள் வாழ்க்கையில் நடந்த சிறு சிறு ஞாபகங்கள் மற்றும் வாழ்க்கையில் நடந்த சில விபத்துக்கள் மற்றும் மகிழ்ச்சி தருணங்கள் அனைத்தையும் நீங்கள் எழுதி வைக்க வேண்டும்.அதை மீண்டும் படிக்கும் பொழுது உங்களுக்கு அனைத்தும் ஞாபகத்திற்கு வருகிறது.எனவே அனைத்தையும் ஒரு புத்தகத்தில் நன்கு விரிவாக எழுதிக் கொள்ள வேண்டும். 

ஞாபகங்கள் தான் நமது வாழ்க்கையில் முக்கிய அடையாளமாக இருந்து வருகிறது.எனவே அனைவரும் படிப்பதில் அல்லது உங்கள் செயல்பாடுகளில் நீங்கள் நேர்மையான எண்ணங்களை மேற்கொள்ள வேண்டும்.ஏனென்றால் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் உங்களுக்கு ஒரு வயதான காலத்தில் நினைவுக்கு வரும் எனவே அனைவரும் நேர்மையான எண்ணங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

நினைவாற்றலுக்கு உதவும் செயல்கள்: 

தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல்: 

நீங்கள் தவறு செய்யும் போது அதனை மீண்டும் ஞாபகப்படுத்தி தவறுகளை நீங்கள் திருத்த முயற்சி செய்ய வேண்டும். 

தொடர் பயிற்சி: 

நீங்கள் அதிக அளவு திரும்பத் திரும்ப ஒவ்வொரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலமும் மற்றும் வேலை செய்வதின் மூலமும் உங்களுக்கு அந்த விஷயமானது ஆழமான அளவில் மனதில் பதிக்கப்படுகிறது.

உறக்கம்: 

  • நீங்கள் தினமும் 7 முதல் 8 மணி நேரம் தொடர்ந்து தூங்குவதன் மூலம் உங்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கிறது.
  • இது நினைவாற்றலுக்கு முக்கியமாக உள்ளது. 

நினைவாற்றலை மேம்படுத்தும் சில உணவுகள்: 

வல்லாரைக் கீரை நெல்லிக்காய் முந்திரி பாதாம் மற்றும் பச்சை காய்கறிகள் போன்றவற்றை நீங்கள் உடலுக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உங்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கிறது. 

தியானம்: 

நீங்கள் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு சிறிது நேரம் தியானம் செய்தால் உங்களுக்கு மன கழப்பம் குறைகிறது மற்றும் இது அதிகளவு உங்களுக்கு ஞாபக சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

வெள்ளி, 9 மே, 2025

சுவடிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? tamil traditonal oolaisuvadi history

இளம் பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோத்துத் தருவார். ஒரு துளையிடுவதும் இரண்டு துளையிடுவதும் உண்டு. மற்றப் பிள்ளைகள் தாங்களே செய்து கொள்ளுவார்கள். பனையேடு, சீதாள பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கம்.

மேலே சட்டமாகப் பனைமட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பார்கள்; மரச் சட்டங்களையும் அமைப்பார்கள்; செப்புத் தகட்டாலும் சட்டஞ் செய்து கோர்ப்பார்கள். அந்தச் சட்டங்களின் மேல் வர்ண மையினாற் பல வகையான சித்திரங்கள் எழுதுவதுண்டு. 

இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகித் கட்டுவார்கள். அதற்கு 'நாராசம்' என்று பெயர்.

சுவடியைக் கோக்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள். அதற்குக் கிளிமூக்கென்று பெயர்.

இப்போது அச்சுப் புத்தகங்களின் அளவில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டோ அவ்வளவு பனையோலைச் சுவடிகளிலும் உண்டு.

எழுத்தாணிகள் :

ஓலையில் எழுதுவதற்குரிய எழுத்தாணியில் பல பேதங்கள் உண்டு. எழுத்தாணியை ஊசியென்றும் கூறுவதுண்டு. மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி என்பன எழுத்தாணியின் வகைகள். ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் அமைந்ததைப் பார்த்தே பேனாக்கத்தி என்ற பெயர் வந்ததென்று தோற்றுகின்றது.

ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கெழுத்தாணிகளும் இருந்தன.

ஏடெழுதும் வழக்கம் :

ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துக்களாக இருபது முப்பது வரி வரையில் எழுதுவதற்குரிய மெல்லிய எழுத்தாணிகள் இருந்தன. நாம் இக்காலத்தில் காகிதத்தில் எழுதுவதைப் போன்ற வேகத்தோடே ஏட்டில் எழுதுவதுண்டு.

 மாணாக்கர்களுக்கு எழுதும் பழக்கம் நன்றாக உண்டாகவேண்டுமென்று ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தனித்தனியே ஏடுகளில் தாம் மேலே எழுதி அதைப்போல் எழுதிவரச் சொல்வார்கள். இதற்குச் சட்டமென்று பெயர்.

சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்குத் தூக்கு என்று பெயர். அதனை அசை என்றும் சொல்வதுண்டு.

அன்பினால் அடக்குதல் :

முற்காலத்தில் கொடிய தண்டனைகள் இல்லை. ஆசிரியர்கள் மாணாக்கர்களை அன்பினால் வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள்பால் இருந்த மரியாதை மாணாக்கர்களுக்குப் பயத்தை உண்டாக்கியது. பிழைகளை மறந்தும் புரியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.

வாதம் புரிதல் :

கல்வியில் வாதம் செய்தல் நம் நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இருந்தது. மிகச் சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாது புரிந்து தம் கல்வித் திறமையை நிலைநாட்டுவர். அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டியிருப்பரென்று மதுரைக்காஞ்சி முதலிய நூல்களால் அறிகிறோம்.

இந்த வாதம்புரியும் பழக்கம் பாடசாலைகளிலிருந்தே வளர்ச்சியுற்று வந்தது. பள்ளிக்கூடத்தில் மாணாக்கன் நூல்பயிலும் இயல்பை விளக்க வந்த பழைய சூத்திரமொன்று பலவற்றைச் சொல்லிவிட்டு,

"வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநனி இருக்கும்"

                                            -நன்னூல் 41

என்று முடிக்கின்றது. ஆட்சேப சமாதானங்கள் சொல்லிப் பழகிய பழக்கங்களே முதிர்ந்த நிலையில் வாதங்களாக வளர்ச்சியுறுகின்றன.

சுவடிகள் தயாரிக்கும் முறை என்பது பழங்காலங்களில் மனிதர்கள் அவர்களின் அறிவு இலக்கியம் மற்றும் மருத்துவம் ஜோதிடம் போன்றவற்றை அவர்கள் சுவடிகளில் பதித்து ஒரு ஆவணம் போல் வைத்திருந்தனர். இவைகள் ஓலைச்சுவடிகளாக இருந்தன. 

ஓலைச்சுவடி தயாரிக்கும் முறை: 

தேர்ந்தெடுக்கப்படும் ஓலை: 

  • நீங்கள் ஆறு முதல் பத்து மாதம் கலந்த பனை ஓலைகளை பயன்படுத்தலாம். 
  • நீங்கள் அந்த ஓலைகளை எடுத்து நடுவில் செல்லும் ஓலைகளின் நரம்புகள் நீக்கப்பட்டு அதனை ஒரே அளவாக வெட்டிக் கொள்ள கள்ள வேண்டும்.

பதப்படுத்தும் முறை: 

  • நீங்கள் வெட்டிய ஓலைகளை மரத்தின் நிழலில் காய வைக்க வேண்டும். 
  • அதனை தண்ணீரில் வேக வைக்க வேண்டும். 
  • பிறகு சங்கு அல்லது கற்களை கொண்டு தேய்க்க வேண்டும். 
  • நன்கு தேய்த்த பிறகு ஓலையானது எழுதுவதற்கு ஏற்றபடி மிகவும் பளபளப்பாக இருக்கும். 

தயார் செய்யும் முறை: 

  • நீங்கள் ஓலைகளை வளைவாக வெட்ட வேண்டும். 
  • ஒரே அளவாக வெட்டப்பட்ட ஓலைகளை துளையிட வேண்டும். 
  • துளையிட்ட வலைகளை கயிறால் கட்டி சுவடியாக அமைக்க வேண்டும்.

எழுத்துக்களை பதிக்கும் முறை: 

  • நீங்கள் எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுத்துக்களை சேர்ககலாம்.
  • கருப்பு மை போன்றவற்றை பயன்படுத்தி நீங்கள் ஓலைகளில் மிகவும் தெளிவாக எழுதிக் கொள்ளலாம். 

பாதுகாப்பது எப்படி? 

  • நீங்கள் மஞ்சள் அல்லது சிவப்பு துணிகளின் இதை கட்டி வைப்பதால் நல்லது. 
  • மரப்பெட்டிகளில் இதனை நீங்கள் பாதுகாப்பாக வைக்கலாம். 
  • பூமிக்கடியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். 
  • நீங்கள் இதனை பூஞ்சை பூச்சிகள் கரையான் போன்றவை தாக்காமல் மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்

வியாழன், 8 மே, 2025

எளிதாக படிக்க 16 வழிகள் | 16 Study tips for students

படிக்கும் மாணவர்கள் அனைவரும் எப்படி வாசிப்பது? எப்படி சரளமாக படிப்பது? எப்படி வகுப்பில் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது என்பது குறித்து நிறைய கவலைப்படுகிறார்கள். 

  • நீங்கள் எளிதாக படிப்பதற்கு சில பயனுள்ள வழிமுறைகள் உங்கள் படிப்பினை சுலபமாகவும் திறமையாகவும் செய்ய சில நடைமுறைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.நீங்கள் படிக்கும் பொழுது உங்களுடைய நினைவாற்றல் கவனக்குறைவு மற்றும் படிக்கும் ஆர்வத்தை மேம்படுத்தும் சில வழிமுறைகளை பற்றி பார்ப்போம். 
  • எளிதாக படிக்க வழிகள் என்பது நீங்கள் முட்டாள்தனமாக அதிக நேரத்தை தேவையற்ற வேலைகள் செய்வதன் மூலம் உங்களுடைய படிப்புக்கு நேரம் கிடைப்பதில்லை.எனவே நீங்கள் தேவையற்ற நேரத்தை செலவழிப்பதை விட்டுவிட்டு உங்களுடைய விழிப்புணர்ச்சிக்காக திறமைக்காக நீங்கள் அதிக அளவு படிக்க வேண்டும்.
  • இது மாணவர்களுக்கு மட்டுமல்ல தொழில் செய்பவர் மற்றும் போட்டித் தேர்வுக்கு கலந்து கொள்ள விரும்புவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் எனவே நீங்கள் காலத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். 
  • திட்டமிடுதல்: 
  • நீங்கள் தினசரி படிக்கும் பொழுது ஒவ்வொரு படத்திற்கும் நீங்கள் அட்டவணை போட்டுக்கொண்டு அதற்கான நேரம் செலவழித்து நீங்கள் திட்டமிட்டு பிடித்தால் கண்டிப்பாக உங்களுக்கு நன்கு மூளையில் பதிவேறும். 
  • நீங்கள் எந்தவித தொந்தரவும் இல்லாத இடத்தில் படித்தால் மற்றும் அமைதியான சூழலில் படித்தால் மட்டுமே உங்களுக்கு அதிக அளவு படிப்பதற்கும் உங்களுக்கு இந்த சுழல் ஏற்றபடி இருக்கும். 
  • நீங்கள் பெரிய பெரிய படங்களை சிறுசிறு பகுதிகளாக பிரித்து படித்தால் உங்களுக்கு சிறிய விளக்கு தான் இருக்கிறது என்று தோன்றும் இதன் மூலம் நீங்கள் அதிக அளவு பாடங்களை மிகவும் சுலபமாக படிக்கலாம். 
  • நீங்கள் தினமும் கண்டிப்பாக 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.இது உங்களின் நினைவாற்றலுக்கு அதிக அளவில் உதவுகிறது.மேலும் நீங்கள் 7 முதல் 8 மணி நேரம் தூங்கினால் மட்டுமே உடல் மிகவும் ஆரோக்கியமாக  இருக்கும்.ஆரோக்கியம் இருந்தால் தான் உங்களுக்கு படிப்பதற்கும் ஏற்றபடி சரியாக இருக்கும். 
  • நீங்கள் படிக்கும் போது படிப்பினை மிகவும் ஆர்வமோடும் சுவாரஸ்யமாக  மாற்றுவதற்காக சிறு சிறு விளையாட்டுகள் மைன்ட் கேம்கள் போன்றவற்றை நீங்களே தயவு செய்து மன உற்சாகம் கொண்டு படித்தால் நீங்கள் அதிகளவில் படிப்பதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
  • நீங்கள் தினசரி படிக்கும்போது முக்கிய புள்ளிகளை குறிப்பு எடுத்து படித்தால் அது மிகவும் உங்களுக்கு பயனுள்ள வகையில் அமையும். 
  • வீடியோ மற்றும் ஆடியோ மூலம் நீங்கள் பாடத்தினை பயிலும் பொழுது அது மிகவும் சுவாரஸ்யமாகவும் உங்கள் நினைவிற்கு அதிக அளவு திரும்பத் திரும்ப நினைவுக்கு வரக்கூடிய ஒன்றாகவும் இருந்து வருகிறது.எனவே நீங்கள் இந்த முறையில் பயன்படுத்தி படிப்பது மிகவும் நல்லது. 
  • நீங்கள் ஒரே பாடத்தினை படிக்கும் பொழுது உங்களுக்கு உறக்கம் அல்லது மிகவும் சோம்பேறித்தனமாக இருந்தால் நீங்கள் மிகவும் ஆர்வத்தோடு அடுத்தடுத்த படங்களை மாற்றி மாற்றி படிக்கலாம். 
  • நீங்கள் படித்த பிறகு தினசரி உங்களுக்குள்ளேயே சிறு சிறு தேர்வுகள் மற்றும் மாதிரி வினாத்தாளர்கள் நீங்களே தயார் செய்து அதனை தேர்வாக எழுதி நீங்களே அதனை திருத்தி உங்களுக்குள்ளே நீங்கள் உங்களை நிலையை அறியலாம்.

அவர்களுக்காகவே எளிதாக படிக்க வாசிக்க 16 வழிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

study tips

படித்தல் எளியதாக அமைய  

  1. வகுப்பறையில் ஆசிரியர் பாடத்தை விளக்கும்போது நன்கு கவனிக்க வேண்டும். தெளிவாகக் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.
  2. ஆசிரியர் பாடப்பகுதியை எடுத்து முடித்ததும், பாடப்பகுதி முழுவதையும் தெளிவாக வாசித்து, புரியாத பகுதிகளுக்கு விளக்கம் கேட்க வேண்டும்.
  3. கடினமான பாடப்பகுதிகளை அடையாளம்கண்டு, அதைப் பல பகுதிகளாகப் பிரித்து, எளிமையாக்கிப் படிக்க முயற்சிசெய்ய வேண்டும்.
  4. முன்னால் கற்றவற்றுடன் அல்லது தனக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுகளுடன் படிப்பவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, புரிந்து படிக்க முயலவேண்டும். ஏனெனில், அதுதான் நீண்ட நாள்கள் நினைவில் நிற்கும்.
  5. இடைவெளி இல்லாமல் படிப்பதை விடுத்து, சிறிது நேரம் ஓய்விற்காக ஒதுக்குங்கள். ஒரு பாடத்திற்கு ஒரு மணிநேரம் என்ற அளவில் கால அட்டவணை இடுங்கள்.
  6. 'பிறகு படிக்கலாம்' என்று தள்ளிப் போடாதீர்கள். கடினப் பகுதிகளை, பாடங்களை ஒதுக்காதீர்கள்.
  7. தினமும் படியுங்கள். அதனால் பாடச்சுமை குறையும்.
  8. பொழுதுபோக்குகள் அவசியம் தேவை.ஆனால்,அவை அளவுகடந்து போகும்போது படிப்பு பாதிக்கப்படுகிறது.
  9. இரவு நேரத்தில் படிப்பது நமது வழக்கம். ஆனால் விடுமுறை நாள்களில் பகலில் படிப்பதே சிறந்தது.இயற்கை ஒளியில் படிப்பதால் மனம் அடிக்கடி அலைபாய்வதில்லை.
  10. வாய்ப்புக் கிடைக்கும்போது, பாடத்தோடு தொடர்புடைய வேறு சில நூல்களை நூலகத்திலிருந்து எடுத்து வாசிப்பது, அறிவை மேம்படுத்தும்.
  11. ஒரே இடத்தில் உட்கார்ந்து படிப்பதற்கு தேவையான எல்லா பொருட்களும் உன்னைச் சுற்றி இருக்க வேண்டும்.அடிக்கடி எழுந்து நடப்பது சிந்தனையை ஒருமுகப்படுத்த உதவாது.
  12. பாடப்பகுதியை வாசிக்கும்போது முக்கிய பெயர்கள், இடங்கள், வார்த்தைகளை அடிக்கோடு இட்டு வைப்பது தேர்வு நேரத்தில் உதவியாக இருக்கும்.
  13. கடினமான பாடப்பகுதியை எளிமைப்படுத்தி, குறிப்பெடுத்து வைப்பது தேர்வு நேரத்தில் உதவியாக இருக்கும்.
  14. எந்தெந்த பாடங்களிலிருந்து நெடுவினாக்களை எழுதப் போகிறோம் என்பதைத் தீர்மானித்து, அந்தப் பாடத்திலுள்ள நெடுவினாக்களை எழுதிப் பார்ப்பது தேர்வில் வெற்றிபெற உதவியாக இருக்கும்.
  15. தேர்வு நேரங்களில் கடின வேலைகள், அலைச்சல், மிதமிஞ்சிய பொழுதுபோக்கு ஆகியவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.
  16. ஓய்வு, மெல்லிசை, அமைதியாகச் சிந்தித்தல் போன்றவை மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

வியாழன், 20 பிப்ரவரி, 2025

பறவைகள் வலசை போதல் என்றால் என்ன? What is Birds Migration?

பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன; குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர். நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.

உணவு. இருப்பிடம். தட்பவெப்பநிலை மாற்றம். இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன. நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன. பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.

பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன. சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.

பயணம் செய்யும்போது சிலவகைப் பறவைகள் இரை, ஓய்வு போன்ற தேவைகளுக்காகத் தரை இறங்கும். இடையில் எங்கும் நிற்காமல் பறந்து, வாழிடம் சேரும் பறவைகளும் உண்டு.

வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

  • தலையில் சிறகு வளர்தல்
  • .இறகுகளின் நிறம் மாறுதல்
  • உடலில் கற்றையாக முடி வளர்தல்

ஒருவகைப் பறவை வேறுவகைப் பறவையாக உருமாறித் தோன்றும் அளவிற்குக்கூடச் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

இதையும் படிக்க : தற்போது அழிந்து வரும் பறவை இனம் எது?

தமிழகத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவது பற்றி இலக்கியங்களிலும் செய்திகள் உள்ளன. ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் *நாராய், நாராய், செங்கால் நாராய்' என்னும் பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில் உள்ள 'தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.

ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு.

 கப்பல் பறவை:

சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை (Frigate bird). தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும். இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது. 

பறவைகள் வேலை செய்யும் போது பருவநிலை இனப்பெருக்கம் போன்ற காரணங்களால் பறவைகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெறுவது தான் நாம் செய்வதில் இருக்கிறோம் இது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு இயற்கையான நிகழ்வாகும்.

இந்த காரணங்களால் தான் பறவைகள் வலசை போகின்றன! 

  • பறவைகள் பெரும்பாலும் தனது இருப்பிடங்கள் சரியாக இருப்பதில்லை எனவே சிறந்த உரைவிடத்தை தேடி அது இடம்பெறுகின்றன. சிறந்த மரம் மற்றும் காடுகள் நிறைந்த சூழல் சிறந்த குடில்கள் இணைப்பதற்கு பறவைகள் இடம் மாற்றம் செய்கின்றன. 
  • பறவைகள் பெரும்பாலும் பசுமை நிறைந்த சூழலை நோக்கி செல்கிறது. இதனால் தனது இனத்தை அது அடுத்த கட்டத்திற்கு தனது இனத்தினை தொடர செய்யவும் வாழ மாற்றம் செய்கின்றது. 
  • குளிர்காலம் மற்றும் வெப்பநிலை மாற்றங்களால் பறவைகளுக்கு கடும் குளிர் வெப்பம் பணிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த இடத்தை தவிர்த்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெறுகின்றன. 
  • பறவைகள் தனது இனப்பெருக்கத்திற்காக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு பாதுகாப்பான இடத்தை தேடி தனது முட்டைகளை இடுவதற்காக இடம் பெறுகின்றன. 
  • பறவைகள் ஒரு இடத்தில் உணவு இல்லை என்றால் வேறு இடத்திற்கு உணவு தேவைக்காக இடம் பெயர்ந்து செல்கிறது.
  • இதனால் இயற்கை வளம் அதிகரிக்கிறது.
பறவைகள் எப்படி திசையை கண்டறிகிறது?
  • பறவைகள் பெரும்பாலும் புவியின் காந்தப்புலத்தை வைத்து திசைனை கண்டறிகிறது. 
  • சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் மூலமாக திசையினை கண்டறிகிறது. 
  • நிலத்தின் வாசனை ஒலி மற்றும் சில அடையாளக் குறியீடுகளை வைத்து தனது திசையினை கண்டறிந்து இடம் பெயர்கின்றது. 
  • பறவையின் உள்ளுணர்வு சார்ந்த உணர்வுகளை வைத்து அது தங்களின் இருப்பிடத்தை கண்டறிகிறது.
சுற்றுச்சூழலின் பயன்கள்: 
  • பறவைகள் இடம் பெறுவதால் விதைப்பரவல் அதிகரிக்கிறது. இதன் மூலம் சுற்றுச் சழலுக்கு அதிகளவு நன்மை உள்ளது. 
  • பறவைகள் இடம்பெயர்வதால் தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. 
  • பசுமை வள மேம்பாட்டுக்கு அதிகளவு உதவியாக உள்ளது. 
  • பறவைகள் இடம் பெறுவதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலை சரி செய்ய உதவுகிறது.

செவ்வாய், 8 அக்டோபர், 2024

இசைக்கருவிகளின் வகைகள் - music instruments types | Tamil Xpress

 சில ஒலிகள் செவிக்கு நிறைவு தந்து நம்மை மகிழ்விக்கின்றன. செவிக்கு மகிழ்ச்சியான உணர்வைத் தரும் ஒலி இசை என்று அழைக்கப்படுகிறது. 

சீரான அதிர்வுகளால் இசை உருவாக்கப்படுகிறது. இசைக்கருவிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

  • காற்றுக் கருவிகள்
  • நாணல் கருவிகள்
  • கம்பிக் கருவிகள்
  • தாள வாத்தியங்கள்

காற்றுக் கருவிகள்

ஒரு காற்றுக் கருவியில் வெற்றிடக் குழாயில் ஏற்படும் காற்றின் அதிர்வுகளால் ஒலி உருவாகிறது. இவற்றில், அதிர்வுறும் காற்றுத் தம்பத்தின் நீளத்தை மாற்றுவதன் மூலம் அதிர்வெண் மாற்றப்படுகிறது. எக்காளம், புல்லாங்குழல், ஷெஹ்னாய் மற்றும் சாக்ஸபோன் ஆகியவை நன்கு அறியப்பட்ட சில காற்றுக் கருவிகள் ஆகும்.

நாணல் கருவிகள்

நாணல் கருவியில் ஒரு நாணல் காணப்படும். ஊதப்படும் காற்றின் காரணமாக கருவியில் உள்ள நாணல் அதிர்வுக்கு உட்படுகிறது இது குறிப்பிட்ட ஒலியை உருவாக்குகிறது. நாணல் கருவிகளுக்கு எடுத்துக்காட்டு ஹார்மோனியம் வாயிசைக்கருவி (mouth organ) ஆகும். மற்றும்

கம்பிக் கருவிகள்

கம்பிக் கருவிகளில் அதிர்வுகளை உருவாக்க கம்பி அல்லது இழைகள் பயன்படுகின்றன. இந்தக்கு கருவிகளில் வெற்றிடப் பெட்டிகள் காணப்படுகின்றன. இவை கம்பிகளால் உருவாகும் அதிர்வுகளை பெருக்கமடையச் செய்ய உதவுகின்றன. அதிர்வுறும் கம்பியின் நீளத்தை மாற்றுவதன் மூலம் ஒலியின் அதிர்வெளி மாற்றப்படுகிறது. வயலின், கித்தார் மற்றும் சித்தார் ஆகியவை கம்பி கருவிகளுக்கு உதாரணமாகும்.

தாள வாத்தியங்கள்

தாள வாத்தியங்கள் தட்டும்போதும், அடிக்கும் போதும், உரசும்போதும் அல்லது மோதும் போதும் ஒரு குறிப்பிட்ட ஒலியை உருவாக்குகின்றன. இவையே மிகப் பழமையான இசைக்கருவிகள் ஆகும். உலகெங்கிலும் பல அற்புதமான தாள வாத்தியங்கள் உள்ளன.

 மத்தளம் மற்றும் தபேலா போன்ற தாள வாத்தியங்கள் தோலால் ஆன சவ்வைக் கொண்டிருக்கின்றன, அவை (ரெசனேட்டர்) எனப்படும் வெற்றுப் பெட்டியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. சவ்வு தட்டப்படும்போது அது அதிர்வடைந்து ஒலியை உருவாக்குகிறது.