நினைவாற்றலை உணர்த்தும் அருமையான கதை | Power Of Memory Mind

தென்புறம் என்றோர் அழகிய கிராமத்தில் ராஜதுரை எனும் பண்ணையார் இருந்தார். அவரது மகனின் பெயர் அருண். அருணின் வகுப்புத் தோழன் ராஜா. இருவரும் பத்தாம் வகுப்பில் சேர்ந்து படித்தார்கள். ராஜாவின் தந்தை முத்தையா. பண்ணையார் ராஜதுரையின் தோட்டத்தில் வேலை செய்துவந்தார்.

காலாண்டுத் தேர்வில் ராஜா முதல் மதிப்பெண் பெற்றதை அறிந்து, பண்ணையார் பொறாமை கொண்டார். ஆகவே அவர் முத்தையாவை அழைத்து. "உன் மகனுக்கு என்ன சாப்பாடு கொடுக்கின்றாய்? அவன் வகுப்பில் முதலிடத்தில் இருக்கிறானாமே!" என்று கேட்டார்.

அதற்கு முத்தையா. "ஐயா, நீங்கள் எனக்குச் சம்பளமாக கொடுக்கும் உங்கள் வயலில் விளையும் தானியங்களும், காய்கறிகளும், கீரையும்தான்" என்று பணிவாகக் கூறினார். கோபம் கொண்ட பண்ணையார், "இனி நீ என் வயலில் உள்ள தானியப் பயிர்கள், காய்கறி, கீரைகள் எதையும் உன் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. கூலியாகப் பணம் மட்டும் பெற்றுக் கொள்" என்று கட்டளையிட்டார்.

பண்ணையார் தன் மகன் அருணுக்கு தன் தோட்டத்தில் விளைந்த தானியங்களையும், காய்கறிகளையும், கீரையையும் அதிகமாகக் கொடுத்துப் பார்த்தார். ஆனால், அவன் படிப்பில் சிறிதும் முன்னேறவில்லை.

ஏனென்றால் அருணிடம் ஒரு கணினி இருந்தது. எப்போதும் அதில் ;வீடியோ கேம்ஸ்'. சமூக வலைத்தளங்கள் என அவன் நேரத்தை வீணாக்கியதால், தன் பாடப் புத்தகங்களைச் சுமையாக நினைத்தான். கவனமில்லாமல் படித்துக் கொண்டிருந்தான்.

சில மாதங்களுக்கு பிறகு, அரையாண்டுத் தேர்வுகள் வந்தன. ராஜா தேர்வுகளை அமைதியாக எழுதிக்கொண்டிருந்தான். ஆனால். அருணுக்குப் படித்தவை எதுவும் நினைவிற்கு வரவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கான பதில்கள் பாதியிலே மறந்து போயின. தேர்வறையிலே அழ ஆரம்பித்து விட்டான்.

இதைக் கண்ட ராஜா அருணுக்கு உதவ முன்வந்தான். அவன் அருணை தனியே அழைத்து, "நம் அனைவருக்கும் போதுமான நினைவாற்றலை கடவுள் தந்திருக்கின்றார். நாம் அதை முறையாகப் பயன்படுத்தினால் வெற்றிதான்" என்று கூறி. பாடத்தை நினைவில்கொள்ள கடைப்பிடிக்கும் முறைகளை அவனுக்குச் சொல்லிக்கொடுத்தான்.

அடுத்த இரண்டு மாதங்களில் அருணின் நினைவாற்றலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நம்பிக்கையோடு அரசுப் பொதுத்தேர்வுக்குத் தயாரானான். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றியும் பெற்றான்.

தான் பொறாமையால் முத்தையாவை வஞ்சித்தாலும், அவர் மகன் ராஜா அருணுக்கு உதவியதை நினைத்துப் பண்ணையார் மனம் நெகிழ்ந்தார். தன் தவறுக்காக வருந்தினார். மகிழ்ச்சியோடு முத்தையாவை, தன் பண்ணை முழுவதற்கும் கண்காணிப்பாளராக மாற்றினார். ராஜாவின் மேற்படிப்புக்கான செலவையும் ஏற்றுக்கொண்டார். இரு குடும்பங்களும் மகிழ்ந்தன.

இந்த கதையின் மூலம் நினைவுகள் ஒருவருக்கு எந்த அளவு தேவைப்படுகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.எனவே உங்களுக்கு வாழ்க்கையில் தோன்றும் சிறு சிறு நியாபகங்கள் நினைவுகள் அனைத்தையும் நீங்கள் உங்களின் மூளையில் சேகரித்துக் கொண்டு வைக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒரு டைரியிலோ அல்லது புத்தகத்தில் நீங்கள் அதை எழுதி வைக்க வேண்டும். 

நீங்கள் வாழ்க்கையில் நடந்த சிறு சிறு ஞாபகங்கள் மற்றும் வாழ்க்கையில் நடந்த சில விபத்துக்கள் மற்றும் மகிழ்ச்சி தருணங்கள் அனைத்தையும் நீங்கள் எழுதி வைக்க வேண்டும்.அதை மீண்டும் படிக்கும் பொழுது உங்களுக்கு அனைத்தும் ஞாபகத்திற்கு வருகிறது.எனவே அனைத்தையும் ஒரு புத்தகத்தில் நன்கு விரிவாக எழுதிக் கொள்ள வேண்டும். 

ஞாபகங்கள் தான் நமது வாழ்க்கையில் முக்கிய அடையாளமாக இருந்து வருகிறது.எனவே அனைவரும் படிப்பதில் அல்லது உங்கள் செயல்பாடுகளில் நீங்கள் நேர்மையான எண்ணங்களை மேற்கொள்ள வேண்டும்.ஏனென்றால் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் உங்களுக்கு ஒரு வயதான காலத்தில் நினைவுக்கு வரும் எனவே அனைவரும் நேர்மையான எண்ணங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

நினைவாற்றலுக்கு உதவும் செயல்கள்: 

தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல்: 

நீங்கள் தவறு செய்யும் போது அதனை மீண்டும் ஞாபகப்படுத்தி தவறுகளை நீங்கள் திருத்த முயற்சி செய்ய வேண்டும். 

தொடர் பயிற்சி: 

நீங்கள் அதிக அளவு திரும்பத் திரும்ப ஒவ்வொரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலமும் மற்றும் வேலை செய்வதின் மூலமும் உங்களுக்கு அந்த விஷயமானது ஆழமான அளவில் மனதில் பதிக்கப்படுகிறது.

உறக்கம்: 

  • நீங்கள் தினமும் 7 முதல் 8 மணி நேரம் தொடர்ந்து தூங்குவதன் மூலம் உங்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கிறது.
  • இது நினைவாற்றலுக்கு முக்கியமாக உள்ளது. 

நினைவாற்றலை மேம்படுத்தும் சில உணவுகள்: 

வல்லாரைக் கீரை நெல்லிக்காய் முந்திரி பாதாம் மற்றும் பச்சை காய்கறிகள் போன்றவற்றை நீங்கள் உடலுக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உங்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கிறது. 

தியானம்: 

நீங்கள் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு சிறிது நேரம் தியானம் செய்தால் உங்களுக்கு மன கழப்பம் குறைகிறது மற்றும் இது அதிகளவு உங்களுக்கு ஞாபக சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்