படைப்பாற்றல் வெளிப்படும் சூழல்கள்:
ஒன்றைப் பார்க்கும் பார்வையும், உணரும் முறையும்தான் படைப்பையும் படைப்பாளரையும் உருவாக்குகிறது.
நெகிழும் நெஞ்சம் கொண்டவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் அதிகம் பாதிப்பு அடைபவர்கள், பிறரது உள்ளத்தைக்கூட ஆழமாக உற்றுப்பார்த்து தெரிந்தவர்கள். கற்பனைத்திறன் மிகுந்தவர்கள் படைப்பாளர்களாகப் பரிணமிக்கிறார்கள்.
"ஒரு வாசகர் தனது தீவிர வாசிப்பால் மிகச் சிறந்த படைப்புகளோடு, மோதல்கள் நிகழ்த்துவதால், படைப்பு ஊற்றுக்கண் திறக்கிறது. வாசகரும் படைப்பாளியாக மாறுகிறார்" என்கிறார் எழுத்தாளர் சுந்தர ராமசாமி.
கல்லை எல்லோரும் பார்க்கிறார்கள். படைப்பாளர் மட்டும் அதற்குள் சிலையைப் பார்க்கிறார், சிற்பியாகிறார்.
ஒருமுறை கன்னியாகுமரி கடற்கரையிலே, ஒரு வசதியான வட இந்திய மனிதர் இளநீர் குடித்துவிட்டு, எறிந்துவிட்டுப் போனார்.
சற்று அப்பால் அமர்ந்திருந்த ஒரு சீன நாட்டுப் பெண் அதை எடுத்து, நார் நாராக உரித்து எடுத்தார். சிரட்டையும் சிறிது நாருமாக இருந்த உள்பாகத்தைச் சிறிய கத்தியால் வடிவமாற்றம் செய்தார்.
ஏற்கனவே உரித்து வைத்திருந்த நாரை ஆங்காங்கே திணிக்கவும், பின்னல் போட்டுச் சுற்றவும் செய்தார்.
'எந்தப் பொருள் எடுத்தாலும் பத்து ரூபாய்' கடைக்குப் போய், ஆறு நிறம்கொண்ட குழந்தைகள் பயன்படுத்தும் 'பெயின்டை' வாங்கி வந்தாள். பதினைந்தே நிமிடத்தில் ஓர் ஆணும், பெண்ணும் கைகுலுக்குவது போன்ற படைப்பை உருவாக்கினார். அருகில் இருந்த சுவரில் வைத்து அழகு பார்த்தார். பலரும் பார்த்துப் பாராட்டினர்.
இளநீரைக் குடித்து எறிந்துவிட்டு, புண்ணியத் தலங்களுக்குப் போய்த் திரும்பிய வட இந்தியப் பயணியும் அதை வேடிக்கை பார்த்தார். "அழகாக இருக்கிறதே, எங்கு வாங்கினீர்கள்?" என்று அப்பெண்ணிடம் வினவினார். புன்னகைத்த அப்பெண்ணோ. "உங்களுக்கு வேண்டுமானால் இருநூறு ரூபாய்க்குத் தருகிறேன்" என்றார். அவர் பேசாமல் இருநூறு ரூபாய் கொடுத்து அதை வாங்கிச் சென்றார்.
ஒருவர் குப்பையில் எறிந்தது ஒரு படைப்பாளியின் கையில் கிடைத்தபோது, அது மாபெரும் கலைப் படைப்பாக உருவெடுத்து விடுகிறது. ஆகாது என்று ஒதுக்கப்பட்ட மனிதர்கள் கூட, நல்ல சிற்பிகளின் செதுக்குதல்களால் படைப்பாளர்களாகப் பரிணமிக்க முடியும்.
மேலும் படைப்பாற்றல் என்பது புதிய யோசனைகள் பொருட்களை உருவாக்கும் திறன் மற்றும் நம்முடைய புதிய கருத்துக்கள் ஆகும். இது மனிதர்களின் சிந்தனை திறன் ஆற்றல் மற்றும் பிரச்சனைகளை எதிர்களும் திறன் போன்றவை வெளிப்பாடாகும். பழைய பாடல் என்பது வாழ்க்கையின் பல துறைகளிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. இது மனிதர்களின் ஐந்து அறிவுத்திறன் கற்பனைத் திறன் புதிதாக யோசிக்கும் திறன் ஆகும். இது சமூக வளர்ச்சிக்கும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.
எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?
- படைப்பாற்றலை நாம் கலை மற்றும் இலக்கியத்தில் பயன்படுத்தலாம்.
- பொறியியல் மற்றும் அறிவியலில் பயன்படுத்தலாம்.
- வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதலில் பயன்படுத்தலாம்.
- கல்வி மற்றும் அதற்கான பயிற்சியில் பயன்படுத்தலாம்.
- தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் பயன்படுத்தலாம்.
- புதிதாக எழுத்து திறனின் நாம் பயன்படுத்தலாம்.
எப்படி படைப்பாற்றலை வளர்ப்பது?
- நாம் புதிதாக புத்தகங்களை படிக்க வேண்டும் மற்றும் சிறுகதைகள் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை நாம் படித்து படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- நாம் அனைவரிடமும் கேள்வி எழுப்ப வேண்டும் ஏன் எப்படி எப்படி வந்தது என சிந்தித்து அனைவரிடமும் கேள்வி கேட்க வேண்டும்.
- நம் மனதில் தோன்றும் கற்பனைகள் கவிதைகள் குறிப்புகள் கதைகள் போன்றவற்றை நீங்கள் எழுத்தாக எழுத வேண்டும்.
- ஓவியம் இசை மற்றும் கைத்தொழில் போன்றவற்றில் நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும்.
- நீங்கள் அனைத்திலும் பழையதை ஒதுக்கி புதிய வழியில் அனைத்தையும் யோசிக்க வேண்டும்.
- நீங்கள் இயற்கையை கலாச்சாரம் புதிய மனிதர்கள் போன்றவற்றை புதிதாக பார்க்க வேண்டும் அதிகமாக சுற்றுலா செல்ல வேண்டும் புதிய புதிய இடத்தை பார்க்க வேண்டும் மேலும் நீங்கள் அதிக அனுபவம் பெற வேண்டும்.
- நீங்கள் அனைவரும் குழுவாக செயல்படும் பது உங்களுக்கு புதிய புதிய யோசனைகள் பிறக்கும்.
- உங்களுக்கு வரும் பிரச்சனைகளை சிக்கல்களை புதுமையான முறையில் கையாண்டு அதை சுலபமாக தீர்க்க வேண்டும்.
- நீங்கள் உங்களின் தனிப்பட்ட திறமைகளை அனைத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.
- நீங்கள் புதிய புதிய தொழில்களை உருவாக்க வேண்டும் அதில் கடுமையாக உழைத்து சாதிக்க வேண்டும்.
- வாழ்க்கையில் இதன் பயன்பாடு:
- மாணவர்கள் அனைவரும் பாடங்களை புதுமையாக புரிந்து கொள்ள வேண்டும் பரிட்சை எழுத வேண்டும்.
- ஆசிரியர்கள் அனைவரும் வகுப்பில் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பிக்க வேண்டும் அவர்களுக்கு ஆர்வம் தூண்டும் வகையில் ஆசிரியர்கள் அனைவரும் இவர்களுக்கு கல்வியை கற்பிக்க வேண்டும்.
- தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் அனைவரும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும்.
- மருத்துவர்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தால் அதிகளவு மனிதர்களுக்கு மருத்துவத்தின் மீது நம்பிக்கை ஏற்படும்.
0 கருத்துகள்