தற்போது அழிந்து வரும் பறவை இனம் எது? Which bird species is currently endangered?

தற்போது அழிந்து வரும் பறவை இனங்கள் தமிழ்நாட்டில் மற்றும் இந்திய அளவில் பல பறவை இனங்கள் இருக்கின்றது. நடப்பாண்டில் மட்டும் நடந்த கணக்கெடுப்பில் 37 வகை பறவை இனங்கள் அழிந்து வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பறவைகள் சுற்றுச்சூழலை சமநிலையை பேணி காப்பதற்கு முக்கிய பங்கு வைத்து வருகிறது. அவற்றை நாம் பாதுகாத்து வரவேண்டும். 

பறவைகளை சரணாலயங்கள் மற்றும் வனத்துறை கண்காணிப்பு மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பு மூலம் நாம் இதனை பாதுகாத்து வர வேண்டும். இல்லையென்றால் சுற்றுச்சூழலுக்கு அதிகளவு ஆபத்துகள் ஏற்படும். தற்போது உலகம் முழுவதும் பறவையினங்கள் அழிந்து வருதல் அதிகமாகிறது இது கவலைக்கிடமான நிலைக்கு நம்மை தள்ளப்படுகின்றன.

பறவைகளின் அழிவிற்கான காரணங்கள்: 

  • நகரமயமாக்கல்,விவசாயம் மற்றும் காடுகளை அழித்தல் போன்ற காரணங்களால் பறவைகளின் வாழிடம் அழிக்கப்படுவதால் பறவை தினமும் அழிந்து வருகிறது. 
  • காலநிலை மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றங்களால் பறவையின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.இதனால் பறவையின் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. 
  • காற்று மாசுபாடு மற்றும் வேட்டையாடுதல் காரணமாக மனித நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்து வருகிறது.இதனால் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. 
  • மின்கம்பிகள் மற்றும் சில ஒயர்களால் பறவைகள் மோதுவதன் மூலம் பறவைகளுக்கு உயிர் இழப்பும் ஏற்படுகிறது.இதனால் பறவையை நாங்கள் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது.

பாதுகாப்பதற்கான சில நடவடிக்கை: 

  • மத்திய அரசானது "பஸ் ஸ்ராப் பாதுகாப்பு திட்டம்" என்ற திட்டத்தினை வனத்துறை மூலமாக நடைமுறைப்படுத்தியது. 
  • பறவைகள் மின் கம்பங்களில் மோதுவதை தவிர்ப்பதற்காக மின்கோடுகளை நிலத்தடியில் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 
  • திருநெல்வேலி பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட நிலங்களை அமைப்பதற்காக பாதுகாப்பான உயிரியல் பூங்காக்கள் அமைத்தல். 
  • முட்டையை எடுத்து பராமரிக்கும் செயற்கை வளர்ப்பு முறைக்காக இனப்பெருக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
  • உள்ளூர் மக்களை பறவைகளை பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவை இனம் சிட்டு குருவி இனம் தான் என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும். 

உருவத்தில் சிறிய இந்தப் பழுப்புநிறப் பறவையைப் பார்த்தவுடனே ஆண், பெண் வேறுபாட்டை உணர முடியும். ஆண்குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும். உடல்பகுதி அடர்பழுப்பாக இருக்கும். பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.


2 சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு 3 நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.

துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத்தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.

தானியங்கள். புழுபூச்சிகள், மலர் அரும்புகள். இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக் குருவிகளின் உணவாகும். சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும்.

 அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும். சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும். சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும். அதனால்தான் விரைவாகச் செல்பவனைச் சிட்டாய்ப் பறந்து விட்டால் என்று கூறுகிறோம். பறவைகளை நாம் பாதுகாப்பதன் மூலம் உனது சுற்றுச்சூழலுக்கு மிகவும் அதிக நன்மைகளை பறவைகள் குறித்து வருகிறது பறவைகளால் தான் சுற்றுச்சூழல் அதிக அளவில் இருக்கிறது இல்லையென்றால் மரங்கள் செடிகள் கொடிகளின் எண்ணிக்கை எப்போது குறைந்திருக்கும் எனவே நீங்கள் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றால் பறவைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதை நீங்கள் ஆணித்தனமாக புரிந்து கொள்ள வேண்டும் எனவே பறவைகளை நாம் பாதுகாத்து வர வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணங்கள் :

  • மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவிக் குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைப்பதில்லை.
  • நவீன கட்டடங்கள் குருவிகள் கூடு கட்ட ஏற்றவையாக இல்லை.
  • தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப் படுகின்றன. எனவே சிட்டுக்குருவிகள் வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன.
  • சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர்ச்செடிகளும் இல்லை.
  • உணவுக்கும், இருப்பிடத்திற்கும் சிட்டுக்குருவிகளுடன் மற்ற பறவைகள் போட்டியிடுகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்