நமது தமிழ் சினிமாவில் நிறைய நல்ல திரைப்படங்களை தமிழ் நடிகர்கள் தவற விட்டு அந்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று கொண்டாடப்பட்டது.
அப்படிப்பட்ட தமிழ் நடிகர்களின் திரைப்படங்களைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
1. முதலாவதாக, நடிகர் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த கஜினி திரைப்படம் தான். இந்த படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்று சூர்யாவுக்கு சிறந்த நடிகர் அந்தஸ்தை பெற்று தந்தது. மேலும் இந்த திரைப்படம் இந்தியில் அமீர் கானை வைத்து ரீமிக்ஸ் செய்து அங்கேயும் வெற்றி பெற்றது.
இந்த கஜினி திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடிகர் அஜித் நடிக்க இருந்தாராம். அப்போது கஜினி என்ற பெயர் இல்லை அதற்கு மாற்றாக மிரட்டல் என அந்த படத்துக்கு பெயர் வைக்கப்பட்டிருந்தது.
2. இரண்டாவதாக, 1995 ஆம் ஆண்டு வெளிவந்த இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பம்பாய் திரைப்படம் தான். இந்த படத்தில் ஆரம்பத்தில் சீயான் விக்ரம் நடிக்க இருந்து அதற்கான போட்டோ ஷூட் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் வேறு படத்தில் நடித்து கொண்டிருந்த விக்ரம் இந்த படத்திற்காக தாடி எடுக்க மறுத்துவிட்டாராம்.
ஆனால் மணிரத்தினம் கண்டிப்பாக இந்த படத்தில் ஹீரோ தாடி எடுத்து தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் நடிகர் அரவிந்த் சுவாமியை வைத்து படத்தை எடுத்து முடித்து அதில் மிகப்பெரிய வெற்றியும் பார்த்து வட்டார்.
3. மூன்றாவதாக, தற்போது பிரபலமாக கருதப்படும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு நடிகர் அஜித்தை வைத்து தீனா என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். அவரது முதல் படத்தில் தீனா மிகப்பெரிய வெற்றி பெற்று வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
ஆனால் இந்த படத்தின் கதையை முதன் மதலில் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் விஜய்க்கு தான் கூறியிருந்தாராம் ஆனால் எதிர்பாராத விதமாக விஜய் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.
4. நான்காவதாக, 2008 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமார் அவரே இயக்கி நடித்த திரைப்படம் தான் 'சுப்பிரமணியபுரம்'. இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று திரையரங்கை கலக்க வைத்தது.
இந்த படத்தில் நடிகர் ஜெய் நடிக்க இருந்த வேடத்தில் பாக்கியராஜ் அவரது மகனான சாந்தனு பாக்யராஜ் நடிக்க இருந்ததாகவும் பாக்கியராஜ் இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என கூறி விடவே சாந்தனு நடிக்க மறுத்துவிட்டாராம்.
ஆனால் இன்றுவரை சாந்தனு வேற எந்த திரைப்படத்திலும் வெற்றியை காணவில்லை.
5. 2011 ஆம் ஆண்டு இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த கோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தில் ஆரம்பத்தில் நடிகர் சிம்பு தான் நடித்து வந்தார். பாதி திரைப்படம் முடிவடைந்த நிலையில் திடீரென சிம்பு இந்த திரைப்படத்தில் இருந்து விலகிவிடவே அவருக்கு பதிலாக ஜீவா நடித்து இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
6. 2005 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் சண்டக்கோழி. இந்த திரைப்படத்தின் கதையை முதன் முதலில் இயக்குனர் லிங்குசாமி நடிகர் விஜய்யிடம் தான் கூறினாராம் கதையை கேட்ட விஜய் முதல் பாதி பிடித்ததாகவும் இரண்டாவது பாதி பிடிக்காததாக கூறிவிட்டு படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
7. 2000 ஆம் ஆண்டில் இயக்குனர் ராஜு மேனன் இயக்கத்தில் மம்முட்டி அஜித் தபு ஐஸ்வர்யா நடித்த மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் கண்டு கொணடேன் கண்டு கொண்டேன் இந்த படத்தின் கதையை முதன் முதலில் நடிகர் பிரசாந்த் இடம் கூறி அவர் நடிக்க இருந்ததாகவும் பிரசாந்த் கதாநாயகியாக ஐஸ்வர்யாவை கேட்க அதற்கு இயக்குனர் மறுத்து விடவே பிரசாந்த் ஒதுங்கி விட்டார்.
0 கருத்துகள்