பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் - அண்ணாமலை உருட்

"பாஜகவை மிகப்பெரிய வெற்றி பெற வைப்பதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று தமிழக பாஜக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இந்த 2024-ஆம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பாஜக கட்சியுடன் மோதுகின்றனர்.

அதனையொட்டி தமிழகத்திலும் பல அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. திமுக நிறைய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பல  அரசியல் கட்சிகள் பெரிய பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கிறது. சில கட்சிகள் யாருடனும் கூட்டணி வைக்காமல் ஜெயித்து விடலாம் என்று நோக்கத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் கட்சி தொடங்கிய தளபதி விஜய் அவர்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் நிற்க போவதில்லை என்றும் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நிற்க போவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். கூட்டணி வைத்தது மட்டுமல்லாமல் தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் இணைந்து உழைப்பதாக அறிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் பாமக ஒருங்கிணைப்பாளர் அன்புமணி ராமதாஸ் 
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் கூட்டணி வைக்கப் போவதாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

இது மட்டுமின்றி மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் உலகநாயகன் கமலஹாசன் திமுக கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக அறிவித்துவிட்டு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுகவுக்கு எதிராக பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் நடிகர்களின் பல கட்சிகள் மற்றும் பல அரசியல் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் பாஜக ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலைக்கு மேலும் பலம் சேர்ந்ததாக ஆகிவிட்டது.

 அதனால் தைரியமாக பல்வேறு மீடியாக்களில் பாஜக தான் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று உறுதியாக கூறி வருகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்