மூச்சுப் பயிற்சிகளும், உடற்பயிற்சிகளும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் உதவுகின்றன.
உடலில் உள்ள அனைத்து மண்டலங்களும், உடல் உறுப்புகளும், தேவையான உயிர்ச் சக்தியைப் பெற்று இயங்குவதற்கு மிக அவசியமாக இருப்பது மூச்சுப்பயிற்சி. இதை யோகாசனப் பயிற்சியில் பிராணயாமம் என்று சொல்வார்கள்.
பிராண + இயமம் என்றால் உடலுக்குத் தேவையான உயிர்க்காற்று, சக்தியை அளிக்கும் ஒழுக்க நெறி ஆகும். பிராண சக்தி என்பது உடலுக்கும், உயிருக்கும் ஆன மின்சக்தி என்றும் பொருள் கொள்ளலாம்.
நாம் உண்ணும் உணவின் மூலமும், சுவாசத்தின் மூலமும் கிடைக்கும் பிராண சக்தியை வைத்தே நாம் உயிர் வாழ்கிறோம். இந்தப் பிராண சக்தி நம்முள் குறைகின்றபோது, அது நோய்க்கு வித்திடுகிறது.
சித்தர்கள் இந்தப் பிராணயாமக் கலையை 'சரப்பயிற்சி' என்று அழைக்கிறார்கள்) இந்தச் சரப்பயிற்சியின் மூலம் நாடி நரம்புகளைச் சுத்தம் செய்து, பிராண சக்தியை உடலில் தேக்கி, முழுமையான ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சரப்பயிற்சியின் பயன்கள் :
- சரப்பயிற்சியை முறையாகச் செய்வதன் மூலம் நாடி நரம்புகள் சுத்தமாகும்.
- நரம்பு மண்டலம் வலுவடையும்.
- இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரக உறுப்புகள் நன்கு இயங்கும்.
- மனதில் அழுத்தம் குறையும்.
- உடல் எடை குறையும்.
- மனம் அலைபாயும் தன்மையை விடுத்து, கட்டுக்குள் அடங்கும்.
- இதனால் நாம் திட்டமிடும் செயல்களைச் சரிவரச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.
நாம் ஒருநாளில் 21,600 முறை சுவாசிக்கிறோம். இதில் 7,200 சுவாசங்கள் வெறுமனே வீணாக்கப்படுகின்றன. நாம் அவற்றை விரயம் செய்கின்றோம். இவ்வாறு விரயமாகும் பிராண சக்தியை பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) மூலம் சேமித்தால் நல்வாழ்வுக்கு சிறப்பான அடித்தளத்தை நாம் அமைத்துக்கொள்கிறோம் என்று சொல்லலாம்.
மூச்சு பேச்சு என்பது பல அற்புதமான நன்மைகளை தரக்கூடிய மன ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய எளிய வகை உடற்பயிற்சி ஆகும் நாம் இதற்கு சில நிமிடங்களை ஒதுக்கினால் பல நன்மைகளை நாம் அனுபவிக்கலாம்.
மனநல நன்மைகள்:
- நாம் மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் நமது மன அழுத்தம் குறைகிறது மேலும் உடலில் உள்ள கார்டி சோல் அளவை குறைத்து அமைதியான மனநிலையை ஏற்படுத்துகிறது.
- நமது உடலின் கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது இது மூளைக்கு ஆக்சிஜனை அதிகரித்து தெளிவான சிந்தனைக்கு உதவுகிறது.
- நமது உடலில் பதட்டம் குறைந்து மனநிலையை சீராக்கும் மன அமைதிக்கு உதவுகிறது.
- உற்சாகம் மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு செயல்படவும் உதவுகிறது.
கவனிக்க வேண்டியது!
- உங்களின் உணவுக்குப் பிறகு நீங்கள் மூச்சுப் பயிற்சி நீங்கள் செய்யக்கூடாது ஏனென்றால் இது செரிமான சீர்கேட்டுக்கு வழிவகுக்கும்.
- நமது உடல் வலிக்கும்போது நீங்கள் பயிற்சி தவிர்க்க வேண்டும் ஏனென்றால் இது மூச்சு திணறல் ஏற்பட்டு வழி வகுக்குகிறது.
- நீங்கள் மூச்சு பயிற்சியினை மிகவும் மெதுவாக செய்ய வேண்டும் இல்லை என்றால் உங்களுக்கு தலை சுற்றல் மற்றும் சில பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
- நீங்கள் உங்கள் கையில் தண்ணீர் வைத்துக் கொள்வது நல்லது ஏனென்றால் சோர்வு இருந்தால் நீங்கள் சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு பிறகு மூச்சு பயிற்சியை மேற்கொள்ளலாம்.
- நீங்கள் தயக்கமாக்கும் வரை ஆரம்பத்தில் சிறிது நேரம் மட்டுமே செய்ய வேண்டும் பிறகு நீங்கள் உங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம் அதிக நேரம் செய்வதை தவிர்க்கலாம்.
எப்போது செய்ய வேண்டும்?
நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் உடலும் மனமும் சுத்தமாக இருக்கும் நேரத்தில் நீங்கள் மூச்சு பயிற்சியினை செய்யலாம்.
பிறகு மாலை நேரங்களில் வேலை மட்டும் படித்த பிறகு மன அழுத்தம் அதிகமாக இருந்தால் நீங்கள் மூச்சு பயிற்சி செய்தால் மன நிம்மதி அளிக்கும்.
தினமும் 5 முதல் 15 நிமிடம் தொடர்ந்து செய்தால் போதுமானது.
உங்களின் மூளை அமைதி வரும் மற்றும் உங்களை ஞான நிலைக்கு அழைத்துச் செல்ல மூச்சி பயிற்சி உதவியாக இருக்கும்.
நீங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் தான் உங்களுடைய வேலை மற்றும் மற்ற செயல்பாடுகள் சீராக இருக்கும்.எனவே நீங்கள் உங்கள் உடலினை மிகவும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள மூச்சுப் பயிற்சியும் ஒரு வகையில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.எனவே "நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்" என்ற கருத்திற்கு ஏற்ப நீங்கள் நோய் நொடி என்று வாழ வேண்டும்.
0 கருத்துகள்