Page Nav

TRUE

Grid

GRID_STYLE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE

Classic Header

{fbt_classic_header}

Classic Header

{fbt_classic_header}

Breaking News:

latest

கேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து நன்மைகள்

  கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா? காரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு.  கண் ...

  கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

காரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு. 

கண் பார்வை அதிகரிக்கும் காரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது.

என்றும் இளமையாக காரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். 

இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்துவரலாம். உங்கள் மேனி எப்போதும் பளபளப்பாக இருக்க கரட் சாப்பிடுங்கள்.

மாரடைப்புக்கு குட்பை

கரட்டில் பீட்டா கரோட்டின் மட்டுமின்றி ஆல்பா கரோட்டின், லுட்டின் ஆகியவையும் இருக்கின்றன. கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும், கொழுப்பு குறைவது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக பசியும் அடங்கும். இதனால் இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் மாரடைப்பு முதலான இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது.

புற்று நோய்க்கு டாட்டா 

காரட்டில் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை இருக்கிறது. இவை புற்று நோய் வருவதற்கான வைபுகளை குறைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். எனவே நுரையீரல் புற்றுநோய், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

பள பள பற்கள்

காரட் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிகம் சுரப்பதின் காரணமாக பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும். கொஞ்சம் கடினமாக இருக்கும் கரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பற்களில் உள்ள அழுக்கும் நீங்குகிறது. இனி தினமும் ஒரு காரட் கடிக்கலாம் தானே!

கருத்துகள் இல்லை