திருபுவனம் அஜித் குமார் வீட்டில் விஜய்! அடுத்த அதிரடி திட்டம்

ஒரு கோவிலில் பெண்ணின் நகையை திருடியதாக கூறி அங்கு காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞரை விசாரிப்பதற்காக அழைத்துச் சென்று காவல்துறையினர் கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்து அடித்தே கொன்றது தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித் குமார்.  ஒரு வாரத்திற்கு முன்பு கோவிலுக்கு வந்த நிகிதா என்கிற பெண் தனது காரை கோவிலின் அருகில் ஓரமாக விடும்படி கார் சாவியை அஜித்குமாரிடம் கொடுத்துள்ளார். 

அஜித்குமாரும் அந்த காரை அந்தப் பெண்மணி கூறிய இடத்தில் ஓரமாக நிறுத்தி வைத்தார். அதற்குப் பிறகு கோவிலில் இரந்து வெளிய வந்து நிகிதா தனது காரில் வைத்திருந்த ஒன்பது சவரன் தங்க நகை காணவில்லை என்று காவல்துறையில் அஜித்குமாரின் மீது புகார் அளித்தார். 

அதன் பிறகு வேகமாக விரைந்து வந்த காக்கி உடை இல்லாத மாற்று உடையில் வந்த காவல்துறையை சேர்ந்த 5 பேர் அஜித் குமார் தனியாக அழைத்துச் சென்று கோவிலில் பின்னால் உள்ள ஒரு பழைய கட்டிடத்தின் உள்ளே சரமாரியாக அஜித்குமாரைத் தாக்கி விசாரணை என்ற பெயரில் கொன்று விட்டார்கள். 

இந்த துயர சம்பவத்தைப் பற்றி தமிழகமே பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. அனைத்து அரசியல் தலைவர்களும் திமுக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 

இந்த நிலையில் அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சென்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். அது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் நிவாரண உதவி வழங்கியுள்ளார். தமிழகத்தில் எந்த ஒரு துயர சம்பவமும் நடந்தாலும் தளபதி விஜய் மட்டுமே அனைவரது இல்லத்திற்கும் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக காவல் நிலையத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்க்கப் போவதாகவும் திரிபுவனம் அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி வேண்டி வரும் ஜூலை 12ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

அதன்படி நேரில் சென்று திமுக அமைச்சர் உள்ளிட்டோர் அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்கள். தொலைபேசி வழியாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அஜித் குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். 

அதன் பிறகு அந்த குடும்பத்தில் மூன்று சென்ட் நிலம் கொடுத்து என்பது கிலோமீட்டருக்கு அப்பால் அஜித்குமார் தம்பிக்கு அரசு வேலை வழங்கியுள்ளது. இனி கடுமையாக சாடிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் "பணம் கொடுத்தால் அரசு வேலை கொடுத்தால் இழந்த உயிர் திரும்ப வருமா? நீங்கள் சாதாரணமாக மன்னிப்பு கேட்டு விட்டீர்கள்? இதை எப்படி எளிதாக கடந்து செல்ல முடியும்? திரிபுவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும்" என்று ஒருபுறம் நாம் தமிழர் கட்சி போராடி வருகிறது.

இது மட்டுமல்லாமல் திரிபவனம் அஜித் குமார் இறப்பிற்கு நீதி கேட்டு தளபதி விஜய் ஜூலை பன்னிரண்டாம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தலைவர் விஜய் தமிழக வெற்றிக் கழக தோழர்களுடன் சேர்ந்து அப்போது பேசிய தளபதி விஜய் பிறந்த அஜித்குமார் மரணத்திற்கு நீதியை வேண்டும்! அவரது குடும்பத்திற்கு நீங்கள் தொலைபேசி வாயிலாக மன்னிப்பு கேட்டீர்கள்? ஆனால்  இதுவரை காவல் நிலையத்தில் இறந்த அனைவரின் குடும்பத்திற்கும் நீங்கள் மன்னிப்பு கேட்டீர்களா? என்று சிறுபிள்ளைத்தனமாக விஜய் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் "தம்பி விஜய் கூறியது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. மரணத்திற்கு நீதி கேட்டு போராடியதில் தவறில்லை ஆனால் இறந்தவர் குடும்பத்திற்கு மன்னிப்பு கேட்டீர்கள் மற்ற குடும்பத்திற்கு மன்னிப்பு கேட்டீர்களா என்றெல்லாம் கேட்பது வேடிக்கையாக உள்ளது. மன்னிப்பு கேட்டால் இறந்த உயிர் திரும்பி வந்துவிடுமா? நமக்கு தேவை முறையான நீதியும் கடுமையான தண்டனையும் தான். அதைக் கேட்க விஜய் தயங்குவது ஏன்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அது மட்டும் அலலாமல் வெறும் 20 நிமிடமே நடந்தது இந்த ஆர்ப்பாட்டம். மிகக் குறைந்த நேரத்தில் மட்டும் நடக்கும் நிகழ்ந்து தான் பல்வேறு அரசியல் கட்சிகளின் கேலி கிண்டலுக்கு ஆளானது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்