Tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜூலை, 2025

ஆடி மாதத்தில் கலைகட்டும் ஆடு கோழி வியாபாரம்!

தற்போது தமிழ் மாதத்தில் ஆடி மாதம் பிறந்துள்ளதால் மக்கள் அனைவரும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் விட்டு நேர்த்திக் கடன் செய்து வழிபட்டு வருகிறார்கள். இந்த ஆடி மாதம் முழுக்கவே நிறைய பேர் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து பூஜை செய்து தலைமுடி காணிக்கை கொடுத்து மொட்டை அடித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடுத் திரும்புகிறார்கள்.

தினமும் அசைவ உணவுகள் இல்லாமல் ஆடி மாதம் செல்லாது. அப்படி இருக்கையில் ஆடு கோழி வளர்ப்பவர்கள் இந்த மாதம் முழுக்கவே கொண்டாட்டம்தான். ஜோராக வியாபாரம் பிச்சிக்கிட்டு போகும்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறும். இதில் ஆடு கோழி மாடுகள் என அதிகமாக வியாபாரத்திற்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. ஆடி மாதம் பிறந்த காரணத்தினால் இந்த மாதம் முழுக்கவே வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.

திருவண்ணாமலை உழவர் சந்தையில் திருவண்ணாமலை மக்கள் மட்டுமல்லாமல் செங்கம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்கள் நகர்புறங்களை வசிப்பவர்கள் மற்றும் வெளியூரில் இருந்து வருபவர்கள் முதலானோர் உள்பட நிறைய பேர் ஆடு கோழிகளை வாங்கி செல்கிறார்கள்.

ஆடி மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் மக்கள் தங்களுக்கு குலதெய்வ கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செய்வது மட்டுமல்லாமல் காதணி விழா நடைத்துவார்கள்.. இந்த காதணி விழாவுக்கு பிரியாணி அல்லது அசைவ உணவுகள் இல்லாமல் இருக்காது. அப்படி இருக்கும்போது அதற்கும் சேர்த்து ஆடு கோழி நிறைய வியாபாரம் நடைபெறுவதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.

முக்கியமாக காதணி விழாவிற்கு நிறைய பேர் கோழிகளை தான் பிரியாணி செய்வதற்கும் கறி குழம்பு வைப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். மிகவும் குறைந்த நபர்கள் மட்டும்தான் ஆடுகளை காதணி விழாவிற்கு விருந்தாக படைக்கிறார்கள். 

எல்லோரும் ஆடி மாதத்திற்குள் காது குத்தாதவர்கள் காது குத்தி தடபுடலாக மக்களுக்கு சாப்பாடு போட்டு விட வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த மாதம் முழுவது அங்கங்கு காது குத்து விழாக்கள் நடைபெறும். 

யாரெல்லாம் காது குத்துவார்கள்? 

ஒரு குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் பெற்றவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளை பற்றவர்கள் தங்களுக்கு இந்த பிள்ளைகளை போதும் என்று முடிவெடுத்த பிறகு அவர்களுக்கு இரண்டு வயதுக்கு மேல் ஆன பிறகு ஊரை எல்லாம் அழைத்து தடபுடலாக அசைவ உணவை பரிமாறி காதுக்குத்து விழா நடத்துவார்கள். 

வசதி வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் குலதெய்வ கோவிலில் குழந்தைகளுடன் சேர்த்து பெற்றோர்களும் மொட்டை அடித்துவிட்டு பிறகு ஒரு பெரிய மண்டபத்தில் நிறைய பேரை அழைத்து வெகு சிறப்பாக இந்த விழாவை நடத்துவார்கள்.

வசதி வாய்ப்பில்லாதவர்கள் எளிமையாக காதணி விழாவை தங்கள் குலதெய்வ கோவிலில் தங்கள் குழந்தைகளுடன் தாங்களும் மொட்டை அடித்துக்கொண்டு தங்களுக்கு முக்கியமான, தெரிந்த, சில பல உறவுகளை மட்டும் அழைத்து குலதெய்வ கோவிலிலே காதணி விழா நடத்தி முடிப்பார்கள்.

ஆனால் எல்லோருமே ஆடி மாதத்தில் மட்டும் தான் காதுக் குத்துவார்கள். ஆடி மாதம் முடிந்து விட்டால் அதற்குப் பிறகு தங்கள் குழந்தைகளுக்கு யாருமே காது குத்த மாட்டார்கள். காது குத்தும் நிகழ்ச்சி ஆண், பெண் இரண்டு குழந்தைங்களுக்கும் சேர்த்து தான் நடைபெறும்.

ஆனால் வளர வளர பெண் குழந்தைகள் அந்த குத்திய காதுகளை பராமரித்து நகை போடும் அளவிற்கு காதை பக்குவப்படுத்துவார்கள். ஆனால் ஆண் குழந்தைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு குத்திய காதுகள் துருத்தி திரும்ப துளைகள் மூடிக்கொள்ளும்.

திருவண்ணாமலை உழவர் சந்தை நிலவரம் :

திருவண்ணாமலையில் மாவட்ட உழவர் சந்தையில் மட்டுமே நேற்று முன்தினம் 10 லட்சம் பேருக்கு மேல் வியாபாரம் நடைபெற்றதாக ஒட்டுமொத்த வியாபார சங்கத்தினர் கூறுகின்றனர். ஆடி மாதம் என்பதால் ஆடு கோழிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் உட்பட விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

உங்கள் பகுதியில் எந்த கோவில் சிறப்பாக மக்களால் கொண்டாடப்படுகிறது என்று நமது கருத்துப் பக்கத்தில் தெரிவிக்கவும். மேலும் பல நல்ல பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதள பக்கத்தில் பின்தொடரவும்.

நன்றி வணக்கம்!

தங்க விலை ₹70 ஆயிரத்தை நெருங்கியது

தங்கம் விலை இப்படியே உயர்ந்து கொண்டே போனால் என்ன செய்வது? இந்த பேச்சு தான் கடந்த சில மாதங்களாக எங்கும் ஒலித்து வருகிறது.

நாம் அனைவருக்கும் தங்கம் என்பது அத்தியாவசிய தேவையான மாறிவிட்டது. அதாவது சேமிப்பை தங்கம் மூலமாகத்தான் நிறைய பேருக்கு செய்கிறார்கள். இது மட்டும் அல்லாமல் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அங்க நகைகள் இல்லாமல் அந்த விசேஷமே இல்லை. 

எந்த ஒரு திருமணமும் தங்கம் இல்லாமல் நடப்பதில்லை; தாலியில் தங்கம், கழுத்தில் தங்கம், கையில் தங்கம் என எங்கு பார்த்தாலுமே நகைகள் தங்கம் சார்ந்த பொருட்கள் இல்லாமல் எந்த விசேஷமும் நடப்பதில்லை. அப்படி இருக்கையில் தங்கம் விலை ஏறினால் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரம் மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும்.

கடந்த ஆண்டு 2024 மார்ச் மாதம் ஒரு பவுன் ரூபாய் 50,000 என்ற உச்சத்தை தங்க விலை எட்டியது அப்போதே இவ்வளவு விலை என பேசப்படும் நிலையில் அதோடு நிக்காமல் மேலும் விலை அதிகரித்துள்ளது. 

ஒவ்வொரு நாளும் புதிய விலை உயர்வு என்ற அடிப்படையில் வரலாறு காணாத புதிய உச்சத்தை கடந்த கடந்து வந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டுமே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டுமே விலை உயராமல் ஒரு பவுன் ரூபாய் 55 ஆயிரம் முதல் ரூபாய் 56 ஆயிரம் வரையில் நிறையாக இருந்தது. 

அதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இருந்து மீண்டும் ஏற்றத்தை நோக்கி தங்கம்  விலை பயணித்தது. அதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி ஒரு பவுன் ரூபாய் 60 ஆயிரம் என்ற நிலையையும் அடைந்தது. 

அதனை அடுத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான நாட்களில் விலை உயர்வே இருந்தது. இதனால் கடந்த மாதம் மார்ச் 14ஆம் தேதி ஒரு பவுன் ரூபாய் 65 ஆயிரத்தை தொட்டது. 

இதற்குப் பிறகாவது விலை குறையுமா என்ற கேள்வி அனைவரிடமும் இருந்த நிலையில் இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை யாரும் கடிவாளம் போட முடியாது உச்சத்திலேயே தொடர்ந்து பயணிக்கும் என சொல்லப்படுகிறது. 

தங்க விலை உயர்வுக்கு என்ன காரணம்? 

அதைக் ஏற்றது போல தங்கம் விலை அதிரடியாக உயருவதும் சற்று இறங்குவதுமாகவே இருக்கிறது அமெரிக்க ஜனாதிபதி ஏற்றம் பரஸ்பர வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வந்த நேரத்தில் தங்கம் விலை கடந்த நாலாம் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரை குறைந்து வருகிறது. 

பரஸ்பர வரி விதிப்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்ததால் பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

இதனை தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது இதனால் அதன் விலை ராக்கெட் வேகத்தில் கிடுகிடு என உயர தொடங்கி இருக்கிறது. 

அதன்படி கடந்த மூன்று நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது அதாவது கடந்த ஒன்பதாம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் எட்டு கிராமுக்கு ரூபாய் 155 பவுனுக்கு ரூபாய் 1450 உயர்ந்துள்ளது அன்றைய தினம் ஒரு கிராம் பவுன் ரூபாய் 67,250 விற்பனை ஆனது. 

நேற்று முன்தினம் கிராமுக்கு ரூபாய் 150 பவுனுக்கு ரூபாய் 1200 உயர்ந்து ஒரு பவுன் ரூபாய் 68,450 க்கு வியாபாரம் ஆனது இதுதான் இதுவரை தங்கத்தின் உச்சபட்ச விலை ஆக எடுததது ஆனால் அதிரடியாக நேற்று கிராமுக்கு ரூ.185 பவுனுக்கு ரூபாய் 1480 பேருந்து ஒரு கிராம் ரூபாய் 845க்கும் ஒரு பவுன் ரூபாய் 69 ஆயிரத்து 960 க்கும் விற்பனை செய்யப்பட்டது இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்துவிட்டது. 

அதாவது ஒரு பவுன் ரூபா 70 ஆயிரத்தை நெருங்கி விட்டது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூபாய் 520 பவுனுக்கு ரூபாய் 4560-ம் அதிகரித்துள்ளது இதே வேகத்தில் சென்றால் தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாய் 80 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

குறிப்பாக, நமது மக்கள் பயன்படுத்துவது 22 கேரட் தங்கம் மட்டும்தான்; 24 கேரட் தங்கம் சுத்தமான தங்கம் என்று கூறினாலும் அந்த 24 கேரட் தங்கத்தை நகைகள் செய்ய பயன்படுத்த முடியாது. அதனுடன் வேறு சில உலோகங்களையும் கலந்து தான் தங்க நகைகள் செய்யப்படுகிறது. ஆதலால் எந்த தங்க நகைகளும் சுத்தமான தங்கத்தை முழுவதுமாக பயன்படுத்தி தயாரிக்கப்படுவதில்லை.

இனி வரும் காலங்களிலும் தங்கம் விலை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆதலால் தங்கம் சேமிப்பு என்பது மிகவும் அவசியமான தேவையாக மக்களுக்கு இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் சட்டங்கள் என்னன்னு தெரியுமா?

தேர்தல் சட்டம்:

தேர்தல் சுதந்திரமான முறையில் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டவைகள்: 

  • உலகத்தின் மிகப்பெரிய மக்களாட்சி கொண்டது இந்திய நாடாகும். நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கான உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • மக்களாட்சி தலை துவங்குவதற்கு இதற்கான தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றன.
  • மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு மக்களாட்சியின் மீது ஒரு நம்பிக்கை வருகின்றன. இதற்கான முறையான தேர்தல்கள் நடத்தி தன்னாட்சி பொருந்திய தேர்தல் ஆணையம் இந்திய அரசியல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள் நடத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரு முக்கியமான பொறுப்பாகும்.

தேர்தல் ஆணையம்: 

சட்டமன்றங்கள் நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறித்த தேர்தல் பற்றிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு கண்காணிப்பும் நெறிமுறைகளும் மற்றும் கட்டுப்பாடு மேலும் அவற்றிற்கான தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடும் கடமையாக உள்ளது. 

தலைமை தேர்தல் ஆணையரையும் குடியரசுத் தலைவரையும் அவ்வப்போது நிறையம் செய்யும் மற்ற தேர்தல் நேரையும் தேர்தல் ஆணையம் கொண்டிருக்கும். தலைமை தேர்தல் அனைவரையும் மாற்ற தேர்தல் ஆணையர்களையும் நாடாளுமன்றம் இதுகுறித்து இயற்றும் சட்டத்திற்கு இணங்க குடியரசுத் தலைவர் நியமிக்கப்படுகின்றார். 

தேர்தல் ஆணையர் சுமார் ஐந்து ஆண்டு காலத்திற்கு தனது பொறுப்பில் இருக்கின்றார். தேர்தல் ஆணையரின் சம்பளம் மற்றும் பணிகள் திறன் நிதியத்தில் இருந்து வழங்கப்படுகின்றன. தனது பணி காலத்தில் சம்பளமானது பணி நிபந்தனைகளோ மாற்ற முடியாது. 

இவையாவும் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மைகளை காப்பாற்றும் வழிமுறைகள் ஆகும். தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். எனவே அரசியல் அல்லது நிர்வாகம் இருக்குதல் இன்று சுதந்திரமாக செயல்பட வழி வகுக்கும். இதனால் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் ஒருதலைச் சார்புமின்றி செயல்பட உறுதி செய்யப்படுகின்றன. 

தேர்தல் ஆணையத்தின் பணிகள்: 

324 இன் கீழ் பணிகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன: 

  • நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் குடியரசு துணைத்தலைவர் வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் மீது கண்காணிப்பு நெறிமுறை மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றினை கொண்டிருத்தல். 
  • மேற்குறிப்பிட்ட தேர்தல்களை நடத்துதல் 
  • நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை வினா குறித்தும் குடியரசுத் தலைவருக்கும் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை குறித்து அலுவலருக்கும் ஆலோசனை வழங்குதல். 
  • தேர்தல் ஏற்பாடுகள் அல்லது தேர்தல் குறித்த தகராறுகளை விசாரிக்க தேர்தல் அலுவலர்களை நியமித்தல்.
  • தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்படுவது குறித்து தகராறுகளை தீர்த்தல். 
  • பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தொலைக்காட்சிகளும் வானொலிகளும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செயல்முறையில் நாளையும் நேரத்தையும் ஒதுக்குதல். 
  • தேர்தல் அட்டவணையை தயாரித்தல் நாட்களை குறித்தல் வெளியிடுதல் மற்றும் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தல்.
  • தேர்தலை நடத்துவதற்கு தேவையான அலுவலர்களை நியமனம் செய்தல். 
  • தேர்தலின் போது வேட்பாளர் வரம் கட்சிகளும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல். 
  • வாக்காளர் பட்டியலில் பிழைகள் ஏதும் இன்றி தயார் நிலையில் அவற்றை வைத்திருத்தல். 
  • தேர்தல் குறித்த மற்ற பொருட்களை கவனித்தல். 
  • தற்போது இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முதன்மை தேர்தல் ஆணையரையும் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டது. 

தேர்தல் சட்டம் குறித்து நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் சட்டமேற்றும் அதிகாரம்: 

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்தல் நிலை நடத்துவதற்காக குறிப்பிடப்படுகின்றன: 

  • வாக்காளர் பட்டியல் தயாரிப்பு 
  • தொகுதிகளை பிரித்தல் 
  • அதன் தொடர்பான அனைத்து பொருட்கள் குறித்தும் சட்டம் 
  • உறுப்பு 327 இன் கீழ் அதிகாரங்கள் 
  • 1950 மற்றும் 1951ம் ஆண்டுகளின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள்
  • 1952 ஆம் ஆண்டின் குடியரசு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் சட்டம் 
  • 1952 ஆம் ஆண்டின் தொகுதி பிரிவு அணை சட்டம் இந்த உறுப்பின் கீழ் உள்ளன. 

நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தினை மீறியோ அல்லது தன்னிச்சையாகவோ செயல்பட முடியாது. தேர்தல் ஆணையத்தின் மீது இரண்டு கட்டுப்பாடுகள் உள்ளன. 

நாடாளுமன்றமோ அல்லது மாநிலச் சட்டமன்றங்களும் ஒரு முறையான சட்டத்தை இயற்றி இருப்பின் சட்டங்களுக்கும் இணங்க தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். இரண்டாவதாக சட்டத்தின் ஆட்சிக்கு இணங்க செயல்பட வேண்டும். தன்னம்பிக்கையில் இயற்கை நீதிபதிகளுக்கு உட்பட்டு அது செயலாற்ற வேண்டும். சட்டத்தில் கூறப்படாத பகுதியில் தேர்தல் ஆணையம் தன் விருப்பம் போல் செயல்படலாம். 

வாக்களிக்கும் உரிமை சட்ட உரிமையாகும். இது அடிப்படை உரிமை அன்று....

வயது வந்த அனைவருக்கும் வாக்களிப்பு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டில் 61வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வாயிலாக வாக்களிப்பதற்கான குறைந்த அளவு வயது 21 இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 மே, 2025

சுவடிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? tamil traditonal oolaisuvadi history

இளம் பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோத்துத் தருவார். ஒரு துளையிடுவதும் இரண்டு துளையிடுவதும் உண்டு. மற்றப் பிள்ளைகள் தாங்களே செய்து கொள்ளுவார்கள். பனையேடு, சீதாள பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கம்.

மேலே சட்டமாகப் பனைமட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பார்கள்; மரச் சட்டங்களையும் அமைப்பார்கள்; செப்புத் தகட்டாலும் சட்டஞ் செய்து கோர்ப்பார்கள். அந்தச் சட்டங்களின் மேல் வர்ண மையினாற் பல வகையான சித்திரங்கள் எழுதுவதுண்டு. 

இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகித் கட்டுவார்கள். அதற்கு 'நாராசம்' என்று பெயர்.

சுவடியைக் கோக்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள். அதற்குக் கிளிமூக்கென்று பெயர்.

இப்போது அச்சுப் புத்தகங்களின் அளவில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டோ அவ்வளவு பனையோலைச் சுவடிகளிலும் உண்டு.

எழுத்தாணிகள் :

ஓலையில் எழுதுவதற்குரிய எழுத்தாணியில் பல பேதங்கள் உண்டு. எழுத்தாணியை ஊசியென்றும் கூறுவதுண்டு. மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி என்பன எழுத்தாணியின் வகைகள். ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் அமைந்ததைப் பார்த்தே பேனாக்கத்தி என்ற பெயர் வந்ததென்று தோற்றுகின்றது.

ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கெழுத்தாணிகளும் இருந்தன.

ஏடெழுதும் வழக்கம் :

ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துக்களாக இருபது முப்பது வரி வரையில் எழுதுவதற்குரிய மெல்லிய எழுத்தாணிகள் இருந்தன. நாம் இக்காலத்தில் காகிதத்தில் எழுதுவதைப் போன்ற வேகத்தோடே ஏட்டில் எழுதுவதுண்டு.

 மாணாக்கர்களுக்கு எழுதும் பழக்கம் நன்றாக உண்டாகவேண்டுமென்று ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தனித்தனியே ஏடுகளில் தாம் மேலே எழுதி அதைப்போல் எழுதிவரச் சொல்வார்கள். இதற்குச் சட்டமென்று பெயர்.

சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்குத் தூக்கு என்று பெயர். அதனை அசை என்றும் சொல்வதுண்டு.

அன்பினால் அடக்குதல் :

முற்காலத்தில் கொடிய தண்டனைகள் இல்லை. ஆசிரியர்கள் மாணாக்கர்களை அன்பினால் வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள்பால் இருந்த மரியாதை மாணாக்கர்களுக்குப் பயத்தை உண்டாக்கியது. பிழைகளை மறந்தும் புரியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.

வாதம் புரிதல் :

கல்வியில் வாதம் செய்தல் நம் நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இருந்தது. மிகச் சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாது புரிந்து தம் கல்வித் திறமையை நிலைநாட்டுவர். அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டியிருப்பரென்று மதுரைக்காஞ்சி முதலிய நூல்களால் அறிகிறோம்.

இந்த வாதம்புரியும் பழக்கம் பாடசாலைகளிலிருந்தே வளர்ச்சியுற்று வந்தது. பள்ளிக்கூடத்தில் மாணாக்கன் நூல்பயிலும் இயல்பை விளக்க வந்த பழைய சூத்திரமொன்று பலவற்றைச் சொல்லிவிட்டு,

"வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநனி இருக்கும்"

                                            -நன்னூல் 41

என்று முடிக்கின்றது. ஆட்சேப சமாதானங்கள் சொல்லிப் பழகிய பழக்கங்களே முதிர்ந்த நிலையில் வாதங்களாக வளர்ச்சியுறுகின்றன.

சுவடிகள் தயாரிக்கும் முறை என்பது பழங்காலங்களில் மனிதர்கள் அவர்களின் அறிவு இலக்கியம் மற்றும் மருத்துவம் ஜோதிடம் போன்றவற்றை அவர்கள் சுவடிகளில் பதித்து ஒரு ஆவணம் போல் வைத்திருந்தனர். இவைகள் ஓலைச்சுவடிகளாக இருந்தன. 

ஓலைச்சுவடி தயாரிக்கும் முறை: 

தேர்ந்தெடுக்கப்படும் ஓலை: 

  • நீங்கள் ஆறு முதல் பத்து மாதம் கலந்த பனை ஓலைகளை பயன்படுத்தலாம். 
  • நீங்கள் அந்த ஓலைகளை எடுத்து நடுவில் செல்லும் ஓலைகளின் நரம்புகள் நீக்கப்பட்டு அதனை ஒரே அளவாக வெட்டிக் கொள்ள கள்ள வேண்டும்.

பதப்படுத்தும் முறை: 

  • நீங்கள் வெட்டிய ஓலைகளை மரத்தின் நிழலில் காய வைக்க வேண்டும். 
  • அதனை தண்ணீரில் வேக வைக்க வேண்டும். 
  • பிறகு சங்கு அல்லது கற்களை கொண்டு தேய்க்க வேண்டும். 
  • நன்கு தேய்த்த பிறகு ஓலையானது எழுதுவதற்கு ஏற்றபடி மிகவும் பளபளப்பாக இருக்கும். 

தயார் செய்யும் முறை: 

  • நீங்கள் ஓலைகளை வளைவாக வெட்ட வேண்டும். 
  • ஒரே அளவாக வெட்டப்பட்ட ஓலைகளை துளையிட வேண்டும். 
  • துளையிட்ட வலைகளை கயிறால் கட்டி சுவடியாக அமைக்க வேண்டும்.

எழுத்துக்களை பதிக்கும் முறை: 

  • நீங்கள் எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுத்துக்களை சேர்ககலாம்.
  • கருப்பு மை போன்றவற்றை பயன்படுத்தி நீங்கள் ஓலைகளில் மிகவும் தெளிவாக எழுதிக் கொள்ளலாம். 

பாதுகாப்பது எப்படி? 

  • நீங்கள் மஞ்சள் அல்லது சிவப்பு துணிகளின் இதை கட்டி வைப்பதால் நல்லது. 
  • மரப்பெட்டிகளில் இதனை நீங்கள் பாதுகாப்பாக வைக்கலாம். 
  • பூமிக்கடியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். 
  • நீங்கள் இதனை பூஞ்சை பூச்சிகள் கரையான் போன்றவை தாக்காமல் மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்

செவ்வாய், 8 அக்டோபர், 2024

Stalin announces solatium of ₹5 lakh to kin of those who died at air show

 A day after five persons who visited the air show organised by the Indian Air Force (IAF) on Marina beach in Chennai died due to heat-related exhaustion, Tamil Nadu Chief Minister M.K. Stalin condoled the deaths and announced a solatium of 15 lakh to the families of each of the deceased.

"I am pained to learn that five precious human lives were lost due to ex- ical reasons. This is an ir treme heat and other med reparable and huge loss to the families of the de ceased. I extend my deep condolences to them. I have directed a solatium of 15 lakh to the families of each of the deceased," he said on Monday.

Health Minister Ma. Subramanian said all five deaths reported after the air show were caused by heat-related issues. B. JOTHI RAMALINGAM 

In a statement,stalin contended that the Ta- extended administrative cooperation and made ar rangements beyond what was sought by the IAF for the conduct of the air show on Sunday. The police and fire and rescue services de partments, the Greater Chennai Corporation, and Coordinated with each oth the Health department had er to make comprehensive arrangements, he said.

"Because of this, stam pedes were prevented. However, since the number of people who turned up was much higher than expect ed, I learnt that people faced hardship in reaching their vehicles on their way back and in getting public transport. Additional at- tention would be accorded to these issues when events of this scale are or- ganised in future," Mr. Sta- lin said.

Heat-related deaths

Earlier in the day, Health Minister Ma. Subramanian said all five deaths were caused by heat-related is- sues. "A total of 102 per- sons were admitted to the hospital. Seven persons are being treated now. They are stable. Others have been discharged. We regret to inform that five persons have died. All five were brought dead to the hospital. The IAF had ad- vised the visitors to carry water bottles, caps, um- brellas, and cooling glasses to protect themselves from the sun," he said.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

இனிமே கூல்ட்ரிங்க்ஸ் குடிக்காதீங்க! Tamil Xpress

 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சி பகுதியில் 6 வயது பெண் குழந்தை கடையில் விற்கும் பத்து ரூபாய் மாம்பழ ஜூஸ் வாங்கி குடித்துள்ளது. 

ஜூஸ் குடிக்கும் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனால் மிகுந்த வேதனைக்கு உள்ளான சிறுமியின் பெற்றோர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்கள்.

அதன்படி விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீனி பிடித்தது பத்து ரூபாய் டெய்லி (Dailee) என்கிற நிறுவனத்தின் மாம்பழ ஜூஸ் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

காலாவதியான Dailee mango juice 

இந்த Dailee நிறுவனத்தின் ஒரு கிளை நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விரைந்து சென்று அங்கிருந்த குளிர்பானத்தின் மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி உள்ளார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து குளிர்பான நிறுவனங்களை சோதனையிட உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. 

குழந்தைகள் அறியாமல் குடிக்கும் உணவு பொருள்களில் இது போல காலாவதியான குளிர்பானங்கள் விற்பது தடை செய்ய வேண்டும். 

பொதுவாக குளிர்பானங்கள் அனைத்தும் இயற்கையான முறையில் பழங்களை பயன்படுத்தி செய்வது கிடையாது; நிறைய குளிர்பானங்கள் கலர் பவுடர்களையும் வாசனையை பவுடர்களையும் அதிகமாக கலந்து தான் இந்த குளிர்பானங்களை தயார் செய்கிறார்கள். 

இவையெல்லாம் மூன்று மாத கால அளவுக்கு காலாவதியாகிவிடும். இந்த காலாவதியான குளிர்பான பாட்டில்களை தூக்கி எறியாமல் கடைகளில் வைத்து விற்று பணமாக்கிவிடலாம் என்று கடைக்காரர்கள் செய்யும் அநியாயத்தால் பல பேர் பாதிப்படைகிறார்கள்.

இதில் வேதனை என்னவென்றால் காலாவதியான குளிர்பானங்கள் அனைத்தும் விற்பது  பெட்டி கடையில் தான். பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் அதிகம் படிக்க தெரியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு காலாவதி என்பது தெரியாமல் இருக்கலாம். 

அவர்கள் அறியாமையால் நடக்கும் இந்த தவறுகளால் பல சின்னஞ்சிறு குழந்தைகளும் அந்த குளிர்பானங்களை வாங்கி குடிக்கும் பெரியோர்களும் பாதிப்படைகிறார்கள். 

குளிர்பானங்களை வாங்கி குடிக்கும் மக்களும் குளிர்பானங்களில் காலாவதி தேதிகளை சரிபார்த்து வாங்கி குடிக்க வேண்டும். 

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

கள்ளக்குறிச்சி இறந்தவர்களுக்கு 10 லட்சம் தொடர்பான அறிவிப்பிற்கு எதிர்ப்பு!

 தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 42 பேர் உயிரிழப்பு அடைந்துள்ளார்கள். இதனை எடுத்து உடனே கள்ளக்குறிச்சிக்கு பிறந்த அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் இறந்தவர்களை குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்கள். 

அதன்படி பூ தலத்திற்குச் சென்ற திமுக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது தந்தை தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் அவர்கள் இறந்தவர்களின் ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு தலா 10 லட்சம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்கள்.

முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் அடுத்த உத்தரவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நிறைய அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதில் குறிப்பாக விரைந்து வந்து இறந்தவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும்  பார்வையிட்ட  தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தமிழக அரசு 10 லட்சம் வழங்க பிறப்பித்த ஆணையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

கள்ளச்சாராயம் விற்றவர்கள் மற்றும் கள்ளச்சாராயம் வாங்கி குடித்தவர்கள் அனைவரும் குற்றம் செய்தவர்களே! அவர்களுக்கு நிதி உதவி வழங்கினால் அது குற்றத்தை ஊக்குவிப்பதற்கு சமமாகும்.

அதனால் அவர்களுக்கு நிதி உதவி வழங்க கூடாது இதை கண்டிப்பாக நடவடிக்கை எடுத்த மீண்டும் இந்த செயல் நடக்காமல் இருக்க தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும்" என்று கூறிய தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்துக்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். 

இருந்தபோதிலும் தந்தை அல்லது தாய் என்று பெற்றோரை இழந்தவர்களுக்கு நிதி உதவி அளிப்பது அவர்களுக்கு குழந்தைகளின் வாழ்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சமூக வலைதள ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

புதன், 24 ஜூலை, 2024

மின் உற்பத்தி நிலையங்கள் என்றால் என்ன? அவற்றின் வகைகள்

  1. அனல்மின் நிலையங்கள்

அனல்மின் நிலையங்களில் நிலக்கரி, டீசல் அல்லது வாயுக்களை எரிப்பதன் மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றலால் நீராவி உருவாக்கப்படுகிறது. இந்த நீராவியால் டர்பைன் இயங்குகிறது. 

டர்பைன் இயங்கும் பொழுது இரு மின்காந்தங்களுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ள கம்பிச்சுருள் சுழல்வதால் உருவாகும் மின்காந்தத் தூண்டலால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு வெப்ப ஆற்றலானது மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

  2. நீர்மின் நிலையங்கள்

நீர்மின் நிலையங்களில் அணைக்கட்டில் இருந்து பாயும் நீரால் டர்பைன் சுழற்றப்பட்டு  மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் அதிக காலம் இயங்கக்கூடியது; மற்றும் சிக்கனமானது.

  3. அணுமின் நிலையங்கள்

அணுமின் நிலையங்களில் அணுக்கரு ஆற்றலை கொண்டு நேரானது கொதிக்க வைக்கப்படுகிறது. 

இதனால் உருவாகும் நீராவியைக் கொண்டு டர்பைன் இயக்கப்படுகிறது. டர்பைனின் இயக்கத்தால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. 

இங்கு அணுக்கரு ஆற்றலானது இயக்க ஆற்றலாகவும் பின் மின்னாற்றலாகவும் மாற்றப்படுகிறது.
 
  4. காற்றாலை நிலையங்கள்

காற்றாலைகளில் காற்றின் ஆற்றலால் டர்பைன் சுழற்றப்படுகிறது. இதன் மூலம் மின்சாரம் உருவாகிறது. இங்கு இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது.

தமிழகத்தின் முக்கிய மின் நிலையங்கள் : 

மின் உற்பத்தி நிலையங்கள் என்றால் என்ன? அவற்றின் வகைகள்
Tamilnadu electricity 

தமிழகத்தின் முக்கிய மின் நிலையங்கள்:

அனல் மின் நிலையங்கள்:

 * என்.எல்.சி. தூத்துக்குடி மின் நிலையம்: 2,340 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம், தமிழகத்தின் மிகப்பெரிய அனல் மின் நிலையமாகும்.
   
 * என்.எல்.சி. நெய்வேலி மின் நிலையம்: 2,240 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம், தமிழகத்தின் இரண்டாவது பெரிய அனல் மின் நிலையமாகும்.
   
 * மதுரை அனல் மின் நிலையம்: 630 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம், தமிழகத்தின் மூன்றாவது பெரிய அனல் மின் நிலையமாகும்.
   
 * உப்பனூர் அனல் மின் நிலையம்: 1,000 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம், தமிழகத்தின் நான்காவது பெரிய அனல் மின் நிலையமாகும்.


 * மின்னம்புதுர் அனல் மின் நிலையம்: 1,000 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம், தமிழகத்தின் ஐந்தாவது பெரிய அனல் மின் நிலையமாகும்.

நீர் மின் நிலையங்கள்:

 * குன்னூர் நீர் மின் நிலையம்: 400 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம், தமிழகத்தின் மிகப்பெரிய நீர் மின் நிலையமாகும்.

 * மேட்டூர் நீர் மின் நிலையம்: 350 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம், தமிழகத்தின் இரண்டாவது பெரிய நீர் மின் நிலையமாகும்.
 
 * பவானிசாகர் நீர் மின் நிலையம்: 140 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம், தமிழகத்தின் மூன்றாவது பெரிய நீர் மின் நிலையமாகும்.

 * முக்கணாமலை நீர் மின் நிலையம்: 120 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம், தமிழகத்தின் நான்காவது பெரிய நீர் மின் நிலையமாகும்.

 * சோலையாறு நீர் மின் நிலையம்: 80 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம், தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நீர் மின் நிலையமாகும்.

காற்றாலை மின் நிலையங்கள்:

 * முப்பண்டாள் காற்றாலை மின் நிலையம்: 100 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம், தமிழகத்தின் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையமாகும்.

 * நாகப்பட்டினம் காற்றாலை மின் நிலையம்: 50 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம், தமிழகத்தின் இரண்டாவது பெரிய காற்றாலை மின் நிலையமாகும்.

 * கீழக்கடம்பூர் காற்றாலை மின் நிலையம்: 40 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.


வெள்ளி, 21 ஜூன், 2024

கள்ளச்சாராயம் குடித்த கணவன் மனைவி பலி!

 இப்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருவது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை பற்றி தான். 

கள்ளக்குறிச்சி என்ற பெயருக்கு ஏற்ப கள்ள சாராயம் அதாவது விஷ சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்து வந்த நிலையில் அதை வாங்கி குடித்த 42 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். மேலும் பல பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கள்ள சாராயம் காய்ச்சி விற்பது அந்த ஊரில் ஒன்றும் புதிது இல்லை ஏற்கனவே இந்த கள்ளச்சாரத்தை காய்ச்சியவர் 22 முறை கைதாகி வெளிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது அந்த கள்ளச்சாராயம் விற்றவர் 23வது முறையாக கைதாகி உள்ளார். குற்றவாளிகளை கைது செய்து வெளியே விடும் அரசு அவர்களை எதற்காக கைது செய்ய வேண்டும்?

கள்ளச்சாராயம் பிடித்து இறந்தவர்களில் ஆண்களுடன் சேர்த்து பெண்களும் அடக்கம் பெண்களும் அந்த கள்ளச்சாராயம் அதாவது விச சாராயத்தை வாங்கி குடித்திருப்பது வேதனைக்குரியது.

கள்ளக்குறிச்சி :  கருணாபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த தம்பதியான சுரேஷ் (40), வடிவுக்கரசி (32) ஆகியோர் விஷ சாராயம் குடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். கூலி வேலைக்கு செல்லும் தம்பதி உடல்வலியை போக்குவதற்காக வழக்கமாக மதுகுடிப்பது வழக்கம். 

அந்த வகையில் அதேபோல் 18ம்தேதி வேலையை முடித்துவிட்டு திரும்பிய தம்பதியர் உடல்வலியை போக்குவதற்காக இரவு சாராயம் வாங்கி குடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டில் படுத்திருந்த தம்பதிக்கு உடல்நிலை பாதிக்கப்படவே, உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் ஹரி(14), ராகவன்(13) கோகிலா (16) என்ற மூண்டு குழந்தைகளும் தற்போது அனாதைகளாக நின்றுள்ளனர்.