இப்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருவது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை பற்றி தான்.
கள்ளக்குறிச்சி என்ற பெயருக்கு ஏற்ப கள்ள சாராயம் அதாவது விஷ சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்து வந்த நிலையில் அதை வாங்கி குடித்த 42 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். மேலும் பல பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கள்ள சாராயம் காய்ச்சி விற்பது அந்த ஊரில் ஒன்றும் புதிது இல்லை ஏற்கனவே இந்த கள்ளச்சாரத்தை காய்ச்சியவர் 22 முறை கைதாகி வெளிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த கள்ளச்சாராயம் விற்றவர் 23வது முறையாக கைதாகி உள்ளார். குற்றவாளிகளை கைது செய்து வெளியே விடும் அரசு அவர்களை எதற்காக கைது செய்ய வேண்டும்?
கள்ளச்சாராயம் பிடித்து இறந்தவர்களில் ஆண்களுடன் சேர்த்து பெண்களும் அடக்கம் பெண்களும் அந்த கள்ளச்சாராயம் அதாவது விச சாராயத்தை வாங்கி குடித்திருப்பது வேதனைக்குரியது.
கள்ளக்குறிச்சி : கருணாபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த தம்பதியான சுரேஷ் (40), வடிவுக்கரசி (32) ஆகியோர் விஷ சாராயம் குடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். கூலி வேலைக்கு செல்லும் தம்பதி உடல்வலியை போக்குவதற்காக வழக்கமாக மதுகுடிப்பது வழக்கம்.
அந்த வகையில் அதேபோல் 18ம்தேதி வேலையை முடித்துவிட்டு திரும்பிய தம்பதியர் உடல்வலியை போக்குவதற்காக இரவு சாராயம் வாங்கி குடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டில் படுத்திருந்த தம்பதிக்கு உடல்நிலை பாதிக்கப்படவே, உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் ஹரி(14), ராகவன்(13) கோகிலா (16) என்ற மூண்டு குழந்தைகளும் தற்போது அனாதைகளாக நின்றுள்ளனர்.
0 கருத்துகள்