Cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 மார்ச், 2025

தமிழ் நடிகர்கள் தவறவிட்ட வெற்றி திரைப்படங்கள்! Tamil Actors Missed Blockbuster Movies

 நமது தமிழ் சினிமாவில் நிறைய நல்ல திரைப்படங்களை தமிழ் நடிகர்கள் தவற விட்டு அந்த  திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று கொண்டாடப்பட்டது. தமிழ் திரையுலகில் நிறைய வெற்றி படங்கள் இருந்தாலும் சில நடிகர்கள் நிறைய படங்களை தவற விட்டார்கள். அந்தப் படங்கள் நிறைய வெற்றி அடைந்துள்ளன நிறைய தோல்வியடைந்த படங்களாக உள்ளன அதில் நாம் சில குறிப்பிட்ட படங்களை மட்டும் பார்ப்போம்!

அப்படிப்பட்ட தமிழ் நடிகர்களின் திரைப்படங்களைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

1. முதலாவதாக, நடிகர் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த கஜினி திரைப்படம் தான். இந்த படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்று சூர்யாவுக்கு சிறந்த நடிகர் அந்தஸ்தை பெற்று தந்தது. மேலும் இந்த திரைப்படம் இந்தியில் அமீர் கானை வைத்து ரீமிக்ஸ் செய்து அங்கேயும் வெற்றி பெற்றது. 

இந்த கஜினி திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடிகர் அஜித் நடிக்க இருந்தாராம். அப்போது கஜினி என்ற பெயர் இல்லை அதற்கு மாற்றாக மிரட்டல் என அந்த படத்துக்கு பெயர் வைக்கப்பட்டிருந்தது. 

2. இரண்டாவதாக, 1995 ஆம் ஆண்டு வெளிவந்த இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பம்பாய் திரைப்படம் தான். இந்த படத்தில் ஆரம்பத்தில் சீயான் விக்ரம் நடிக்க இருந்து அதற்கான போட்டோ ஷூட் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் வேறு படத்தில் நடித்து கொண்டிருந்த விக்ரம் இந்த படத்திற்காக தாடி எடுக்க மறுத்துவிட்டாராம்.

ஆனால் மணிரத்தினம் கண்டிப்பாக இந்த படத்தில் ஹீரோ தாடி எடுத்து தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் நடிகர் அரவிந்த் சுவாமியை வைத்து படத்தை எடுத்து முடித்து அதில் மிகப்பெரிய வெற்றியும் பார்த்து வட்டார்.

3. மூன்றாவதாக, தற்போது பிரபலமாக கருதப்படும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு நடிகர் அஜித்தை வைத்து தீனா என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். அவரது முதல் படத்தில் தீனா மிகப்பெரிய வெற்றி பெற்று வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

ஆனால் இந்த படத்தின் கதையை முதன் மதலில் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் விஜய்க்கு தான் கூறியிருந்தாராம் ஆனால் எதிர்பாராத விதமாக விஜய் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. 

4. நான்காவதாக, 2008 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமார் அவரே இயக்கி நடித்த திரைப்படம் தான் 'சுப்பிரமணியபுரம்'. இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று திரையரங்கை கலக்க வைத்தது. 

இந்த படத்தில் நடிகர் ஜெய் நடிக்க இருந்த வேடத்தில் பாக்கியராஜ் அவரது மகனான சாந்தனு பாக்யராஜ் நடிக்க இருந்ததாகவும் பாக்கியராஜ் இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என கூறி விடவே சாந்தனு நடிக்க மறுத்துவிட்டாராம். 

ஆனால் இன்றுவரை சாந்தனு வேற எந்த திரைப்படத்திலும் வெற்றியை காணவில்லை. 

5. 2011 ஆம் ஆண்டு இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த கோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தில் ஆரம்பத்தில் நடிகர் சிம்பு தான் நடித்து வந்தார். பாதி திரைப்படம் முடிவடைந்த நிலையில் திடீரென சிம்பு இந்த திரைப்படத்தில் இருந்து விலகிவிடவே அவருக்கு பதிலாக ஜீவா நடித்து இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

6. 2005 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் சண்டக்கோழி. இந்த திரைப்படத்தின் கதையை முதன் முதலில் இயக்குனர் லிங்குசாமி நடிகர் விஜய்யிடம் தான் கூறினாராம் கதையை கேட்ட விஜய் முதல் பாதி பிடித்ததாகவும் இரண்டாவது பாதி பிடிக்காததாக கூறிவிட்டு படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். 

7. 2000 ஆம் ஆண்டில் இயக்குனர் ராஜு மேனன் இயக்கத்தில் மம்முட்டி அஜித் தபு ஐஸ்வர்யா நடித்த மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் கண்டு கொணடேன் கண்டு கொண்டேன் இந்த படத்தின் கதையை முதன் முதலில் நடிகர் பிரசாந்த் இடம் கூறி அவர் நடிக்க இருந்ததாகவும் பிரசாந்த் கதாநாயகியாக ஐஸ்வர்யாவை கேட்க அதற்கு இயக்குனர் மறுத்து விடவே பிரசாந்த் ஒதுங்கி விட்டார்.


வியாழன், 20 பிப்ரவரி, 2025

இயக்குனர் பாலாஜி சக்திவேலும் நெகட்டிவ் கிளைமாக்ஸ்சும் | Director Balaji Sakthivel's Movies

 தமிழ் சினிமாவில்  90களின் படங்களான. சீயான் விக்ரமின் சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/19 ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் அவர் இயக்கிய திரைப்படங்கள் நெகட்டிவ் கிளைமாக்ஸ் தமிழ் சினிமாவில் பாலாஜி சக்திவேல் ஒரு தனித்துவமான இயக்குனராக இருந்து வருகிறார். 

இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் நெகட்டிவ் கிளைமாக்ஸ் கொண்டதாக இருந்தாலும் அதே நேரத்தில் சமூக உணர்வும் உண்மை சம்பவங்களின் தாக்கமும் அந்த படத்தில் அதிக அளவு இருந்து வருகிறது.


இதேபோல வழக்கு என் படத்தோட ஸ்ரீ கேரக்டருக்கு அந்த டைம்ல ஆடிஷனுக்காக சிவகார்த்திகேயன் ட்ரை பண்ணிருக்காரு..

ஆரம்பத்தில இயக்குனர் சங்கர்கிட்ட தான் உதவி இயக்குனரா வேலை செஞ்சிருக்காரு..

சாமுராய் தான் இவர் கேரியர்ல முதல் படம் 

சேது வெற்றிக்கு பிறகு ஆலயம் புரொடக்சன்ஸ் ஸ்ரீ ராம், ஹாரிஸ் ஜெயராஜ் விக்ரம் கூட்டணி ஒப்பந்தம் ஆகுது.. சிட்டிசன் பாணியில சமூக அக்கறை கொண்ட ஒரு படம், ஆனா படத்தோட க்ளைமாக்ஸ மக்கள் அந்த டைம்ல சரியா ரிசிவ் பண்ணிக்குல..

வைரமுத்து வரிகள் + ஹாரிஸ் இசையில இந்த படத்தோட எல்லா பாட்டும் செம்ம ஹிட், குறிப்பா "மூங்கில் காடுகளே" பாடல் வரி இயற்கைக்கும் தனிமனிதனுக்கும் இருக்குற காதல அவ்ளோ அழகா சொல்லி இருப்பாரு.. A படத்தோட ஒளிப்பதிவும் ரொம்ப பெருசா பேசப்பட்டது.

அடுத்த படம் "காதல்" இந்த படத்துக்கு முதல்ல "S.முருகன் R.ஐஸ்வர்யா" னு தான் டைட்டில் வைக்குலாம்னு இருந்திருக்காங்க..

ஆனா அந்த டைம்ல வந்த M.குமரன் Son Of மகாலட்சுமி பட டைட்டில்னால இத மாத்த வேண்டியதாயிருக்கு..

இந்த படத்தோட நெகட்டிவ் கிளைமாக்ஸ மாத்த சொல்லி பல தயாரிப்பாளர் கேட்ருக்காங்க.. இவரு பிடிவாதமா இருக்க, கடைசியா சங்கர் தயாரிப்புலதான் இந்த படம் வெளிவந்தது..

இந்த படத்துல ஒரு புது முயற்சியா லைட்டிங்கே இல்லாம ஒளிப்பதிவு பண்ணி இருப்பாரு மில்டன். பிலிம்பேர் 2004ல் சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது..

சங்கர் இவருக்கு ஆரம்பத்துல இருந்தே நெறைய உதவி பண்ணிருக்காரு, அடுத்த படைப்பு " கல்லூரி" இந்த படத்தையும் இவரே தான் தயாரிச்சு வெளிவிட்டாரு.. 2002 தர்மபுரில நடந்த பேருந்து எரிப்பு சம்பவத்த அடிப்படையா வெச்சுதான் இந்த கதையை எழுதிருப்பாங்க..

இந்த படம் எல்லோருடைய கல்லூரி வாழ்க்கையும் ஏதாவது ஒரு புள்ளியில கனெக்ட் பண்ணும்.. காதல், நட்பு, சோகம், பாசம், அரவணைப்புனு எல்லா இடத்தையும் நூல் புடிச்ச மாதிரி அவ்ளோ அருமையா காட்டிருப்பாரு..

ஜோசுவா ஸ்ரீதர் & நாமு காம்பினேஷன்ல இந்த படத்தோட எல்லா பாட்டும் அவ்ளோ அருமை❤️‍🔥

இதுக்கு அப்புறம் இவர் பண்ண படம் தான் வழக்கு எண் 18/9 இது இவர் கேரியர்லயே பெஸ்ட் சம்பவம்னு சொல்லலாம். நெறைய சென்சிடிவ் போர்ஷன கவர் பண்ண படம்.

இதுல நெறைய புது புது விஷயங்கள கையாண்டிருப்பாங்க, இந்த படத்தையே ஒரு Canon 5D Camera வெச்சு எடுத்து முடிச்சிருப்பாரு விஜய் மில்டன்.

இதுல வர்ற "ஒருகுரல் கேட்குது பெண்ணே" பாடல் எந்தவித music Instrumental- ល់ ឈប់ Singers Vocal வெச்சே Full சாங்கையும் மேக் பண்ணிருப்பாங்க

சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, சிறந்த படம் மற்றும் இயக்குனருக்கான தமிழ்நாடு திரைப்பட விருது, பிலிம்பேர் விருது,விஜய் அவார்டுனு நெறைய விருதுகள் குவிச்ச படம்..

கடைசியா இவர் டைரக்ட் பண்ணது "மாடர்ன் லவ் சென்னை-ல இமைகள்" Episode தான். இதுக்கப்புறம் Full Fledged a ஆக்டிங்ல இறங்கிட்டாரு..

அசுரன் படத்துல வெற்றிமாறன் நீங்க ஒரு ரோல்ல நடிங்கனு கட்டாயப்படுத்த அதுக்கப்புறம் அந்த பாதை அவர எங்கயோ போய்விட்டது. 

உதாரணமாக குட் நைட் திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன் உடன் இவன் நடித்த காட்சிகள் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டன.

தற்போது பல திரைப்படங்களில் முன்னணி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருகிறார்.

இவருடைய படங்கள் சிறந்த எழுத்து சமூக விழிப்புணர்வு மற்றும் அதிகளவு உணர்ச்சி பூர்வமான கதைகள் இந்த படமாக இருப்பதால் தமிழக அரசு விருதுகள் மற்றும் பல தேசிய விருதுகளை இவர் பெற்றுள்ளார். பாலாஜி சக்திவேல் படங்கள் அதிகளவு நமது மனதை உருக்கும் மற்றும் சிந்திக்க வைக்கும் ஒரு படமாக இருந்து வருகிறது. 

இவருடைய படங்களில் சமுதாயத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இவரின் படங்கள் சில கதைகள் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் இதனால் சமுதாயத்தில் நடக்கும் கடுமையான உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் நெகட்டிவ் முடிவுகள் படத்திற்கு மிகவும் அவசியமாக இருந்ததால் இவர் இந்த கிளைமாக்ஸ் இந்த படங்களை இயக்கியுள்ளார்.

செவ்வாய், 5 நவம்பர், 2024

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சேர்ந்து வாழ முடிவு! Tamil Xpress

 தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கை பொத்தி வைக்க கோரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து அவர்களுக்கு வளர் வளர்ந்து பெரியவனான நிலையில் இரண்டு குழந்தைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். 

Danush & Ishwarya Rajinikanth issue 

இந்த நிலையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்வதாக தெரிவித்தது வெறும் சர்ச்சையை கிளப்பியது. 

இதனை எதிர்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் என்னிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமல் இந்த முடிவை தனுஷ் எடுத்திருப்பதாக வழக்கு தொடுத்தார். 

இதையும் படிக்க : மீண்டும் மன்மதன் ஸ்டைலில் நடிக்க இருக்கும் சிம்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி

அந்த வழக்குக்கான தீர்ப்பு இன்றளவும் வெளிவரவில்லை. 

இந்த நிலையில்  திடீரென நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இணைந்து வாழ முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

எது எப்படியோ ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் ராயன் திரைப்படத்துக்கு பிறகு தனுஷும் இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார்கள். 

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் தனுஷை போலவே இருப்பார்கள். நீங்கள் நிறைய வீடியோ கையில் பார்த்திருப்பீர்கள். 

இப்படிப்பட்ட நல்ல குடும்பத்தை பிரியாமல் மீண்டும் ஒன்று சேர்த்து வைத்த திரு ரஜினிகாந்த் அவர்களை கண்டிப்பாக பாராட்டி தான் ஆக வேண்டும்.

செவ்வாய், 22 அக்டோபர், 2024

மீண்டும் மன்மதன் ஸ்டைலில் லோக்கலாக களமிறங்கும் சிம்பு! Tamil Xpress

 தளபதி விஜய்யை வைத்து Greatest Of All Time (GOAT) படத்தை தயாரித்த AGS Entertainment நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பாக பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனுடன் Dragon என்கிற திரைப்படத்தை எடுத்து வருகிறார்கள். 

சமீபத்தில் Dragon படத்திலிருந்து போஸ்டர்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதே AGS Entertainment நிறுவனம் நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிப்பதற்கான அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது.

STR's Next Movie

அந்த போஸ்டரில் நடிகர் சிம்பு தனது மன்மதன் பட ஸ்டைலில் கையில் கைகுட்டை சுற்றிக்கொண்டு கை நிறைய கயிறு கட்டிக்கொண்டு லோக்கல் ஆக இருக்கும் புகைப்படம் வெளிவந்து சிம்பு ரசிகர்களை  ஆச்சரியத்திற்குள்ளாகியது.

இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து என்கிற இயக்குனர் தான் இயக்க உள்ளார். இவர் தான் AGS Entertainment நிறுவனம் தயாரிக்கும் பிரதீப் ரங்க நாதனின் டிராகன் படத்தின் இயக்குனர். அவரே நடிகர் சிம்புவை வைத்து புதிய படம் இயக்கி அதை Ags நிறுவனம் தயாரிப்பது ஆச்சரியமாக உள்ளது. 

எப்படியும் டிராகன் போல ஒரு நல்ல கதையை இருப்பதினால் தான் AGS நிறுவனம் அவரது அடுத்த கதையும் படமாக ஒத்துக் கொண்டு அதற்கு நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

விரைவில் இந்த படத்துக்கான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் நீ திரைப்படத்தின் போஸ்டர் மட்டும் வெளியிட்டு விட்டு சிலம்பரசன், கமல்ஹாசன் உடன் சேர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்கிற ஒரு திரைப்படத்தை இணை நடிகராக நடித்து முடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி படுதோல்வி இருந்தது. 

இந்த படத்தின் மூலம் கமல்ஹாசன் மணிரத்தினம் சிலம்பரசன் ஆகிய மூன்று பேரின் பெயரும் நாறடிக்கப்பட்டது. ஏ ஆர் ரகுமான் மட்டும்தான் முடிந்த அளவுக்கு இசையால் இந்த திரைப்படத்தைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவராலும் முடியவில்லை.

அதேசமயம் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்கிற திரைப்படத்தை எடுத்த அஸ்வத் மாரிமுத்துவின் டிராகன் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக மாறியது. இப்பொழுது மீண்டும் அஸ்வத் மாரிமுத்துடன் சிலம்பரசன் சேர்ந்து படம் நடிக்கப் போவதாக உள்ள அறிவிப்பால் அஸ்வத் மாரிமுத்து தான் சிலம்பரசன் காப்பாற்ற வேண்டும் என்று சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அடுத்தடுத்த அறிவிப்புகளை தெரிந்து கொள்ள நம்ம வலைதளத்துடன் உடனே இணைந்து கொள்ளுங்கள். 

திங்கள், 7 அக்டோபர், 2024

நடிகர் விஜய் குறித்து கவிஞர் வைரமுத்து சொன்ன அதிர்ச்சி தகவல்!

 இன்று காலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தளபதி விஜய் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். 

அதில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பது யாதெனில்,

தளபதி விஜய் நடித்த ஷாஜகான் படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுதி முடித்தேன்.

'மெல்லினமே' 'மின்னலைப் பிடித்து' 'அச்சச்சோ புன்னகை' ஆகிய பாடல்கள் இசை இலக்கியமாய் அமைந்தது கண்டு ஆனந்த ஊஞ்சலில் ஆடினேன்

ஓர் அதிகாலையில் ஒருகால் காருக்குள்ளும் மறுகால் தரையிலும் இருந்த பரபரப்பில் அந்தப் படத்தின் இயக்குனர் ரவி ஓடிவந்தார்

'படத்துக்கு இன்னொரு பாட்டு வேண்டும்' என்றார்.

எல்லாப் பாட்டும் முடிந்து விட்டதே; இனி என்ன பாட்டு' என்றேன்.

'எல்லாப் பாட்டும் நல்ல பாட்டாகவே இருக்கு கவிஞரே; ஒரே ஒரு குத்துப்பாட்டு வேண்டும்' என்றார்

(கூத்துப் பாட்டு என்பதுதான் மொழிச் சோம்பேறிகளால் குத்துப் பாட்டு என்றாகிவிட்டது)

தயங்கினேன்

'விஜய் சொல்லி அனுப்பினார்' என்றார்

கதாநாயகன் சொன்னபிறகு மறுக்க முடியவில்லை; எழுதிக் கொடுத்தேன்.

அரங்கம் சென்று பார்த்தால் இலக்கியப் பாடல்களுக்கு மௌனமாய் இருந்த கொட்டகை கூத்துப் பாடலுக்குக் குலுங்கியது

விஜய் கணக்கு தப்பவில்லை

இசைஇலக்கியம் இன்புறுவதற்கு; கூத்துப் பாட்டு கொண்டாடுவதற்கு

அந்தப் பாட்டு எந்தப் பாட்டு தெரியுமா?

'சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் கறுத்த கோழி மிளகுபோட்டு வறுத்து வச்சிருக்கேன்' 

என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது X ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஷாஜகான் படத்திற்குப் பிறகு நிறைய படங்கள் விஜய் நடித்திருந்தாலும் நீண்ட வருடங்கள் கழித்து இந்த அற்புதமான தகவலை கூறியிருக்கிறீர்கள் என்று விஜய் ரசிகர்கள் வைரமுத்துவை புகழ்ந்து வருகிறார்கள். 

அதேசமயம் இவர் எதுக்கு தேவையில்லாமல் இதை எல்லாம் பேசுகிறார் என்று ஒரு தரப்பினர் திட்டி வருகிறார்கள்.

வெள்ளி, 31 மே, 2024

மலையாளத்தில் 3 Blockbuster படங்கள்! Tamil Xpress

 இந்த 2024 வருடத்திற்கான தொடக்கத்திலேயே தமிழ் திரைப்படங்கள் அதிக அளவில் வெளியான நிலையில் மற்ற மொழி திரைப்படங்களும் வெளியாகி உள்ளது.

இதில் நிறைய திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பல நல்ல திரைப்படங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் மலையாளத்தில் காதலை அடிப்படையில் வெளியான பிரேமலு திரைப்படம்  நட்பை மையப்படுத்தி உருவான மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் நகைச்சுவையான ரவுடிசத்தை மையப்படுத்தி உருவான ஆவேசம் திரைப்படம் இதை மூன்றும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.


பிரேமலு திரைப்படத்தை நடிகர் பகத் பாசில்  தயாரித்து இருக்கிறார். பகத் பாசில் தயாரித்த திரைப்படமும் வெற்றி பெற்றது. அவர் நடித்த ஆவேசம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்தியாவின் தமிழகத்தில் கொடைக்கானலில் அமைந்துள்ள 2600 மீட்டர் உயரம் உள்ள மிகப்பெரிய குகை. ஆரம்பத்தில் டெவில்ஸ் கிச்சன் ( சாத்தானின் சமையலறை ) என்றழைக்கப்பட்ட இந்த குகையில் 1991 ஆம் ஆண்டில் கமல்ஹாசனின் குணா திரைப்படம் திரைப்படமாக்கப்பட்டது. அதன் பின்னர் தான் இந்த குகைக்கு குணா குகை என்று பெயர் வந்தது.

குணா குகையில் நடந்த உண்மையான நிகழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படமும் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

இப்படி மலையாள திரைப்படங்கள் வெளியாகி வசூலின் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் போது தமிழ் படங்களை அனைத்தும் தோல்வியும் முடிவாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.

தொடர்ச்சியாக தோல்வி படங்கள் தமிழில் நிறைய வெளிவந்துவிட்டது உதாரணமாக கூறப்போனால் இந்தியன் 2, சந்திரமுகி 2  போன்ற திரைப்படங்கள் அந்தப் படத்தின் முதல் பாக வெற்றியை உடைத்து சுக்குநூறாக்கி இரண்டாவது பாகம் என்ற பெயரில் எடுத்த திரைப்படங்கள் கெடுத்துவிட்டது.

லால் சலாம், தக் அஃப் இப்படியே பல பெரிய பெரிய முன்னாள் நடிகர் இந்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. மலையாளத் திரைப்படங்கள் கொடுக்கும் வெற்றியை உடன் தமிழ் திரைப்படங்கள் கொடுக்க முடியவில்லை என்பது மிகவும் வருத்தத்தக்க விஷயமாகும்.

மூன்றாவது குழந்தைக்கு தந்தை ஆகிறார் சிவகார்த்திகேயன்!

 நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அவர்கள் தற்போது மூன்றாவது குழந்தையை இந்த போவதாக சமூக வலைதளத்தில் தகவல்களை வெளியாகி வருகிறது. 

தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான முன்னணி நடிகர்களில் ஒருவராக  வலம் வரும் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய திரைப்படங்களை தன் கையில் வைத்திருக்கிறார்.

Raj Kamal Films International கமல்ஹாசன் தயாரிக்கும் 'அமரன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .தற்போது அந்த திரைப்படத்தின் டிரைலர்  ரிலீஸ் பேபி வெளியாக உள்ளது. விரைவில் இந்த திரைப்படத்தை திரையில் காணலாம். 

ராணுவ தலைமை வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது.

அமரன் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் கடுமையான உடற்பயிற்சி என் ஈடுபட்டு வருகிறார். உலகநாயகன் கமலஹாசன் தயாரிக்கும் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்ற இயக்குனர் இயக்குகிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் ஏற்கனவே உள்ள படங்களின் பெயரை புதிய படத்திற்கும் பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது .

இந்த நிலையில் ஏற்கனவே அமரன் என்ற பெயரில் நவரச நாயகன் கார்த்திக் அவரே தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் 1992 ஆண்டில் வெளியானது. அதே பெயரை தான் சிவகார்த்திகேயன் படத்திற்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி தளபதி விஜய் நடித்து வரும் Greatest Of All Time { GOAT } திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கியமான கேமியோ ( Cameo) கதாபாத்திரத்தில் வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.


கடைசியாக நெல்சன் இயக்கிய சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்திற்கு இசையமைத்த அனிருத் மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.


நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்கிற மகளும் குகன் தாஸ் என்கிற மகனும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிவகார்த்திகேயன் மூன்றாவது குழந்தைக்கு தந்தை ஆகிறார் என்கிற செய்தி காட்டுத்தீயாய் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

நிறைய பேர் இது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்பதும் அதை அவர்கள் தான் முன்வந்து தெரிவிக்க வேண்டும். நீங்கள் அதை பகிர வேண்டாம் என்று  கூறினார்கள்.

ஆனால் இந்த தகவல்  சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூகப்பக்கங்ளில் தான் முதன் முதலில் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினரின் மூன்றாவது குழந்தையை காண காத்திருப்போம். 

நன்றி மக்களே!


செவ்வாய், 30 ஏப்ரல், 2024

200 கோடியை தாண்டியதா எதற்கும் துணிந்தவன்? Tamil Xpress

 நடிப்பின் நாயகன் சூர்யா நடித்த ஜெய் பீம் சூட்டரை போன்று ஆகிய திரைப்படங்கள் அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியானது.

அவரது திரைப்படங்கள் எதுவும் இதுவரை மிகப்பெரிய அளவு வசூல் ஈட்டவில்லை. அவரது சிங்கம் திரைப்படம் முதல் முறையாக 100 கோடி வசூலை தாண்டியது.

அதற்குப் பிறகு வந்த ஜெய் பீம் சூரரைப் போன்று ஆகிய திரைப்படங்கள் போட்டியில் ரிலீஸ் ஆனது ஓடிடி ஸ்டார் என்று பல பேரால் நக்கலாக அழைக்கப்பட்டவர்.

அவரது ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்காருக்கு சென்று விருது பெறாமல் திரும்பி வந்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து சூரியன் அளித்த எதற்கும் தெரிந்தவன் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீசாகி 200 கோடியை தாண்டி உள்ளதாக வருகிறது.

தற்போது இவரது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் வசூல் ஆனது 200 கோடியை தாண்டி உள்ளதாக சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.

ஆனால் இதுவரை அதற்கான சான்றுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் இடம் திரைப்பட த்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது.

சமீபத்தில் நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் கதையில் ஏற்பட்ட சில மாற்றங்களால் நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தின் நடிப்பதே ஏற்புடையதல்லையும் அவரை படத்திலிருந்து நீக்கி விட்டார் இயக்குனர் பாலா.

இப்போது வணங்கான் திரைப்படத்தில் அவருக்கு பதிலாக இப்போது அருண் விஜய் நடிக்க போவதாக அறிவிப்புகள் வெளியாகி தற்போது படப்பிடிப்புப் பணிகள் நடந்து முடிய உள்ளது.

இந்த வருடத்தில் அவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் பொருட்செலவில் தயாராகி வரும் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய Pan இந்தியன் திரைப்படம் வாங்க வெளியாக உள்ளது.

திரைப்படம் ஹிந்தி தெலுங்கு கன்னடம் தமிழ் மலையாளம் ஐந்து மொழிகளில் ரிலீசாக உள்ளது. சூர்யா ரசிகர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இந்த வருடத்திற்குள் என்ன செய்யப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளது.

சனி, 20 ஏப்ரல், 2024

காயத்துடன் ஓட்டு போட வந்த விஜய்! Tamil Xpress

 ஏப்ரல் 19 2024 நடந்த ஜனநாயக நாடாளுமன்ற தேர்தலில் இந்திய குடிமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார்கள். 

வெளிநாடுகளில் இருந்தவர்கள் சொந்த ஊருக்கு கிளம்பி வந்து வாக்களித்தார்கள். மேலும் பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் வந்து அவர்களது வாக்குகளை பதிவு செய்தார்கள்.

நடிகர் விஜய் ஓட்டு போட வருவார் என்று அவரது ரசிகர்கள் காலில் இருந்து அவர் வீட்டின் முன் நீண்ட நேரமாக  காத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் எதிர்பார்த்தது போலவே தளபதி விஜய்யும் ஓட்டு போட காரில் வந்தார்.

2021 கொரோனா காலகட்டத்தில் நடந்த தமிழ்நாடு மாநில தேர்தலில்  சைக்கிளில் ஓட்டு போட வந்த விஜய்யின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் காரில் வந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று புரிந்து கொண்டார்கள்.

அதன்படியே வாக்கு செலுத்தும் மையத்துக்கு வந்த விஜய்  மிகவும் சோர்வுடன் தலையில் காயத்துடனும் கையில் காயத்துடனும் வந்திருந்தார்.

அவரை பார்க்கக் கூடிவிட்டார் ரசிகர்களின் கூட்டத்திலிருந்து முட்டி மோதி வாக்குமூலத்திற்குள் நுழைந்து தனது வாழ்க்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார்.

தளபதி விஜய் தற்போது 'GOAT' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடியும் நிலையில் உள்ளதால் படப்பிடிப்பின் போது விஜய்க்கு  ஏற்பட்ட காயமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

விஜய் தனது ஒவ்வொரு படத்திலும் தானே பாடி தானே நடனமாடி டுப் போடாமல் அதிரடி சண்டை காட்சிகள் செய்து அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு படத்தில் படப்பிடிக்கும் போது இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று விஜய் ரசிகர்கள் வெங்கட் பிரபுவை சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.