மலையாளத்தில் 3 Blockbuster படங்கள்! Tamil Xpress

 இந்த 2024 வருடத்திற்கான தொடக்கத்திலேயே தமிழ் திரைப்படங்கள் அதிக அளவில் வெளியான நிலையில் மற்ற மொழி திரைப்படங்களும் வெளியாகி உள்ளது.

இதில் நிறைய திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பல நல்ல திரைப்படங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் மலையாளத்தில் காதலை அடிப்படையில் வெளியான பிரேமலு திரைப்படம்  நட்பை மையப்படுத்தி உருவான மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் நகைச்சுவையான ரவுடிசத்தை மையப்படுத்தி உருவான ஆவேசம் திரைப்படம் இதை மூன்றும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.


 பிரேமலு திரைப்படத்தை நடிகர் பகத் பாசில்  தயாரித்து இருக்கிறார். பகத் பாசில் தயாரித்த திரைப்படமும் வெற்றி பெற்றது. அவர் நடித்த ஆவேசம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்தியாவின் தமிழகத்தில் கொடைக்கானலில் அமைந்துள்ள 2600 மீட்டர் உயரம் உள்ள மிகப்பெரிய குகை. ஆரம்பத்தில் டெவில்ஸ் கிச்சன் ( சாத்தானின் சமையலறை ) என்றழைக்கப்பட்ட இந்த குகையில் 1991 ஆம் ஆண்டில் கமல்ஹாசனின் குணா திரைப்படம் திரைப்படமாக்கப்பட்டது. அதன் பின்னர் தான் இந்த குகைக்கு குணா குகை என்று பெயர் வந்தது.

குணா குகையில் நடந்த உண்மையான நிகழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படமும் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்