News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜூலை, 2025

வளர்ந்து கொண்டே போகும் வீட்டு வாடகை! வாயை பிளக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது

சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வீட்டு வாடகைகள் முந்தைய ஆண்டுகளை விட நடப்பு ஆண்டுகளில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மல மல வென உயர்ந்துள்ளது. நாம் சம்பாதிப்பது எல்லாம் வீட்டு வாடகைக்கு போய்விடும் என்ற எண்ணம் ஏற்படும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த இரண்டு நகரங்களிலுமே வேலை வாய்ப்புகள் மற்றும் கம்பெனிகள் அதிகமாக இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாகவே வீட்டு வாடகை ஆனது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த இரண்டு நகரங்களிலும் வீட்டு வாடகை ஆனது முற்றிலும் மாறுபடுகின்றன.புறநகர் பகுதிகளுக்கு வீட்டு வாடகை தனியாக மற்றும் பெருநகர் பகுதிகளில் அதற்கேற்றபடி தனித்தனியாக வீட்டு வாடகை எனது மாறுபடுகின்றன. 

பொதுவாக சிறிய வீடுகள் அதற்கேற்ற வாடகை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்றபடி அதற்கு ஒரு வாடகை என தனித்தனியாக உள்ளது. நாம் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள சராசரி வாடகைகளை பற்றிய இந்த பதிவில் முழுவதும் காண்போம்! 

முதலில் சென்னையில் உள்ள வாடகை நிலவரத்தை பற்றி நாம் முழுவதும் பார்ப்போம்! இந்தப் பதிவில் சராசரி வாடகை நிலவரத்தை பற்றி பார்ப்போம்! 

  • 1BHK- ₹6000-₹15000 வரை 
  • 2BHK- ₹12000-25000 வரை 
  • 3BHK-₹20000-40000 வரை 

பிரபலமான பகுதியில் மாறுபடுகின்றன:

அண்ணா நகர்,வேளச்சேரி,நுங்கம்பாக்கம்,அடையார் போன்ற சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் வாடகை மிகவும் அதிகமாக உள்ளது. நீங்கள் தங்கும் பொழுது அதிக அளவு சம்பாதிக்க கூடிய ஒரு நபராக இருந்தால் நீங்கள் இந்த பகுதியில் போய் வாடகைக்கு வீடு இருக்கலாம். சென்னையில் அட்வான்ஸ் தொகையானது மூன்று மாதங்களுக்கு நீங்கள் கொடுப்பது போல் இருக்கும்.

இது போலவே சென்னையின் புறநகர் பகுதிகளில் வாடகை சிறிதளவு குறைவாக இருக்கும். சென்னையில் வாடகை வீடுகள் அதிக அளவில் இருந்தாலும் நல்ல வாடகை வீடு வேண்டுமென்றால் நீங்கள் அதற்கு ஏற்ற வாடகை கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு அவர்கள் வாடகைக்கு வீடு கொடுப்பார்கள்.

சென்னையில் உள்ள சிறிய வீடுகள்: 

சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள வீடுகள் ஓரளவிற்கு வாடகை குறைவாக இருக்கும் எனவே மலிவான விலையில் வாடகை வேண்டும் என்பவர்கள் சென்னையில் புறநகர் பகுதிகளில் வாடகை வீடுகள் பார்ப்பது மிகவும் நல்லது. இவ்வகை வாடகைகள் அவர்களுக்கு ஓரளவிற்கு ஏற்றவாறு கொண்டு இருக்கும். 

அடுக்குமாடி குடியிருப்புகள்:

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் படுக்கையறைக்கு ஏற்றார் போல் வாடகை மாறுபடும். இங்கு பராமரிப்பு மிகவும் சரியாக இருக்கும் நீங்கள் இதற்கு வாடகை ஒரு படுக்கையறை கொண்ட அறைகளுக்கு தனியாகவும் இரண்டு படுகைகளை கொண்ட அறைகளுக்கு தனியாகவும் மாறுபடும். 

தனி வீடுகள்: 

சென்னையில் தனி வீடுகள் வேண்டும் என்றாலும் கிடைக்கும் நீங்க வீடுகளில் அளவை பொறுத்து வாடகையானது வெவ்வேறாக இருக்கும் எனவே தனி வீடுகளும் இங்கு கிடைக்கின்றன.

பெங்களூரில் உள்ள சராசரி வாடகை நிலவரம்: 

  • 1BHK- ₹7000-₹18000 வரை 
  • 2BHK- ₹15000-29000 வரை 
  • 3BHK-₹30000-42000 வரை 

பிரபல பகுதிகளில்: 

ஒயிட் ஃபீல்ட்,மாரத்த ஹள்ளி,சர்ஜாபூர் சாலை,ஹெப்பல்,இந்திரா நகர் போன்ற முக்கிய பகுதிகளில் வாடகை மிகவும் அதிகமாக இருக்கும். நீங்கள் இந்த பகுதிகளில் வாடகை வீடு வேண்டும் என்றால் அதிக அளவு சம்பாதித்தால் மட்டுமே இங்கு தங்க உங்களுக்கு ஏற்றபடி இருக்கும் இது வாடகை வீடுகள் மிகவும் சிறப்பாகவும் கிடைக்கும்.

பெங்களூரில் பெரும்பாலான இடங்களில் வாடகை குறைவாகவும் பெரும்பாலான இடங்களில் மிகவும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது. இங்கு வேலைவாய்ப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் அதிகமாகவும் வேலை இல்லாத இடங்களில் மிகக் குறைவாகவும் வாடகை வீடுகள் கிடைக்கின்றன. இந்த பகுதிகளில் அட்வான்ஸ் தொகை இரண்டு மாதங்கள் கொடுக்கலாம் என சட்ட வரம்புகளும் உள்ளன.

சென்னை மற்றும் பெங்களூரு இந்த இரண்டு பகுதிகளிலும் உங்களுக்கு தனியாக அல்லது குடும்பத்துடன் தங்குவதற்கு ஏற்றார் போல் நீங்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். சென்னையில் உள்ள பகுதிகளில் நீங்கள் தனியாக வீடு கட்டுவதற்கு இடமும் அதிக அளவில் விற்பனைக்கு இருக்கின்றன. இங்கு அதிக அளவில் தமிழ் சினிமா பிரபலங்கள் வசிக்கும் இடங்களும் இருக்கின்றன. மேலும் பல்வேறு வகையான வேலை வாய்ப்பு கம்பெனிகளும் மற்றும் தனியார் நிறுவனங்களும் இருக்கின்றன.

ஒப்பந்தம்:

  • நீங்கள் இருநகரங்களிலுமே வீடுகளை வாடகை எடுக்கும் போது நீங்கள் வீட்டின் உரிமையாளரிடம் ஏழுத்துப்பூர்வமான படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • அந்தப் படிவத்தில் வீட்டின் வாடகை தொகை மின்சார தொகை மற்றும் ஒப்பந்த தொகை தண்ணீர் தொகையில் என அனைத்தும் அதில் குறிப்பிட்டு இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் அவர்கள் அடிக்கடி மாற்றிக்கொண்ட இருப்பார்கள்.
  • நீங்கள் வீட்டின் உரிமையாளரிடம் மிகவும் அன்பாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும்.

சென்னை மற்றும் பெங்களூரு இரண்டு நகரங்களிலும் அதிக அளவு சுற்றுலா இடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவை இருக்கின்றன. நீங்கள் விடுமுறை நாட்களில் அதிக அளவு மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏற்றபடி இரண்டு நகரங்களிலுமே சுற்றுலா தளங்கள் கோவில்கள் மற்றும் பல்வேறு வகையான திரு விழாக்கள் கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றன. 

நீங்கள் பெரிய பெரிய மாலுக்கு சென்று உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம் ஏதாவது ஒரு பண்டிகை வந்தால் இங்கு மிகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. நீங்கள் கிராமத்தில் இருந்து நகரத்தில் வாழ விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் அங்கு அதிக அளவு இயற்கை பகுதிகளை காண முடியாது இருந்தாலும் அதிக அளவு மக்கள் இந்தப் பகுதிகளில் சந்தோஷமாகவும் அழகாகவும் வாழ்ந்து வருகின்றனர். 

உங்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் உடைகள் அனைத்தும் இங்கு குறைவான விலையிலும் அதிகமான விளைவிலும் இரண்டு நிலையிலும் உங்களுக்கு ஏற்றபடி நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

ஆடி மாதத்தில் கலைகட்டும் ஆடு கோழி வியாபாரம்!

தற்போது தமிழ் மாதத்தில் ஆடி மாதம் பிறந்துள்ளதால் மக்கள் அனைவரும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் விட்டு நேர்த்திக் கடன் செய்து வழிபட்டு வருகிறார்கள். இந்த ஆடி மாதம் முழுக்கவே நிறைய பேர் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து பூஜை செய்து தலைமுடி காணிக்கை கொடுத்து மொட்டை அடித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடுத் திரும்புகிறார்கள்.

தினமும் அசைவ உணவுகள் இல்லாமல் ஆடி மாதம் செல்லாது. அப்படி இருக்கையில் ஆடு கோழி வளர்ப்பவர்கள் இந்த மாதம் முழுக்கவே கொண்டாட்டம்தான். ஜோராக வியாபாரம் பிச்சிக்கிட்டு போகும்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறும். இதில் ஆடு கோழி மாடுகள் என அதிகமாக வியாபாரத்திற்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. ஆடி மாதம் பிறந்த காரணத்தினால் இந்த மாதம் முழுக்கவே வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.

திருவண்ணாமலை உழவர் சந்தையில் திருவண்ணாமலை மக்கள் மட்டுமல்லாமல் செங்கம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்கள் நகர்புறங்களை வசிப்பவர்கள் மற்றும் வெளியூரில் இருந்து வருபவர்கள் முதலானோர் உள்பட நிறைய பேர் ஆடு கோழிகளை வாங்கி செல்கிறார்கள்.

ஆடி மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் மக்கள் தங்களுக்கு குலதெய்வ கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செய்வது மட்டுமல்லாமல் காதணி விழா நடைத்துவார்கள்.. இந்த காதணி விழாவுக்கு பிரியாணி அல்லது அசைவ உணவுகள் இல்லாமல் இருக்காது. அப்படி இருக்கும்போது அதற்கும் சேர்த்து ஆடு கோழி நிறைய வியாபாரம் நடைபெறுவதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.

முக்கியமாக காதணி விழாவிற்கு நிறைய பேர் கோழிகளை தான் பிரியாணி செய்வதற்கும் கறி குழம்பு வைப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். மிகவும் குறைந்த நபர்கள் மட்டும்தான் ஆடுகளை காதணி விழாவிற்கு விருந்தாக படைக்கிறார்கள். 

எல்லோரும் ஆடி மாதத்திற்குள் காது குத்தாதவர்கள் காது குத்தி தடபுடலாக மக்களுக்கு சாப்பாடு போட்டு விட வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த மாதம் முழுவது அங்கங்கு காது குத்து விழாக்கள் நடைபெறும். 

யாரெல்லாம் காது குத்துவார்கள்? 

ஒரு குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் பெற்றவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளை பற்றவர்கள் தங்களுக்கு இந்த பிள்ளைகளை போதும் என்று முடிவெடுத்த பிறகு அவர்களுக்கு இரண்டு வயதுக்கு மேல் ஆன பிறகு ஊரை எல்லாம் அழைத்து தடபுடலாக அசைவ உணவை பரிமாறி காதுக்குத்து விழா நடத்துவார்கள். 

வசதி வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் குலதெய்வ கோவிலில் குழந்தைகளுடன் சேர்த்து பெற்றோர்களும் மொட்டை அடித்துவிட்டு பிறகு ஒரு பெரிய மண்டபத்தில் நிறைய பேரை அழைத்து வெகு சிறப்பாக இந்த விழாவை நடத்துவார்கள்.

வசதி வாய்ப்பில்லாதவர்கள் எளிமையாக காதணி விழாவை தங்கள் குலதெய்வ கோவிலில் தங்கள் குழந்தைகளுடன் தாங்களும் மொட்டை அடித்துக்கொண்டு தங்களுக்கு முக்கியமான, தெரிந்த, சில பல உறவுகளை மட்டும் அழைத்து குலதெய்வ கோவிலிலே காதணி விழா நடத்தி முடிப்பார்கள்.

ஆனால் எல்லோருமே ஆடி மாதத்தில் மட்டும் தான் காதுக் குத்துவார்கள். ஆடி மாதம் முடிந்து விட்டால் அதற்குப் பிறகு தங்கள் குழந்தைகளுக்கு யாருமே காது குத்த மாட்டார்கள். காது குத்தும் நிகழ்ச்சி ஆண், பெண் இரண்டு குழந்தைங்களுக்கும் சேர்த்து தான் நடைபெறும்.

ஆனால் வளர வளர பெண் குழந்தைகள் அந்த குத்திய காதுகளை பராமரித்து நகை போடும் அளவிற்கு காதை பக்குவப்படுத்துவார்கள். ஆனால் ஆண் குழந்தைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு குத்திய காதுகள் துருத்தி திரும்ப துளைகள் மூடிக்கொள்ளும்.

திருவண்ணாமலை உழவர் சந்தை நிலவரம் :

திருவண்ணாமலையில் மாவட்ட உழவர் சந்தையில் மட்டுமே நேற்று முன்தினம் 10 லட்சம் பேருக்கு மேல் வியாபாரம் நடைபெற்றதாக ஒட்டுமொத்த வியாபார சங்கத்தினர் கூறுகின்றனர். ஆடி மாதம் என்பதால் ஆடு கோழிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் உட்பட விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

உங்கள் பகுதியில் எந்த கோவில் சிறப்பாக மக்களால் கொண்டாடப்படுகிறது என்று நமது கருத்துப் பக்கத்தில் தெரிவிக்கவும். மேலும் பல நல்ல பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதள பக்கத்தில் பின்தொடரவும்.

நன்றி வணக்கம்!

தங்க விலை ₹70 ஆயிரத்தை நெருங்கியது

தங்கம் விலை இப்படியே உயர்ந்து கொண்டே போனால் என்ன செய்வது? இந்த பேச்சு தான் கடந்த சில மாதங்களாக எங்கும் ஒலித்து வருகிறது.

நாம் அனைவருக்கும் தங்கம் என்பது அத்தியாவசிய தேவையான மாறிவிட்டது. அதாவது சேமிப்பை தங்கம் மூலமாகத்தான் நிறைய பேருக்கு செய்கிறார்கள். இது மட்டும் அல்லாமல் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அங்க நகைகள் இல்லாமல் அந்த விசேஷமே இல்லை. 

எந்த ஒரு திருமணமும் தங்கம் இல்லாமல் நடப்பதில்லை; தாலியில் தங்கம், கழுத்தில் தங்கம், கையில் தங்கம் என எங்கு பார்த்தாலுமே நகைகள் தங்கம் சார்ந்த பொருட்கள் இல்லாமல் எந்த விசேஷமும் நடப்பதில்லை. அப்படி இருக்கையில் தங்கம் விலை ஏறினால் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரம் மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும்.

கடந்த ஆண்டு 2024 மார்ச் மாதம் ஒரு பவுன் ரூபாய் 50,000 என்ற உச்சத்தை தங்க விலை எட்டியது அப்போதே இவ்வளவு விலை என பேசப்படும் நிலையில் அதோடு நிக்காமல் மேலும் விலை அதிகரித்துள்ளது. 

ஒவ்வொரு நாளும் புதிய விலை உயர்வு என்ற அடிப்படையில் வரலாறு காணாத புதிய உச்சத்தை கடந்த கடந்து வந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டுமே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டுமே விலை உயராமல் ஒரு பவுன் ரூபாய் 55 ஆயிரம் முதல் ரூபாய் 56 ஆயிரம் வரையில் நிறையாக இருந்தது. 

அதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இருந்து மீண்டும் ஏற்றத்தை நோக்கி தங்கம்  விலை பயணித்தது. அதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி ஒரு பவுன் ரூபாய் 60 ஆயிரம் என்ற நிலையையும் அடைந்தது. 

அதனை அடுத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான நாட்களில் விலை உயர்வே இருந்தது. இதனால் கடந்த மாதம் மார்ச் 14ஆம் தேதி ஒரு பவுன் ரூபாய் 65 ஆயிரத்தை தொட்டது. 

இதற்குப் பிறகாவது விலை குறையுமா என்ற கேள்வி அனைவரிடமும் இருந்த நிலையில் இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை யாரும் கடிவாளம் போட முடியாது உச்சத்திலேயே தொடர்ந்து பயணிக்கும் என சொல்லப்படுகிறது. 

தங்க விலை உயர்வுக்கு என்ன காரணம்? 

அதைக் ஏற்றது போல தங்கம் விலை அதிரடியாக உயருவதும் சற்று இறங்குவதுமாகவே இருக்கிறது அமெரிக்க ஜனாதிபதி ஏற்றம் பரஸ்பர வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வந்த நேரத்தில் தங்கம் விலை கடந்த நாலாம் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரை குறைந்து வருகிறது. 

பரஸ்பர வரி விதிப்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்ததால் பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

இதனை தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது இதனால் அதன் விலை ராக்கெட் வேகத்தில் கிடுகிடு என உயர தொடங்கி இருக்கிறது. 

அதன்படி கடந்த மூன்று நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது அதாவது கடந்த ஒன்பதாம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் எட்டு கிராமுக்கு ரூபாய் 155 பவுனுக்கு ரூபாய் 1450 உயர்ந்துள்ளது அன்றைய தினம் ஒரு கிராம் பவுன் ரூபாய் 67,250 விற்பனை ஆனது. 

நேற்று முன்தினம் கிராமுக்கு ரூபாய் 150 பவுனுக்கு ரூபாய் 1200 உயர்ந்து ஒரு பவுன் ரூபாய் 68,450 க்கு வியாபாரம் ஆனது இதுதான் இதுவரை தங்கத்தின் உச்சபட்ச விலை ஆக எடுததது ஆனால் அதிரடியாக நேற்று கிராமுக்கு ரூ.185 பவுனுக்கு ரூபாய் 1480 பேருந்து ஒரு கிராம் ரூபாய் 845க்கும் ஒரு பவுன் ரூபாய் 69 ஆயிரத்து 960 க்கும் விற்பனை செய்யப்பட்டது இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்துவிட்டது. 

அதாவது ஒரு பவுன் ரூபா 70 ஆயிரத்தை நெருங்கி விட்டது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூபாய் 520 பவுனுக்கு ரூபாய் 4560-ம் அதிகரித்துள்ளது இதே வேகத்தில் சென்றால் தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாய் 80 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

குறிப்பாக, நமது மக்கள் பயன்படுத்துவது 22 கேரட் தங்கம் மட்டும்தான்; 24 கேரட் தங்கம் சுத்தமான தங்கம் என்று கூறினாலும் அந்த 24 கேரட் தங்கத்தை நகைகள் செய்ய பயன்படுத்த முடியாது. அதனுடன் வேறு சில உலோகங்களையும் கலந்து தான் தங்க நகைகள் செய்யப்படுகிறது. ஆதலால் எந்த தங்க நகைகளும் சுத்தமான தங்கத்தை முழுவதுமாக பயன்படுத்தி தயாரிக்கப்படுவதில்லை.

இனி வரும் காலங்களிலும் தங்கம் விலை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆதலால் தங்கம் சேமிப்பு என்பது மிகவும் அவசியமான தேவையாக மக்களுக்கு இருக்கிறது.