இந்திய அரசியலமைப்பு:
இந்திய அரசியலமைப்பு என்பது ஓர் எழுதப்பட்ட அரசியல் அமைப்பு மற்றும் என்று உலகில் உள்ள நீண்ட அரசமைப்பு சட்டங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது இது ஒரு நீண்ட விளக்கமான விரிவான ஆவணமாக உள்ளது.
இந்திய அரசியலமைப்பிற்கு 1935 ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம் முன்மாதிரியாக அமைந்துள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசமைப்புச் சட்டத்தின் பல எழுதப் பட மரபு நெறிகள் எழுத்து வடிவில் நமது சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க கூட்டாட்சி முறை அரசமைப்புச் சட்டத்தின் மாநிலங்களுக்கு என்று தனித்தனியாக அரசமைப்புச் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவின் மையம் மற்றும் மாநிலங்களுக்கு பொருந்துமாறு ஒரே அரசமைப்பு சட்டம் தான் இருக்கின்றது.
எனவே இந்தியா ஒரு பரந்த நாடாகும். பல்வேறு இனங்களும் பல்வேறு வகுப்புகளும் உள்ளதினால் அனைவரும் உரிமைகளும் பாதுகாக்க வேண்டிய கடமையாக இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அரசிற்கும் குடிமக்களுக்கும் வழிகாட்டு நெறிகளும் அடிப்படை கடமைகளும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
நாடாளுமன்ற அமைப்பு கொண்ட அரசு:
மையத்திலும் பல மாநிலங்களிலும் நாடாளுமன்ற அமைப்பு கொண்ட அரசினை இந்திய அரசியலமைப்பு சட்டம் தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கான காரணங்கள் பல இருக்கும். ஏற்கனவே இவ்வமைப்பு முறை நடைமுறையில் இருந்து வந்ததினால் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானது.
சட்டமன்றங்களுக்கு அமைச்சர்களை பொறுப்பாக்குகிறது. இந்திய குடியரசுத் தலைவர் இங்கிலாந்து ராணியை போன்ற அரசமைப்பு ஆட்சியாளர் ஆவார்.ஆனால் உண்மையான நிர்வாகம் அதிகாரம் பிரதம மந்திரி தலைவராகக் கொண்ட அமைச்சர் அவை செலுத்தப்படுகிறது .இத்தகைய ஆட்சி மொழியானது இங்கிலாந்து ஆட்சி முறையில் இருந்து பல வகையில் வேறுபடுகிறது.
இங்கிலாந்தில் இருப்பது ஒற்றை ஆட்சி முறையாகும்.ஆனால் இந்தியாவிலோ பிறர் அல்லது கூட்டாட்சி முறை நடைபெறுகிறது. இங்கிலாந்து அரசமைப்புச் சட்டம் எழுதப்படாத ஒன்றாகும். ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டமும் அடிப்படை உரிமைகளைக் கொண்டது.இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொதுவாக குடியரசுத் தலைவர் அமைப்பு அரசு ஒன்றில் காணப்படும் இயல்புகளை கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் செய்தியை அனுப்புதல் பண மசோதா அல்லாத மசோதாக்களை நாடாளுமன்றத்தின் மறுகவனத்திற்கு அனுப்புதல் போன்றவை குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படுகின்றன.
அடிப்படை உரிமைகள்:
இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு அடிப்படை உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கின்றனர் சமத்துவத்திற்கான உரிமையை சுதந்திரத்திற்கான உரிமை சுரண்டப்படுதலுக்கு எதிரான உரிமை சமய உரிமை கலாச்சார உரிமை மற்றும் கல்வி உரிமை அரசமைப்பு தீர்வுகளுக்கான உரிமை இத்தகைய உரிமைகள் வழங்கக்கூடிய உரிமைகள் ஆகும் அடிப்படை உரிமைக்கான மீறுதல் இருக்கும்போது பொருத்தமான நீதி பேராணையுடன் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகும் உரிமையும் உண்டு உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலனாக திகழ்ந்தனர் அதுப வயது வந்த அனைவருக்கும் வாக்களிப்போம் உரிமை இருக்கின்றது.
வாக்களிக்க உரிமை:
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வாக்களிப்பு உரிமைக்கு அரசமைப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது வயது வந்தவர் அனைவரும் இனம் மதம் மொழி என்ற பாகுபாடு இன்றி வாக்களிக்கிறான் 18 வயது நிரம்பிய வாக்களிக்க உரிமை இருக்கின்றன மற்ற நாடுகளில் படிப்படியாக கொடுக்கப்பட்டுள்ள வாக்குரிமை இந்தியாவில் உடனே கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. சுதந்திரமான பாரபட்சமற்ற நியாயமான தேர்தல்களை நடத்த தன்னுரிமை கொண்ட தேர்தல் ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பானது இந்தியாவின் அதிகாரப்பூர்வமான சட்ட ஆவணம் நிர்வாகம் நாட்டின் சட்ட ஆவணங்கள் மற்றும் குடிமக்களின் உரிமை குறித்த ஒரு கட்டமைப்பு ஆகும். இது 1949 நவம்பர் 26 அன்று ஏற்கப்பட்டு 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது இதனாலே ஜனவரி 26 அன்று இந்தியாவின் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முக்கிய அம்சங்கள்:
இந்திய அரசியலமைப்பானது முழு எழுத்து வடிவம் கொண்ட உலகின் மிக நீண்ட அரசியலமைப்பு கொண்ட நாடாகும்.
448 பிரிவுகள் 12 அட்டவணைகள் 100க்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொண்ட ஒரு அரசியல் அமைப்பு ஆகும்.
உரிமை சமத்துவம் மத சுதந்திரம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை அடிப்படை உரிமைகளாகும். சுற்றுச்சூழலை பாதுகாத்தல் அறிவை வளர்த்தல் நாட்டை பாதுகாத்தல் போன்றவை நமது அடிப்படை கடமைகளாகும்.
இந்திய அரசியலமைப்பானது மூன்று கிளைகளை உள்ளடக்கியது. கூட்டாட்சி முறையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகாரங்களை பகிர்ந்து கொள்கின்றன.
0 கருத்துகள்