இந்தியாவில் '8 மணி நேர வேலை' என்ற சட்டம் இருக்கிறது. அதன்படி ஒரு நாளின் 24 மணி நேரத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.
- 8 மணி நேரம் வேலை
- 8 மணி நேரம் ஓய்வு
- 8 மணி நேரம் உறக்கம்.
ஓய்வு என்றால் நிம்மதியாக தூங்குவது தானே ஓய்வு; நீங்கள் என்ன புதிதாக ஏதோ ஒன்றை கூறுகிறீர்கள் என்று கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு விளக்கமாக சொல்கிறேன்.
அதாவது இங்கு ஓய்வு என்பது ஓய்வுக்காக ஒதுக்கப்படும் 8 மணி நேரம் குடும்பத்துடன் நேரம் செலவிட மற்றும் விருப்பமான வேலைகளை செய்ய ஒதுக்கப்பட்டதாகும்.
எனவே அந்த நேரத்தில் வேலை செய்யாமல், தனிப்பட்ட ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.
நிறைய பேர் இப்படி தான் வேலை வேலை என்று குடும்பத்தையும் உடல் நலத்தையும் பார்க்காமல் சுற்றி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறானது.
நிறுவனங்கள், மனிதர்களை மனிதர்களாக கருதாமல் இயந்திரங்கள் போல நடத்தும் நிலைமையை மாற்ற அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்போதெல்லாம் வேலை என்பது பகல் நேர வேலை [ Day Shift ], இரவு நேர வேலை [ Night Shift ] என்று இரண்டு பகுதியாக பிரித்து இருக்கிறார்கள்.
இதையே தற்போது நவீனமாக பகுதி நேர வேலை [ Part Time Job ], முழு நேர வேலை [ Full Time Job ] என்று செய்து வருகிறார்கள்.
நிறைய பேர் பகல் நேரத்தில் வேலை செய்கிறார்கள். அது சரிதான். ஆனால் இரவு நேரத்திலும் தொடர்ந்து ஓய்வே இல்லாமல் வேலை செய்வது தான் தவறானது.
இதனால் தான் பஸ் ஓட்டுனர்கள் மற்றும் இரவு நேர வேலையாளர்கள் பகல் நேரத்தில் தூங்கி எழுந்து இரவில் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய கிளம்பி விடுகிறார்கள்.
அதேபோல பகல் நேர வேலையாளர்கள் பகல் முழுவதும் வேலை செய்து இரவு நேரத்தில் வந்து தூங்கி ஓய்வெடுக்கிறார்கள். இதுதான் தற்போது கடைப்பிடித்து வரும் பணியாளர்களின் வழக்கம்.
0 கருத்துகள்